Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மந்த அறிவை போக்கி உங்களை ஜீனியஸாக மாற்றும் சக்தி வாய்ந்த டாப் 5 உணவுகள்!!- ஆய்வு தகவல்!
இந்த ஐந்து உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டா மந்த அறிவு மாறி புத்திசாலி பளிச்சிடும்.
அறிவு என்பது மூளை சார்ந்த விஷயம்தான். கத்தியை தீட்ட தீட்ட கூர்மையாவது போல், மூளையை பயன்படுத்த பயன்படுத்த புத்தி கூர்மையாகும். அறிவை உயர்த்துவதில் உணவின் பங்கு மிக முக்கியமானது.
உதாரணத்திற்கு ஒரு கர்ப்பிணிப்பெண் நல்ல ஆரோக்கியமான உணவுகளை, கீரை, பழங்கள், நிறைய காய்கறிகளை உணவாக சாப்பிடும்போது பிறக்கும் குழந்தை மிக நுண்ணிய அறிவுத்திறனை பெற்று வளர்கிறது. பிறக்கும்போது சிலரை ஜீனியஸ் என சிலரை கூறுவது இதனால்தான்.

நிறைய ஜங்க் மற்றும் கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிடும் கர்ப்பிணிகளுக்கு சற்று அறிவு மந்தமான குழந்தைகள்தான் பிறக்கிறது. என்ன சொன்னாலும் மண்டையில் ஏறமாட்டீங்குது என சில குழந்தைகள் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
ஜீனியசாகவோ அல்லது மந்தமாகவோ எல்லாரும் பிறப்பதில்லை. ஆனால் பிறக்கும்போது நல்ல அறிவுத்திறனுடன்தான் பிறக்கிறார்கள். வளரும் சூழ் நிலைகள், உணவுப் பழக்கங்கள் அவர்களின் புத்தியை மழுங்கடித்துவிடுகிறது என்பது 100 சதவீத உண்மை.
உணவுகளில் சில குறிப்பிட்ட உணவுகள் உங்கள் மூளையின் திறனை அதிகப்படுத்தும். புத்திக் கூர்மையை பளிச்சிட வைக்கும். மூளைக்கு தேவையான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து அவற்ரின் ஆற்றலை தூண்டும்போது , அறிவுத்திறன் இன்னும் கூர்மையாகிறது. அவ்வாறான உணவுகள் என்னவென்று பார்க்கலாம்

காஃபி :
காஃபி பிரியர்கள் குஷியாவார்கள் இந்த விஷயத்தை கேட்டதும். அறிவுத் திறனை அதிகப்படுத்தும் டாப் உணவுகளில் முதலில் இருப்பது காஃபிதான். காஃபியில் இருக்கும் கேஃபைன் அடினோசின் என்ற காரணி உருவாவதை தடுக்கிறது. இந்த அடினோசின் தூக்கத்தை தூண்டும் ஒரு ரசாயனமாகும். இது மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

மீன் :
ஒமேகா அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கும் மீன்களை சாப்பிடுவதால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கச் செய்யலாம். இவை மூளை, மற்றும் நரம்பு செல்களை உற்பத்தி செய்ய உதவிபுரிகின்றன. அதோடு வயதாவதையும் தடுக்கிறது.

புருக்கோலி :
புருக்கோலியில் அதிக விட்டமின் கே இருக்கிறது. மூளையில் அதிக அடர்த்தியில் இருக்கும் ஸ்பிங்கோ லிபிட் எனப்ப்படும் கொழுப்பை உற்பத்தி செய்ய விட்டமின் கெ தேவை. இவை நினைவுத் திறனை அதிகப்படுத்துகிறது.

மஞ்சள் ;
எளிமையான கிடைப்பதுதான். ஆனால் அதன் நன்மைகள் கட்டுக்குள் அடக்க முடியாது. புற்று நோயை தீவிரமாக எதிர்க்கும் மஞ்சள் அறிவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும் என்பது அதன் நன்மைகளின் கூடுதல் போனஸ். இது மூளையின் நரம்புகளை ஆக்டிவாக எப்போதும் வைத்திருக்கும் செரடோனின் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது.

அடர் சாக்லேட்டுகள் :
அடர் சாக்லெட்டுகள் பெண்களுக்கு மிகப்பிடித்தது. அதிலுள்ள ஃப்ளேவினாய்டு மற்றும் ஆனி ஆக்ஸிடென்ட் மூளையின் செல்களை வேகமாக புதுப்பிக்கின்றன. இதனால் சுறுசுறுப்பாகவும், நுண்ணறிவுத் திறனும் மேம்படுகிறது.

வால் நட் :
வால் நட் மிக மிக முக்கிய அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. இவையனைத்தும் மூளை வளர்ச்சிக்கு அத்யாவசியமானவை. நரம்பு சம்பனத நோய்களை தடுக்கும். நரம்புகளின் தகவல் பரிமாற்றங்கள் சரியாகவும் துரிதமாகவும் இருந்தால் சமயோசித புத்தியும் துல்லியமாக இருக்கும். இதற்கு இந்த வால் நட் உறுதுணைபுரியும்.

வெண்டைக்காய் :
வெண்டைக்காயை சாப்பிட்டால் மூளை வளரும். அதிலுள்ள பாஸ்பரஸ் புத்தியை கூர்மையாக்குகிறது. வெண்டைக்காய் நரம்பு மண்டகத்தை வலுப்படுத்துகிறது. ரத்தத்தை சீராக மூளைக்கு அனுப்ப வழிசெய்கிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு வராமல் காக்கிறது.

பசலைக் கீரை :
விட்டமின் ஈ யை உடம்பில் வழங்கி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும் நரம்புத் திசுக்கள் வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம் சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விட்டமின் ஈ பசலைக் கீரையில் அதிகம் இருக்கிறது.

வல்லாரை :
வல்லாரைக் கீரையை சமைத்து உண்டாலும் நல்லது, அல்லது வல்லாரைப் பொடியை 1 ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து தினமும் இரவில் குடித்தால் நினைவு திறன் மேம்படும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை பயன்படுத்தினாம் புத்திக் கூர்மை மேம்படும்.

முட்டை :
முட்டையிலுள்ள கோலைன் மூளை செல்கள் வளர அவசியமான கொழுப்பு ஆகும். முட்டை, மூளையை களைப்படையாமல் வைக்க உதவுகிறது. அறிவுத்திறனை வளர்க்கிறது.

பழங்கள்:
ஞாபகசக்தியை அதிகரிக்க நாம் முதலில் சாப்பிட வேண்டிய பழம் ஆப்பிள். பேரிட்சை , மாதுளை மற்றும் திராட்சைகளும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கின்றன.

நெல்லிக்காய் :
அதியமானுக்கு நெல்லிக்காய் அவ்வை கொடுத்ததில் பலவித அர்த்தங்கள் இருக்கின்றன. இது இளமையாக இருக்கச் செய்வதோடு, மூளையின் செய்லாற்றை திடப்படுத்துகிறது. தினமும் அல்லது வாரந்தவறாமல் நெல்லிக்காய் சாற்றினைக் உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications