Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
ஜிம் போறதுக்கு முன்னால சாப்பிட வேண்டிய உணவுகள்!
உடற்பயிற்சிக்கு முன்னால் சாப்பிடவேண்டியவை பற்றிய சில குறிப்புகள்
ஃபிட்னஸ் என்று வந்துவிட்டாலே பலருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி, ஜிம் செல்வதற்கு முன்னால் சாப்பிட வேண்டுமா? என்பது தான். ஏற்கனவே உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கவே ஜிம் செல்கிறோம்.

இந்த நேரத்தில் மீண்டும் கலோரிகளை அதிகப்படுத்தலாம் என்று நினைத்து பலரும் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர். இது முற்றிலும் தவறானது.

ஏன் சாப்பிட வேண்டும் ? :
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அதிகப்படியான வியர்வை வரும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்திடும் இதனை ஈடுக்கட்ட ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உறிஞ்சிக் கொள்ளும்.
காலை உணவு சாப்பிடாமல் செல்லும் போது ஏற்கனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். அதோடு எனர்ஜிக்காக தசைகளின் திசுக்களை உறிய ஆரம்பித்துவிடும். இதனால் போதுமான எனர்ஜி கிடைக்காமல் மயக்கம் ஏற்படும்.

எவ்வளவு சாப்பிட வேண்டும் ? :
ஜிம் போவதற்கு முன்னால் சாப்பிடுபவர்கள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது உண்ணும் உணவின் அளவைத் தான். அதிகமாக சாப்பிட்டாலும் மிகக்குறைவாக சாப்பிட்டாலும் பிரச்சனையே.

எப்போது சாப்பிட வேண்டும் ?:
சாப்பிட்ட உணவின் குளுக்கோஸ் ரத்தத்தில் சேர ஓரளவு செரிக்க 15 முதல் 20 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிடலாம். உணவு எடுத்துக் கொண்டே உடனடியாக கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

வாழைப்பழம் :
எளிதில் செரிக்ககூடியது. அதோடு இதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. இவை உடலில் உள்ள திசுக்கள் துரிதமாக செயல்பட உதவுகிறது. காலை நேரத்தில் உடற்பயிற்சிக்கு செல்பவர்களுக்கு வாழைப்பழம் பெஸ்ட் சாய்ஸ்.
இதில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் ஸ்டார்ச் உடற்பயிற்சியின் போது தேவைப்படும் எனர்ஜியை கொடுத்திடும்.

ஓட்ஸ் :
ஓட்ஸில் ஃபைபர் இருக்கிறது அவை உங்கள் உடலுக்கு கார்போஹைட்ரேட் வழங்கிடும். உடற்பயிற்சி செய்யும் போது குறைந்திடும் எனர்ஜியை ஈடுகட்ட ஓட்ஸ் உதவிடும்.

காபி/டீ :
குளுக்கோஸ் அளவை உயர்த்த பயன்படும். இன்ஸ்டண்ட் எனர்ஜியாக செயல்படும்.

ஃப்ரூட் ஸ்மூத்தி :
இதில் அதிகளவு ப்ரோட்டீன் கிடைக்கும் எளிதில் ஜீரணமாகும். இதிலிருக்க கூடிய கார்போஹைட்ரேட் நமக்கு எனர்ஜியை கொடுத்திடும்.

சுண்டல் :
தானியங்களை சாப்பிடலாம். அரை கப் வேக வைத்த தானியங்களில் இருக்கும் சத்துக்கள் ஜிம்மில் செய்யப்படும் பயிற்சிகளை எளிதாக செய்ய உதவிடும்.

முட்டை :
முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடலாம். இவை செரிக்க தாமதம் ஏற்படும். இதனால் உடற்பயிற்சியின் போது மயக்கம் வருவது, எனர்ஜி குறைந்து தலைச்சுற்றல் ஏற்படுவது போன்றவை தவிர்க்கலாம். ஒரு முட்டையில் 4 கிராம் ப்ரோட்டீன் இருக்கும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் :
கடைசி நேரத்தில் சாப்பிடக்கூடியது இது. இன்ஸ்டண்ட் எனர்ஜியை கொடுக்கும் ட்ரைப்ரூட்ஸை பயிற்சி துவங்க ஐந்து நிமிடத்திற்கு முன்னால் கூட சாப்பிடலாம்.

வீட் ப்ரட் :
கோதுமைகளில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. இவை செரிக்க தாமதமாகும் என்பதால் நீண்ட நேரம் எனர்ஜியை தக்க வைத்திருக்க முடியும்.

சாப்பிடும் போது கவனிக்க :
உடற்பயிற்சிக்கு முன்னால் சாப்பிடுவது என்பது, பயிற்சி செய்வதற்கு தேவையான எனர்ஜி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் வயிறு முட்டும் வரை எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போல எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகளையும் சாப்பிடக்கூடாது.



Click it and Unblock the Notifications
