Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சக்கை போடு போடும் கரப்பான்பூச்சி பால்... பசும்பாலைவிட 4 மடங்கு புரதம் அதிகமாம்...
பூச்சியின் பால் அல்லது எண்டோமில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள். இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன.

பசிபிக் பீட்டில் கரப்பான் பூச்சிகள் சிறந்த ஊட்டச்சத்து நிரப்பப்பட்ட மில்க் கிரிஸ்டல்ஸ் ஆகும். 2016 ல் ஒரு அறிக்கையின்படி இது மனிதர்களுக்கும் நன்மையளிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கரப்பான்பூச்சியின் பால்
பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூச்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகெங்கிலும் உள்ள மக்களின் புரோட்டீன் தேவைக்காக நுகரப்படுகிறது. இது பல சகாப்தங்களாக வழக்கத்திலுள்ளது.
1900--க்கும் மேற்பட்ட பூச்சிகள் உலகம் முழுவதும் மக்களால் உண்ணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு 2013 ஆம் ஆண்டில் அறிவித்தது. நம்புவதற்கு சற்று கடினம் இல்லையா? ஆனால் மக்கள் பூச்சிகளை உட்கொள்வதன் முக்கிய காரணம் அதிலுள்ள அதிகளவிலான ஊட்டச்சத்து சுகாதார நலன்களேயாகும்.

புரதம் நிறைந்தது
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, ஒருமுறை அவரது குழந்தைகள் சிற்றுண்டிக்கு டோரிடோஸ் போன்ற மிருதுவான பூச்சிகளை விரும்பி எடுத்துக்கொள்வதாக பகிர்ந்துள்ளார்.சில பூச்சிகள் அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் 80 சதவிகிதம் புரதங்களைக் கொண்டுள்ளன. இது மற்ற விலங்கு ப்ரோட்டீன்களை விட மிக அதிகம்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் பூச்சிகளில் நிறைந்துள்ளன. மேலும் இதிலுள்ள புரதம் எளிதில் செரிக்கிறது என்பது சிறப்பு.

பயன்கள்?
காக்ரோச் மில்க் பவுடரானது புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி 12 இன் மிகச் சிறந்த அளவில் கொண்டுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பூச்சிகள் உருவாகுவதற்கு குறைவான உணவு, குறைவான நிலம், குறைவான ஆற்றல் மற்றும் குறைவான நீர் மட்டுமே தேவை என்பதால் பூச்சிகள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் இவை சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுக்களையும் ஏற்படுத்துவதில்லை மற்றும் எந்தவித பூச்சிக்கொல்லி மருந்துகளும் கலப்பதில்லை என்னும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன.
பவுடர் தேவையான அளவு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற நல்ல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. 3-அவுன்ஸ் உலர்ந்த கம்பளிப்பூச்சி 50 கிராம் புரதங்களைக் கொண்டிருக்கிறது, இது ஒரு கோழியின் மார்பகத்தை அல்லது ஒரு வான்கோழியைவிட அதிகமாகும். இவை மோனோஅன்சாச்சுரெட் கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டுள்ளன.

பூச்சி உணவுகள்
Wageningen பல்கலைக்கழகத்தின் டச்சு ஆய்வாளர்கள் 1400 க்கும் மேற்பட்ட வகையான பூச்சிகள் சாப்பிடக்கூடியவையென்று கூறியுள்ளனர். இதில் வெட்டுக்கிளிகள், வண்டுகள், ஈக்கள், தேனீக்கள், அந்துப்பூச்சிகள், எறும்புகள், சிசாதாக்கள், நாவல்கள், கரப்பான் பூச்சி, புழுக்கள், கேட்டர் பில்லர், துர்நாற்றப் புழுக்கள் மற்றும் காடிடாய்டுகள் ஆகியவை அடங்கும். தாய்லாந்து மற்றும் மெக்ஸிகோவில் பூச்சிகள் நீண்ட காலமாக உணவின் மெனுவில் உள்ளன. அவர்கள் இவற்றை ஒரு சிற்றுண்டியாக அனுபவித்து உண்கிறார்கள்.

கரப்பான் பூச்சியின் பாலை எவ்வாறு எடுப்பது?
பெண் பசுபிக் பீட்டில் காக்ரோச் அடர்த்தியான புரோட்டீன்- திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்த பூச்சிகள் முட்டைகளை இடுவதில்லை பதிலாக இளம் குட்டிகளை ஈனுகின்றன. கருமுட்டைகள் உள்ளே வளர ஆரம்பித்தவுடன், பெண் கரப்பான் பூச்சி, தனது அடையிலிருந்து ஒரு மஞ்சள் நிற திரவப் பாலைக் கொடுக்கிறது. இந்தப் பால் மிகவும் உயர்ந்த சத்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும், கரப்பான் பூச்சியின் பாலானது பூமியில் மிகவும் சத்தான மற்றும் உயர் கலோரிகள் கொண்ட ஒரு உணவாகும். பசுவின் பாலைவிட நான்கு மடங்கு புரதத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளது.கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை ஆற்றலை வழங்குவதற்கு உதவுகிறது.



Click it and Unblock the Notifications