Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இனி நீங்க தினமும் காலையில குடிக்க வேண்டியது இந்த ப்ரக்கோலி காபி தான்... ஏன் தெரியுமா?
நாங்கள் இங்கே நவநாகரீக பிரக்கோலி காபியை பரிந்துரைத்திருக்கிறோம். பயன்படுத்திவிட்டு சொல்லுங்கள்.
காபிக்கு அடிமையாகாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு காபி விரும்பிகள் அதிகம். இதுவரை நீங்கள் மஸ்ரூம் காபி, முட்டை காபி, பட்டர் காபி இப்படித்தான் கேள்வி பட்டுருப்பீங்க. ஆனால் அற்புதமான சுவையை தரும் இந்த ப்ரக்கோலி லாட்டி காபி பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா?

கண்டிப்பாக இது நம்புவதற்கு புதிதாகத் தான் இருக்கும். ஆனால் உண்மையும் கூட. இதுவரை ப்ரக்கோலியை உணவு, சூப் மற்றும் பானங்கள் போன்றவற்றில் பயன்படுத்திருப்பீர்கள். அதே நேரத்தில் இந்த ப்ரக்கோலி காபி கூட உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்கின்றனர்.

நவநாகரீக காபி
இந்த வித்தியாசமான நவநாகரீக காபி ப்ரக்கோலி பவுடர் கொண்டு போடப்படுகிறது. இந்த ஆரோக்கியமான பானம் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனம் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (சி.எஸ்.ஐ.இ.ஆர்) கண்டுபிடித்துள்ளது. தங்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்ஸ்ட்டாகிராம் மூலம் இந்த பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெஜ் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

சத்துக்கள்
இந்த காபிக்கு பின்னாடி இருக்கும் ஆராய்ச்சியை பற்றி சி.எஸ்.ஐ.இ.ஆர் கூறுவதாவது "ஆஸ்திரேலியாவில் உள்ள 2/3 பங்கு மக்கள் போதுமான காய்கறிகளை தங்கள் வாழ்நாளில் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவே இந்த பிரக்கோலி காபி என்கின்றனர். ஏனெனில் பிரக்கோலியில் புரோட்டீன், நார்ச்சத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பைட்டோ கெமிக்கல்கள், ஆற்றலை கொடுக்கும் பொருட்கள் போன்றவைகள் இதில் உள்ளன.

காய்கறிகளின் ஒட்டுமொத்த சத்து
ப்ரக்கோலி பவுடர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை தருகிறது என்று சி.எஸ்.ஐ.இ.ஆர் கூறுகிறது. 2 டேபிள் ஸ்பூன் பிரக்கோலி பவுடரை எடுத்துக் கொள்வது 1/5 பங்கு ஒரு நாளைக்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சமமாகிறது என்கின்றனர். மேலும் இந்த ப்ரக்கோலி பவுடரை எடுத்து வரும் போது உணவு வீணாக்குவது குறைகிறது என்கின்றனர். உலகளவில் பார்த்தால் 1/3 பங்கு உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகிறது அல்லது இழக்கப்படுகிறது என்று சி.எஸ்.ஐ.இ.ஆர் கருத்து தெரிவிக்கிறது. எனவே நீங்கள் காய்கறிகளின் மொத்த ஊட்டச்சத்துக்களையும் பெற இந்த ப்ரக்கோலி பவுடர் உதவியாக இருக்கும்.

தயாரிக்கும் முறை
ப்ரக்கோலி காய்கறியை முற்றிலும் வெயிலில் காய வைத்து பவுடராக அரைத்து கொள்கின்றனர். பிறகு இந்த ப்ரக்கோலி பவுடரை கொண்டு ப்ரக்கோலி லாட்டி என்ற காபி தயாரிக்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த ஒரு காபியே போதும் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் நிறைய தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் போன்றவைகள் உள்ளன. புற்றுநோய் வருவதை தடுக்கும் சக்தி இதில் உள்ளது.

ஹெல்த்தி காபி
எனவே இந்த ஹெல்த்தி காபி உங்கள் காலை வேளையை இனிமையாக்குவதோடு ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது. இனி நீங்கள் தாராளமாக காபி குடிக்கலாம். என்னங்க இந்த ஹெல்த்தி காபி குடிக்க நீங்க தயாரா?



Click it and Unblock the Notifications
