Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
புற்றுநோய் வராமல் தடுக்கவும், எப்பொழுதும் இளமையாக இருக்கவும் இந்த ஒரு பழமே போதும்
பூமியின் மிகவும் சுவையான பழங்களில் ஒன்று இந்த பெர்சிம்மன் பழம்.இந்த பழம் சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது.
பழங்கள் என்றாலே ஆரோக்கியமானவைதான் என்று நாம் அறிவோம். இந்த பரந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல பல ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் தெரிந்து வைத்து கொள்ளாமல் இருக்கிறோம். அதில் முக்கியமான ஒரு பழம்தான் பெர்சிம்மன் பழம் என்னும் சீமை பனிச்சம்பழம்.

பூமியின் மிகவும் சுவையான பழங்களில் ஒன்று இந்த பெர்சிம்மன் பழம். இதனை பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் அமெரிக்கன் பெர்சிம்மன், ஜப்பான் பெர்சிம்மன், இந்திய பெர்சிம்மன் மற்றும் கருப்பு பெர்சிம்மன் என்று பல வகைகள் உள்ளது. இந்த பழம் சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. இதன் மருத்துவ பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட்கள்
பெர்சிம்மன் பழத்தில் பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளது, குறிப்பாக இதில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. இதன் சாறில் கேலிக் அமிலம் மற்றும் எபிகேட்ஸின் என்னும் இரண்டு வேதிப்பொருள்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதுடன் செல்கள் சிதைவடைவதை தடுப்பதோடு, நாள்பட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

கண் ஆரோக்கியம்
கண்ணின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ பெர்சிம்மன் பழத்தில் அதிகம் உள்ளது. ஒருநாளுக்கு உங்கள் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான 55 சதவீதம் வைட்டமின் ஏ இந்த ஒரு பழத்தில் இருந்தே கிடைக்கும். வைட்டமின் ஏ குறைபாடு மாலைக்கண் நோய், கண் எரிச்சல் மற்றும் கண் தொடர்பான பல நோய்கள் ஏற்பட காரணமாய் அமைகிறது.

கொழுப்புகளை குறைக்கிறது
இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் கொழுப்புதான். சில ஆய்வுகளின் படி, பெர்சிம்மன் பழம் சாப்பிடுவது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. தினமும் இந்த பழம் சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.

வளர்சிதை மாற்றம்
பெர்சிம்மன் பழத்தில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், போலிக் அமிலம் மற்றும் தையாமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். இந்த சத்துக்கள் அனைத்தும் உங்கள் வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் அவசியமானவையாகும்.

வீக்கத்தை குறைக்கிறது
பெர்சிம்மன் பழத்தின் மிகச்சிறந்த பயன்களில் ஒன்று வீக்கத்தை கட்டுப்படுத்துவதாகும். வீக்கம் என்பது புற்றுநோய், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றிற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் அறிகுறி ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் தணிக்க அமிலம் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.

வயதாவதை தடுக்கும்
பீட்டா-கரோட்டின், லுடீன், லிகோபீன் மற்றும் கிரிப்டோக்ஸான்டின் போன்ற மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் பெர்சிம்மனில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை குறைப்பதுடன் முன்கூட்டியே வயதாவதையும் தடுக்கிறது. மேலும் அல்சைமர், சோர்வு, பார்வைக்கோளாறு, தசை பலவீனம் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. குறிப்பாக வயதாவதின் அறிகுறியான சுருக்கங்களை தடுக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது
சுவையான இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது, இது புற்றுநோய் செல்களை அழிக்க உதவுவதுடன் பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். இதில் உள்ள அதிகளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பீனாலிக் அமிலம் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். உங்கள் உணவில் இந்த பழத்தை சேர்த்துக்கொள்வதை உடனே தொடங்குங்கள்.

கல்லீரல் பாதுகாப்பு
பெர்சிம்மன் பழத்தில் உடலுக்கு தேவையான ஆண்டிஆக்சிடண்ட்கள் உள்ளது, இது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. மேலும் இது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும், செல்கள் சேதமடைவதையும் தடுக்கிறது. இதனால் கல்லீரல் பாதுகாக்கப்டுகிறது.

எடை இழப்பு
ஒரு சராசரி பெர்சிம்மன் பழத்தில் 31 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடை குறைப்பிற்கு மிகவும் ஏற்ற பழமாகும். எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications