For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்கள் வீட்டு சமையல் அறையில் விஷத்தன்மை வாய்ந்த உணவுகள் உள்ளது...!

  |

  பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் உயிர் வாழ மிக முக்கியமானது உணவே. எப்படி நீரின்றி உலகம் இயங்காதோ, அதே போன்றுதான் உணவு இல்லாமலும் எந்த உயிர்களாலும் உயிர் வாழ முடியாது. மற்ற உயிர்களை காட்டிலும் மனிதனுக்கே உணவில் பல ரகங்கள் உள்ளது. அதிலும் சைவம் - அசைவம் என இரண்டு பிரிவுகளுக்குள்ளும் பல்வேறு வகைகள் இருக்கிறது.

  most poisonous food in the world

  இத்தகைய உயிர்களின் உயிர்நாடியாய் திகழும் உணவில் விஷம் உள்ளதென்றால் எவ்வளவு அதிர்ச்சியான விஷயம் இது..! ஆனால் இதை இத்தனை நாளாக நாம் உணராமலே சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். விஷம்' ஒரு குடம் இருந்தாலும் விஷயம்தான்... ஒரு துளி இருந்தாலும் விஷம்தானே.." ஆதலால் இந்த பதிவில் விஷத்தன்மை உள்ள உணவுகள் எவை என்பதை அறிந்து கொண்டு இனி அவற்றை தவிர்ப்போம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  1. பாதாம்

  1. பாதாம்

  நம்மில் பலரும் அறிந்த ஒன்று பாதாம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதே. ஆனால் இந்த பாதாமிலும் விஷ தன்மை உள்ளது என ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக பாதாமில் 2 வகை உண்டு. இனிப்பு சுவை கொண்ட பாதாம் மற்றும் கசப்பு சுவை கொண்ட காட்டு பாதாம். இந்த கசப்பு சுவை உள்ள பாதாமில் ஹைட்ரஜன் சைனட் (hydrogen cyanide) அதிகம் உள்ளது. 7 முதல் 10 கசப்பு தன்மையுள்ள பாதாம்களை குழந்தைகள் உண்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடும். எனவே வாங்கும் போது நல்ல பாதாமை வாங்குங்கள்.

  2. உருளை கிழங்கு

  2. உருளை கிழங்கு

  அனைவருக்கும் பிடித்தமான உணவில் முக்கிய இடத்தில் இருப்பது உருளை கிழங்கே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு பதார்த்தம் இது. இதில் கூடவா விஷ தன்மை உள்ளது என யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க..! முளைத்த உருளை கிழங்கில் கிளைக்கோ-அல்கலாய்ட்ஸ் (Glycoalkaloids) நிறைய இருக்கும். இது உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தும். வயிற்று போக்கு, பயங்கர தலை வலி, மற்றும் கோமா போன்ற நிலைக்கு கூட கொண்டு செல்லலாம். ஆதலால் முளைத்த உருளை கிழங்கை தவிர்த்து விடுங்கள்.

  3. தக்காளி

  3. தக்காளி

  என்னது... தக்காளியில கூட விஷம் இருக்கா...?

  பச்சை தக்காளியில் அதிகம் அல்கலி(alkali poison) விஷத்தன்மை உள்ளது. எனவே பச்சை தக்காளியை உணவில் சேர்த்து கொண்டால் உயிருக்கே ஆபத்தை தரும். மேலும் தக்காளியின் இலைகள் மற்றும் வேர்களிலும் இந்த விஷ தன்மை இருக்கிறது. சமைக்கும் போது மிகவும் கவனமுடன் இவற்றை நீக்கி விட்டு சமைத்தல் நன்று.

  4. ஆப்பிள்

  4. ஆப்பிள்

  பழங்கள் என்றாலே உடலுக்கு நன்மையை தரும் என்பது நம் அனைவரின் கண்மூடித்தனமானா நம்பிக்கை. இதனை பொய்ப்பிக்கிறது ஆப்பிள். ஆரோக்கியமான பழ வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்த ஆப்பிளின் விதையை சாப்பிட்டால் அவ்வளவுதான். ஏனெனில் இதில் உள்ள அமிக்தாளின்(amygdalin) மிகவும் விஷ தன்மை வாய்ந்த சைனைடை (cyanide) உற்பத்தி செய்யும். இதனால் வாந்தி, மயக்கம், அதிக ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் மற்றும் இறப்பு கூட வரலாம்.

  5. தேன்

  5. தேன்

  அதிக நாட்கள் கெடாத உணவு பொருட்களில் ஒன்று தேன்தான். ஆனால் இதிலும் பாதிப்பு இருப்பதாக உணவு துறை வல்லுநர்கள் சொல்கின்றனர். பதப்படுத்தப்படாத தேனை சாப்பிட்டால் பல உடல் உபாதைகள் வரக்கூடும். பதப்படுத்தாத தேனில் கிரெய்னோடோக்ஸின் (grayanotoxin) உள்ளது. எனவே இது உடலில் திடீர் சோர்வு, அதிக வியர்வை, மன குழப்பங்களை ஏற்படுத்தும். அதனால் பதப்படுத்திய தேனையே உபயோகியுங்கள்.

  6. முந்திரி

  6. முந்திரி

  முந்திரி என்றாலே முக சுவையான கொட்டை என்பர். இதிலும் ஆபத்து உள்ளது என்பதே அதிர்ச்சி. முந்திரியை பச்சையாக சாப்பிட்டால் விஷமாக கருதப்படும். நல்ல முறையில் சுத்தம் செய்யப்பட்ட முந்திரியை கடையில் வாங்க வேண்டும். இல்லையென்றால் இதில் உள்ள உருஷியோல் (urushiol) உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

  7. ஜாதிக்காய்

  7. ஜாதிக்காய்

  ருசிக்காக அதிக அளவில் ஜாதிக்காயை உணவில் எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கை தரும். 0.2 அவுன்ஸ் சாப்பிட்டாலே வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தலை வலி, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவை வரக்கூடும். எனவே ஜாதிக்காயை சமையலில் அதிகம் சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

  8. மரவள்ளி கிழங்கு

  8. மரவள்ளி கிழங்கு

  மரவள்ளி கிழங்கில் சிப்ஸ் செய்து தந்தாலே அனைத்து வயதினருக்கும் ரொம்ப பிடிக்கும். இவ்வளவு ருசி மிகுந்த இதன் வேர் மற்றும் இலைகளில் அதிக சைனட் (cyanide) தன்மை உள்ளது. ஆதலால் இவற்றை நீக்கிவிட்டு சமையலில் பயன்படுத்தினால் நலம் தரும். இல்லையேல் பல உடல் உபாதைகள் ஏற்படுத்தி மரணத்தை கூட தரலாம்.

  9. பால்

  9. பால்

  உடலுக்கு நலம் தரும் உணவு பொருட்களில் ஒன்று இந்த பால். ஆனால் பதப்படுத்தப்படாத பாலை குடிக்க கூடாது. அதனை மீறி குடித்தால் அதில் உள்ள ஈ- கோலி(e.coli) பாக்டீரியா கொடூரமான நோய்களை உருவாக்கும். மேலும் எப்போதும் பாலை நன்கு சூடு செய்தே குடிக்க வேண்டும். பாலை பச்சையாக குடித்தால் எண்ணற்ற கிருமி தொற்றுகளால் அவதிப்படுவீர்கள்.

  10. மிளகாய்

  10. மிளகாய்

  இதில் கேப்சைசின் (capsaicin) என்ற வேதி பொருள் நிறைந்துள்ளது. மிளகாயை அதிக உணவில் சேர்த்து கொண்டால் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் குடலில் புண்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளது.

  எனவே மேலே குறிப்பிட்ட உணவுகளை அதன் பக்குவத்திற்கு ஏற்ப பயன்படுத்துதல் நல்லது. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: health food poison உணவு
  English summary

  10 Foods You Didn't Know Could Kill You

  Foods Most Likely to Cause Food Poisoning..! While some should be avoided at all costs, others are just a matter of learning how much to eat, and how to prepare them.
  Story first published: Tuesday, July 31, 2018, 16:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more