Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
எந்த நிற பழங்களைச் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா? இத படிங்க...
பழங்களின் நிறங்களும் அவற்றில் உள்ள ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் பற்றியும் இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு பொருளும் அர்த்தமும் உள்ளடங்கியிருக்கிறது. அது சமூகப் பயன்பாட்டைப் பொருத்தே தத்துவார்து்த அடிப்படையிலோ அமையும் என்பது தான் குறியியல் கோட்பாடு சொல்கின்ற செய்தி.

ஒன்று தெரியுமா? இந்த கோட்பாடுகள் எல்லாம் நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்றபடி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இயற்கைக்கும் நிறங்கள் பற்றிய குறியீடும் அதன் கோட்பாடும் தெரிந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவே இல்லை.

நிறங்களும் இயற்கையும்
இயற்கை என்றால் இது கோடிக்கணக்கான நிறங்களின், நிறங்கள் கொண்ட பொருள்களின் தொகுப்பு தான் என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆம். சுற்றி வளைத்து சொன்னால் புரியாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் வெவ்வேறு நிறங்களைக் கொண்டவை. அதேபோலதான் அந்தந்த நிறங்களுக்கு என்று சில பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

நிறங்களும் ஊட்டச்சத்தும்
நம்முடைய உணவில் உள்ள ஒவ்வொரு நிறங்களுக்கு என்றும் சில குணங்கள் இருப்பது போது, சில குறிப்பிட்ட நிறங்களைக் கொண்ட உணவுப் பொருள்கள் ஒரே மாதிரியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இது நினைத்துப் பார்க்கவே நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். அதிலும் குறிப்பாக பழங்களில் இந்த தன்மை அதிகமாகவே உண்டு.
நம்முடைய உடலுக்குச் சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது என்றால், அதற்கு சில குறிப்பிட்ட நிறங்களில் உள்ள பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் இந்த ஊட்டச்சத்து தேவையை நம்மால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அப்படி எந்தெந்த நிற பழங்கள் என்னென்ன மாதிரியான ஊட்டச்சத்துக்களைப் பெற்றிருக்கின்றன என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

நோய் தீர்க்கும் நிறங்கள்
அதேபோன்று தான் ஒவ்வொரு குறிப்பிட்ட நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பஙை்களுடைய குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கு ஏற்றபடி, சில நோய்களைத் தீர்க்கின்ற ஆற்றலும் உண்டு. அது பற்றி தெரிந்து வைத்திருந்தாலே நாம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திட முடியும்.

மஞ்சள் நிறப் பழங்கள்
மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்களில் மிக அதிக அளவில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் ஆகியவை அதிக அளவில் இருக்கும். இந்த மஞ்சள் நிறப் பழங்களைச் சாப்பிடுவதால் எலு்புகள் வலிமையடையும். மன அழுத்தம் குறையும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். ரத்தம் சுத்தீகரிப்பு செய்யப்படும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

சிவப்பு பழங்கள்
செக்கச் சிவந்த பழங்கள் நம்முடைய உடலுக்கு வலிமையைத் தரக்கூடியவை. இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள அணுக்களை (ஹீமோகுளோபின்) செல்களை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கண் பார்வை தெளிவடையும். நம்முடைய உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இந்த சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு.
குறிப்பாக, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்ற வைட்டமின் சி அதிகம் கொண்ட சிவப்பு நிற பழங்களில் பிளவனாய்டுகள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாலைக்கண் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். இதய நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டவை.

ஆரஞ்சு நிற பழங்கள்
ஆரஞ்சு நிறங்களில் (ஆரஞ்சு மட்டுமல்லாது மற்ற பழங்களும்) உள்ள பழங்களில் வைட்டமின் சியும் பொட்டாசியமும் அதிகமாக இருக்கின்றது. அதனால் இது ரத்தத்தை சுத்தப்படுத்தி எலும்புகளை வலுவாக்குகிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலும் இதற்கு அதிகமாகவே உண்டு.

பச்சை நிற பழங்கள்
காய்கறிகள், கீரைகள், பழங்கள் என பச்சை நிறத்தில் உள்ள உணவுப் பொருள்களின் அருமைப் பற்றி நமக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிற ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றங்களில் பங்கெடுக்கிறது. டைபாய்டு போன்ற வைரஸ், பாக்டீரியா தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகிற ஆற்றல் கொண்டவை தான் பச்சை நிற பழங்கள்.

பிரௌன் நிற பழங்கள்
பிரௌன் நிறப் பழங்கள் அந்த கலருக்காகவே நாம் பெரிதாக விரும்புவதில்லை. ஆனால் அவற்றில் மிக அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது அல்சரைப் போக்கி, குடல், வாய் மற்றும் வயிற்றுப் புண்களைச் சரிசெய்கிறது.

ஊதா வண்ண பழங்கள்
ஊதா வண்ணங்களில் உள்ள பழங்கள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் தான் இருக்கின்றன. அவை ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நீண்ட நாள் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த ஊதா நிற பழங்கள் இருக்கின்றன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்து என்று கூட இதை நாம் சொல்லலாம்.

எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாக சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் அல்லது சாப்பிடும் போது பழங்கள் சாப்பிடுகின்ற பழக்கங்கள் இருக்கும். அது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்று தங்களுக்குள்ளே பெருமிதமும் கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அது ஆரோக்கியமான உணவுப்பழக்கம் கிடையாது.
நாம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவோ அல்லது ஒரு மணி நேரம் கழித்தோ தான் பழங்கள் சாப்பிட வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?
நிறைய பேர் ஜூஸ் தான் உடலுக்கு வலுவூட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா பழச்சாறை விடவும் பழத்தை அப்படியே சாப்பிடுவதில் தான் முழுமையான ஊட்டச்சத்தை நம்மால் பெற முடியும். குறிப்பாக, பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், சாறாகக் குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவதன் மூலம் தான் பெற முடியும்.



Click it and Unblock the Notifications