'உச்சா' போற இடத்துல அரிப்பு, அலர்ஜி இருக்கா... இப்போ இதெல்லாம் சாப்பிடாதீங்க...

Posted By: Venkatakishnan S
Subscribe to Boldsky

சிறுநீர் பாதை தொற்று (UTI) பெரும்பாலும் பாக்டீரியாவால் தான் ஏற்படுகின்றது. மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும் தொற்றை மேலும் தீவிரப்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. இந்த வகை தொற்றுக்கள், ஆண்களை விட குறுகிய சிறுநீர் பாதை அமைப்பை கொண்ட பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுநீர் பாதையோடு, சிறுநீர்ப்பை, சிறுநீர் வெளியேறும் தூவரம், சிறுநீர் குழாய் ஆகியவற்றில் இந்த தொற்று ஏற்படக்கூடும்.

kidney disesses

பிறந்த குழந்தைகளை பொறுத்தவரை ஆண் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்கலாம். தவழும் வயதில் பெண் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதை அறியலாம். நுண்கிருமிகளால் சிறுவர்கள் நுரையீரலின் கீழ் பாக்டீரியாவை குவிக்கின்றன. கடுமையான மலச்சிக்கல் பிரச்சனையுள்ள இளம் பிள்ளைகள் UTI களுக்கு அதிக வாய்ப்புகள் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

UTI தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளாக சிறுநீர் பாதையில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சூழ்நிலை, சிறுநீர் வெளியேற தாமதம் ஆவது ஆகியவைகள் தான். மேலும் இந்த தொற்று தீவிரமாகவும் போது காய்ச்சலும், சிறுநீரில் இரத்தமும் கூட கலந்து வெளியாகலாம்.

இவையெல்லாம் இயல்பாக எல்லோருக்கும் வரக்கூடிய அறிகுறிகள் தானே என்று கவனக்குறைவாக இருந்து விட வேண்டாம். அத்தகைய இயல்பான அறிகுறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சரி ஆகிவிடும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

ஆனால் நிரந்தரமாக, நாட்பட்ட அறிகுறிகளாக தெரியும் போது உடனே தகுந்த மருத்துவரை அணுகி சிகிக்சை எடுத்துக் கொள்வதோடு மருத்துவர் குறிப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்துகளை நேரம், நாள் தவறாமல் எடுத்துக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு இந்த சிறுநீரக நோய் தொற்றை தடுத்துக் கொள்ள முடியும்.

பாதுகாப்பற்ற உடலுறவு, குடலில் பாக்டீரியா போன்றவற்றை சிறுநீர் தொற்று உருவாக காரணமாக சொன்னாலும், பெரும்பாலும் நான் உட்கொள்ளும் உணவே இந்த நோய் தொற்றை தீவிரப்படுத்துகிறது. உண்ணும் உணவில் கவனமாக இருந்தாலே பெரும்பாலும் இந்த சிறுநீர் தொற்று நோயை தடுத்து விட முடியும்.

ஆகையால் கீழ் கண்ட உணவுகளை சிறுநீரக தொற்றுக்கு தடை செய்யப்பட்ட உணவாக கருதி அதை முடிந்த வரை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது. இதோ நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை குறிப்பாக பேக்கரி உணவுப் பொருட்கள் பாக்டீரியா பெருகி வளர உரமாக அல்லது உணவாகவே கருதப்படுகிறது. இதனால் சிறுநீரக தொற்று நோயாளிகள் எடுக்கும் சிகிச்சையின் வீரியத்தை குறைத்து அவர்களுக்கு மேலும் தொற்றை தீவிரப்படுத்தி சிக்கலில் மாட்டி விடக் கூடும்.

ஆகையால் அதிகமான சர்க்கரை அளவுள்ள குளிர் பானங்கள், குக்கீஸ், கேக், இனிப்பு வகைகளை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது.

காபி

காபி

இது சிறுநீரக தொற்று பாதிக்க பட்ட பகுதியில் மிகுதியான இரத்த ஓட்டத்தை உருவாக்கி தொற்றை தீவிரப்படுத்தக்கூடும். காபியை தவிர்ப்பதோடு, தேநீர், சோடா, சாக்லேட் அல்லது பிளாட்பார கடை பழச்சாறுகளை கவனத்தோடு தவிர்ப்பதே மேல். காபி, தேநீரை சிலர் தவிர்க்க முடியாத சூழலில் தங்கள் நோய் தன்மைக்கேற்ப குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. அது மருத்துவரிடம் கேட்டு பயன்படுத்து அளவும் நிர்ணயித்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நீ

மாற்றாக இயற்கையான நீர் மற்றும் பழச்சாறுகளை அருந்தலாம்.

அசிடிக் அல்லது அமிலப் பழங்கள்

அசிடிக் அல்லது அமிலப் பழங்கள்

ஆரஞ்சு பழச்சாறு அமிர்தம் என்று நினைக்கலாம். ஆனால் அது அமிலச்சாறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொதுவாக மற்றவர்களுக்கு அமிர்தமாக தெரியும் பழங்கள் சிலருக்கு நஞ்சாக இருக்கக்கூடும். அதற்கு காரணம் சிட்ரஸ் பழ வகைகள் என்று சொல்ல கூடிய ஆரஞ்சு, லெமன், சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி, தக்காளி போன்றவகைகள் சீறுநீர்ப் பாதையை எரிச்சலூட்டுவதோடு, சிறுநீர் கட்டிகளை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆலோசனைப்படி இத்தகைய பழங்களை எடுத்துக் கொள்ளும் அளவை தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை மேற்கண்ட சிட்ரிக் பழ வகைகளை சிறுநீர் தொற்று நோயாளிகள் தவிர்ப்பதே சிறந்தது.

காரமான மசாலா உணவுகள்

காரமான மசாலா உணவுகள்

இது கொஞ்சம் கஷ்டம் தான். நம்ப பராம்பரிய உணவு முறைகளே சற்று காரசாரமான வகைகள் தான். ஆனால் இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் பதப்படுத்தபட்ட இறைச்சி, மேலும் உணவு சுவை கூட்டிகள், நிறமிகள் எனப்படும் கலர்பொடிகள் நிச்சயம் உடலுக்கு கேடு தான். அது சிறுநீரக தொற்று வியாதிகளுக்கு மட்டும் இல்லை பொதுவாக தவிர்ப்பது மிகவும் பயன்தரும். இதுவும் சிட்ரிக் பழ வகைகளைப் போலவே உடலின் அமில அளவை அதிகரிப்பதோடு, சிறு நீர் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் தொற்றுக்கு காரணமான பாக்டீரியா வளர்ந்து பெருக வழிவகுத்து விடும்.

 பதப்படுத்தப்பட்ட மாவு உணவுகள்

பதப்படுத்தப்பட்ட மாவு உணவுகள்

பாஸ்தா, பீஸா, ரொட்டிகள் மற்றும் வெள்ளை மாவுகளால் தயாரிக்கப்படும் அனைத்தும் உங்கள் உடல்நலத்திற்கு கெட்டதாக இருக்கிறது. இது சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் போது மட்டும் இல்லை. பெரும்பாலும் இவைகளை உடம்பு சர்க்கரையாக மாற்றுவதாலும் இவை பெரும் கேடாக அமைகிறது.

ரெட் மீட்

ரெட் மீட்

ஸ்டீக்ஸ், ஹாம்பர்கர், மற்றும் க்ரில்டு வகை சிவப்பு இறைச்சி கிட்டதட்ட தடை செய்யப்பட்ட உணவு வகைகள் போலத்தான். இவை மறைமுகமாக உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கிறது. உடலில் அமிலத்தை அதிகரீத்து பாக்டீரியா பெருக ரொம்பவே மெனக்கெடும் உணவை நாம் ஏன் மெனக்கெட்டு உட்கொள்ள வேண்டும் என்பதை சிந்திக்கவும். ரெட் மீட்டுக்கு பதில் சிக்கன், மீன் வகைகளை உட்கொள்ளலாம். மேற்கண்ட முக்கிய உணவு வகைகளை தவிர்ப்பதோடு, முழுமையா தவிர்க்க முடியாவிட்டாலும், முடிந்த அளவு எடுத்துக் கொள்ளும் அளவை குறைப்பது நல்லது. அந்த வகை உணவானது

மற்ற உணவுகள்

மற்ற உணவுகள்

அரிசி உணவு, வெள்ளை ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள்

மேலும் அல்கோஹால், சிப்ஸ் மற்றும் ஸ்டார்ச் வகை உணவுகள், பால் பதார்த்தங்கள், தேன், சாக்ரீன் போன்ற செயற்கையான இனிப்பூட்டிகள், அதிக கொழுப்பு வகை உணவுகள், ஷெல் பிஃஷ் எனப்படும் மட்டி மீன் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பட்டியலை படித்துவிட்டு, அதான் மொத்த உணவு வகையும் பட்டியல் போட்டாச்சே இனிமே எதை உட்கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பொதுவான காரணிகளைத் தான் பட்டியல் போட்டுள்ளோம். உங்களின் நோய் தன்மை, அறிகுறிகள், ஆரம்ப அல்லது தீவிரத்தை உணர்ந்து மருத்துவரின் ஆலோசனையோடு உணவு பட்டியலை தயாரித்து அதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Not Allowed For UTI Patients

Urinary tract infections, or UTIs, are characterized by bacterial infections that develop in your urinary tract, which is composed of the bladder, kidneys and urethra, according to the University of Michigan Health System.
Story first published: Monday, April 2, 2018, 13:10 [IST]