For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா?...

கழுதைப்பால் யாராவது குடிப்பாங்களான்னு நீங்க யோசிக்கலாம். ஆனால் அதில் உள்ள 20 வகையான ஆரோக்கிய நன்மைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது பாருங்கள்.

|

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். பாலில் நிறைய வகைகள் உள்ளன. ஆட்டுப்பால், மாட்டுப்பால், சோயா பால் போன்றவைகள் உள்ளன. ஆனால் நாம் இதுவரை கழுதைப் பாலின் அற்புத நன்மைகள் பற்றி அறிந்திருக்க மாட்டோம்.

health benefits of donkey milk

இந்த பாலில் மீது மேற்கொள்ளப்பட்ட நிறைய ஆராய்ச்சி முடிவுகள் கழுதைப் பால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்கின்றனர். அப்படி பார்க்கையில் கழுதைப் பாலால் கிடைக்கும் 20 அற்புத நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுதைப் பால்

கழுதைப் பால்

கழுதைப் பால் (ஆஸ் மில்க் அல்லது ஜெனி மில்க்) வீட்டில் வளர்க்கப்படும் கழுதைகளிலிருந்து பெறப்படுகிறது. பிரபலமான பண்டைய எகிப்திய ராணி கிளியோபட்ரா காலத்தில் இருந்து இந்த பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர் தன்னுடைய அழகை பேண கழுதைப் பாலில் குளித்து வந்தார் என்று கதைகள் கூறப்படுகிறது. அன்னையிலிருந்து இன்றை வரை கழுதைப் பால் காஸ்மெட்டிக் பொருட்களிலும் பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

கழுதையின் pH அளவானது மனித pH அளவிற்கு சமமாக உள்ளது. எனவே 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்த பாலை தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பாலின் pH அளவு 7-7.5 ஆக இருக்கும், கழுதைப் பாலின் pH அளவு 7-7.2 ஆக இருக்கும். எனவே கைக்குழந்தைகளுக்கு கூட இது பாதுகாப்பானது.

அழகை பராமரிக்க

அழகை பராமரிக்க

எகிப்திய ராணி கிளியோபட்ரா தன்னுடைய அழகை பேண தினமும் கழுதைப் பாலில் தான் குளித்து வந்தார். எனவே இந்த பயன்பாடு அப்படியே தொடர்ந்து கழுதைப் பால் நிறைய அழகு சாதன பொருட்களிலும் பயன்படுகிறது.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

கழுதைப் பால் எளிதில் சீரணிக்கக் கூடியது. இதில் கேசீன் கிடையாது மற்றும் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இதில் நிறைய தாதுக்கள், விட்டமின்கள், இம்பினோகுளோபின் (புரதங்கள்) போன்றவைகள் உள்ளன. மேலும் கழுதைப் பால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே இந்த ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

மெட்டபாலிசம்

மெட்டபாலிசம்

கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். உடல் கழிவுகளும் எளிதாக வெளியேறும்.

ஊக்கமருந்து

ஊக்கமருந்து

பிரான்ஸ் நாட்டின் முதல் அரசரான பிரான்ஸிஸ் போரில் அதிருப்தியால் சோர்வடைந்த போது மருத்துவரின் ஆலோசனை பேரில் கழுதைப் பால் தான் குடித்து வந்தார். அது அவருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. எனவே அறிவியல் பூர்வமாக கழுதைப் பால் ஒரு மிகச்சிறந்த ஊக்க மருந்தாகும்.

சரும பிரச்சினைகள்

சரும பிரச்சினைகள்

உங்களுக்கு பருக்கள் தொல்லை இருந்தால் அதற்கு கழுதைப் பால் சிறந்தது. உங்கள் சரும பிரச்சினைகளை துல்லியமாக போக்கி புதுப்பிக்க இது ஒரு சிறந்த மருந்து. அப்புறம் என்ன பொலிவான ஆரோக்கியமான சருமத்தை பரிசாக பெறலாம்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

இந்த பால் எளிதில் சீரண ம் அடைவதால் மலச்சிக்கலை எதிர்த்து போரிடுகிறது. இந்த பால் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. எனவே உங்கள் குழந்தைகளுக்கு கூட நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.

கல்லீரல் நச்சு

கல்லீரல் நச்சு

இந்த பாலை ஆராய்ச்சி செய்த போது இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மற்ற காலை காட்டிலும் கழுதைப் பால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. எனவே கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும்.

இருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினை

இருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினை

கழுதைப் பால் இருமல் மற்றும் மூச்சுப் பிரச்சினையை போக்குகிறது. வெதுவெதுப்பாக இந்த பாலை காய்ச்சி குடித்தால் தொண்டை புண் மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த பாலை தினமும் குடித்து வந்தால் சுவாச கோளாறுகள் சரியாகும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இந்த பால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே நோய்களை எதிர்த்து போராடி அதை குணப்படுத்த உதவுகிறது.

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

இந்த பாலில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இதய நோய்களுக்கு உதவுகிறது. இது மூளைக்கு சிறந்தது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. சிந்தனையை துரிதப்படுத்துகிறது.

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசர்

இந்த பாலில் மாய்ஸ்சரைசர் அதிகமாக காணப்படுகிறது. எனவே இதை பழங்காலத்தில் சோப்பு மற்றும் பாடி லோசன் போன்றவற்றில் பயன்படுத்தி வந்தனர். மற்ற பால்களை காட்டிலும் சருமத்தை பட்டு போல் வைக்க கழுதைப் பால் உதவுகிறது.

பசும்பாலிற்கு பதிலாக

பசும்பாலிற்கு பதிலாக

சில குழந்தைகளுக்கு பசும்பாலில் உள்ள புரோட்டீன் அலற்சியை உண்டாக்கும். ஆனால் கழுதைப் பால் இந்த மாதிரியான அழற்சியை ஏற்படுத்துவதில்லை. எனவே நம் உணவில் சேர்த்து பயன் பெறலாம்.

உடல் உபாதைகள்

உடல் உபாதைகள்

Image Courtesy

வளர்ச்சி குறைபாடுகள், மோசமான உணவுப் பழக்கம், நோய்களை குணப்படுத்த, மாதவிடாய் காலத்தில் மற்றும் வயதானவர்களின் ஆரோக்கியத்திற்கு போன்ற பிரச்சினைகளுக்கு கழுதைப் பாலை எடுத்துக் கொள்ளலாம். கழுதைப் பாலில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை கூட மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுத்து கொள்ளலாம். இது நமது உடலின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்தும் என்று டாக்டர் மாசிமோ கலியெண்டோ, ஊட்டச்சத்து உயிரியலாளர் கழுதை பால் நலன்களைப் பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

இந்த பாலில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் ஆஸ்துமா, எக்ஸிமா மற்றும் சோரியாஸிஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இழைப்பு நோய் இருப்பவர்கள் தாராளமாக இந்த கழுதைப் பாலைக் குடித்து வரலாம்.

புற்றுநோயை குணப்படுத்துதல்

புற்றுநோயை குணப்படுத்துதல்

கழுதைப் பால் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. புற்று நோய்க்கு காரணமான செல்களை அழிக்கிறது. புற்று நோயை எதிர்த்து தனியாக போராடும் அளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இந்த கழுதைப் பாலில் உள்ளது. இரத்த குழாய்களின் ஸ்டெம் செல் பயன்பாட்டிற்கு இது உதவுகிறது.

புற்று நோயை குணப்படுத்தும் கீமோதெரிபி சிகச்சைக்கு இந்த கழுதைப் பால் உதவுகிறது. இந்த ஒரு பொருளே போதும் புற்று நோயை விரட்டியடிக்க.

உடல் எடை இழப்பு

உடல் எடை இழப்பு

கழுதைப் பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவுகிறது. இந்த பாக்டீரியாக்கள் வேகமாக பரவி ஆற்றலை உருவாக்க உதவுகிறது. எனவே இந்த ஆற்றல் நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடுகிறது. எனவே நீங்கள் கச்சிதமாக இருக்க தினமும் கழுதைப் பாலை குடித்து வரலாம்.

கால்சியம்

கால்சியம்

கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்பு குறைபாடு ஏற்படும். எலும்பு அரிப்பு, கால்சியம் பற்றாக்குறை போன்றவற்றை கழுதைப் பால் போக்குகிறது. ஏனெனில் இந்த பாலில் ஏராளமான கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. எலும்பின் வலிமையை அதிகமாக்குவதோடு, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களுக்கு பிறகு எலும்பில் ஏற்படும் அரிப்பை போக்குகிறது. எனவே பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கழுதைப் பாலை உணவில் சேர்த்து வருவது நல்லது

விட்டிலிகோ

விட்டிலிகோ

விட்டிலிகோ என்பது ஒரு வகை சரும நோயாகும். இந்த நோயால் நெற்றியில் வெள்ளை திட்டுகள் போன்று தோன்றும். இதற்கு காரணம் சருமத்தின் மெலனின் நிறமிகள் இழப்பே காரணமாகும். இந்த நோய் உடம்பின் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் வரலாம்.

குழந்தையின் வளர்ச்சிக்கு

குழந்தையின் வளர்ச்சிக்கு

ஓமேகா 3 சத்து எல்லாருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். கருவுற்ற காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு போலிக் அமிலத்துடன் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த ஓமேகா 3 சத்து கழுதைப் பாலில் அதிகளவில் உள்ளது.

குறிப்பு

குறிப்பு

இந்த பாலை அருந்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. மேலும் இந்த கழுதைப் பால் கிடைப்பது கொஞ்சம் சிரமமான விஷயமும் கூட. ஆனால் இதன் நன்மைகள் ஏராளம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Wonderful Health Benefits of Donkey Milk

Here are 20 wonderful health benefits of donkey milk, check them out.
Desktop Bottom Promotion