நம் பாரம்பரிய சமையலில் இருக்கும் மருத்துவ குணங்கள்!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

இன்றைய அவசர யுகத்தில் சமையல் என்பது வயிற்றை நிறைப்பதற்காக மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது.

பல்வேறு பதப்பபடுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுவையூட்டிகள் வருகையால் பாரம்பரிய முறையில் சமைப்பதை பலரும் விரும்புவதில்லை. பாரம்பரிய இந்திய உணவுகள் காலப்போக்கில் அழிந்து வருகிறது.

ஏன் பாலில் பூண்டு சேர்த்து குடிக்கச் சொல்கிறார்கள் என்று தெரியுமா?

நமது பாரம்பரிய சமையலில் அறுசுவைக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. அறுசுவைகளில் ஒன்றான காரத்தை பற்றி இப்போது காண்போம்.

Medicinal properties of Kitchen ingredients

காரமான உணவுகள் எப்போதும் நமது நாக்கை சுண்டி இழுக்கும். காரமான உணவுகளுக்கு மருத்துவப்பலன்கள் ஏராளம். நமது பாரம்பரிய சமையலில் உபயோகித்த ஒவ்வொரு மசாலாப்பொருளிலும் சுவையோடு சேர்த்து ஆரோக்கியமும் இருந்தன. இதனால் காரமான உணவுகள் பலராலும் விரும்பப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.மஞ்சள் :

1.மஞ்சள் :

மஞ்சள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது சமையலில் பயன்படும் ஒரு பொருள். இதை மருத்துவத்திலும் பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் மட்டுமில்லாமல் சீனாவிலும் மஞ்சளை மருந்தாக பயன்படுத்தினர்.

மஞ்சள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி. அது வீக்கத்தையும் குறைக்கிறது. கீல்வாதம், பெருங்குடல் புண் , செரிமான கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உபயோகப்படுகிறது.

மஞ்சள் பித்தப்பையில் பித்த நீர் ஓட்டத்தை சீராக்குகிறது. வீக்கத்தை குறைக்கிறது. செரிமானத்தை சீராக்குகிறது. புற்று நோய்க்கு எதிரான இதன் தன்மையை குறித்து புற்றுநோய்கள் ஆய்வகத்தில் ஆராயப்படுகின்றது.

2.பூண்டு :

2.பூண்டு :

பூண்டு இதய நோய் வராமல் காப்பதில் மிகச் சிறந்த ஒரு பொருள். அதிரோஸ்கிளிரோஸ் என்று சொல்லப்படும் தமனிகள் கடினப்படுத்துதலும் ஏற்படாமல் தடுக்கிறது. பூண்டு இரத்தத்தில் கொலெஸ்ட்ரோல் அளவை குறைக்கிறது. இதனை தெளிவுபடுத்த ஆராய்ச்சிகள் இல்லை .

பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளி தொல்லைகளில் இருந்து தடுக்கவும் அதிலிருந்து மீண்டு வரவும் பூண்டு ஒரு சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூண்டு சிறந்த ஆக்ஸிஜனேற்றி . ஆய்வக பரிசோதனையில் பூண்டுக்கு புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உண்டு என்று கண்டுபிடிக்க பட்டுள்ளது. பூண்டு அதிகம் உண்பவர்களுக்கு பெருங்குடல், வயிறு மற்றும் உணவுக்குழாயில் புற்று நோய் வருவது குறைவாக காணப்படுகிறது. குடல்புழுக்கள்,மற்றும் பூஞ்சை தோல் நோய் போன்ற நோய்களுக்கும் பூண்டு ஒரு சிறந்த மருந்து.

3. இஞ்சி:

3. இஞ்சி:

இஞ்சிக்கு குமட்டலை எதிர்க்கும் சக்தி உண்டு, மல சிக்கல் மற்றும் கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றில் இருந்து மீட்கிறது. இஞ்சி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. கீல்வாதம் உள்ளவர்கள் இஞ்சியை பயன் படுத்தும் போது அவர்கள் வலி குறைவதாகவும், வலி மாத்திரையின் பயன்பாடு குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. வெந்தயம் :

4. வெந்தயம் :

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் வெந்தயம் சேர்த்த உணவுகளை உட்கொண்ட பிறகு அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சில முதற்கட்ட ஆய்வுகள், வெந்தயம் இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களை குறைப்பதாக கூறுகின்றன. நெஞ்செரிச்சலின் குறியீடுகளை வெந்தயம் சீராக்குகிறது.

5.இலவங்கப்பட்டை:

5.இலவங்கப்பட்டை:

பட்டை என்று அழைக்கப்படும் இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டது . இதனை நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கும்போது நல்ல பலனை தரும்.

மேலே குறிப்பிட்ட பொருட்களை நமது தினசரி உணவுகளில் சேர்த்து நமது ஆரோக்கியத்தை பாதுகாப்போம். இதனை பயன்படுத்துவதால் மருந்துகள் மாத்திரைகள் போல் இதன் முடிவுகள் உடனடியாக தெரியாவிட்டாலும் நிச்சயமாக எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படாது என்பது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal properties of Kitchen ingredients

Medicinal properties of Kitchen ingredients
Story first published: Friday, August 11, 2017, 11:59 [IST]