Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சோளம் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது... ஏன்னு தெரியுமா?...
மழைக்காலமானது இப்பொழுது முழு வீச்சில் உள்ளது! இந்த அற்புதமான கால நிலையில் மசாலா தூவிய, புதிதாக வறுத்த மக்காச் சோளம். அதை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கலாமா?
மழைக்காலமானது இப்பொழுது முழு வீச்சில் உள்ளது! இந்த அற்புதமான கால நிலையில் மசாலா தூவிய, புதிதாக வறுத்த மக்காச் சோளம் / சோளக்கருதை கொரிப்பதன் மகிழ்ச்சி எல்லாவற்றுக்கும் மேலாகும்.

வேகவைத்த பிறகு தாராளமாக எலுமிச்சை சாறு மற்றும் மசாலா கொண்டு பூசியது அதை விட சுவையோ சுவை ! படித்தவுடன் நாக்கு ஊறுகிறது தானே?

விளைவுகள்
வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இந்த ஆரோக்கியமான மகிழ்ச்சி சிலருக்கு பிரச்சினைக்குரியதாகவும் இருக்கலாம், குறிப்பாக இதை உண்ட பின்னர் நீங்கள் அருந்தும் ஒரு ஒரு கப் தண்ணீரால் அது உருவாகலாம்.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அஷுடோஷ் கௌதம் கூறுவதாவது: "இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகளுக்கு இட்டுச்செல்லக்கூடியதாக இருப்பதால் நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும்."

ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?
தண்ணீருடன் மக்காச் சோளம் / சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்கின்றனர். இது ஒரு குறிப்பிட்ட காரணத்தால் நடக்கிறது "மக்காச் சோளம் / சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. மக்காச் சோளம் / சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். ஏன் இப்படி ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது என நீங்கள் குழப்பமாக இருப்பதால், நீங்கள் இப்போது மக்காச் சோளம் / சோளக்கருது மற்றும் நீரின் கலவையை குற்றம் சொல்லலாம்.

எவ்வளவு நேரம் கழித்து குடிக்கலாம்?
அத்தகைய நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க, மக்காச் சோளம் / சோளக்கருது மற்றும் குடிநீர் சாப்பிடும் இடையில் கணிசமான நேர இடைவெளியை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. "சிறந்த நேர இடைவெளி குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும்" என்று டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். இது தவிர, எலுமிச்சை சாறு பூசப்பட்ட மக்காச் சோளம் / சோளக்கருதைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் எலுமிச்சை செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த செரிமானச் செயல்முறையையும் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

பிரெஷ்ஷானவை
மழைக்காலத்தில் பருவத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வறுத்த மக்காச் சோளம்/ சோளக்கருது ஒரு சுவையான தெரு உணவாக இருந்தாலும், புதிய மற்றும் சூடானதை மட்டும் நுகருங்கள். மக்காச் சோளம் / சோளக்கருதின் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறுவதற்காக, உடனடியாக அதை உட்கொள்வது நல்லது . நீண்ட காலமாக அதை சேமித்து வைத்து உபயோகித்தல் பாக்டீரியாத் தொற்றுக்களால் வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
எனவே, அடுத்த முறை மழைக்காலத்தின் மகிழ்ச்சியை சுவையான இந்த மக்காச் சோளம் / சோளக்கருதைக் கொண்டு கொண்டாடும் தருவாயில் மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்களை மனதில் வைத்து வயிற்று அசௌகரியத்தில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications