உருளைக் கிழங்கை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் இந்த நோய்கள் குணமாகும்!!

Written By:
Subscribe to Boldsky

எல்லாருக்கும் உருளைக் கிழங்கு பிடிக்காமல் இருக்காதா? பெரும்பாலோனோர் அதனை வறுத்தும், அவித்தும் சாப்பிடுவதை விரும்புவார்கள்.

ஆனால் அதனை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பலவித நோய்கள் குணமாகின்றன. வராமலும் தடுக்கப்படுகின்றன.

அதனை எப்படி தயார் செய்வது மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமென்றால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆர்த்ரைடிஸ் வலி :

ஆர்த்ரைடிஸ் வலி :

ஆர்த்ரைடிஸான்ல் உண்டாகும் மூட்டு இணைப்புகளில் வலி மற்றும் கழுத்து, தோள்பட்டைகளில் உண்டாகும் வலிகளை குறைக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் மூட்டு மற்றும் எலும்பு வலிகளால் பாதிக்கப்படுவார்கள். அந்த சமயங்களில் மிகவும் நல்லது.

 அமில கார சம நிலை :

அமில கார சம நிலை :

உடலில் அதிக அமிலத்தன்மை இருந்தால் நுண் கிருமிகள் விரைவில் உருவாகும்.அதற்கேற்ப சூழ் நிலை இருப்பதால் பல மடங்கு பரவி நோய்களை உண்டாக்கும். உருளைக் கிழங்கு சாறு குடிப்பதால் அமிலத்தன்மை குறைந்து அமில காரச் சம நிலை சமமாகும். இதனால் உண்டாகும் தொற்றுக்கல் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.

சரும தேமல் :

சரும தேமல் :

சருமத்தில் தொற்றினால் அல்லது அலர்ஜியினால் உண்டாகும் தேமல், படை மற்றும் அலர்ஜி இருக்குமிடத்தில் உருளைக் கிழங்கு சாறை தினமும் தடவி வாருங்கள். விரைவில் அவை சருமத்தை குணப்படுத்தும். தொற்றை போக்கும்.

வாத ரோகம் (Gout)

வாத ரோகம் (Gout)

யூரிக் அமிலம் சில பிரச்சனைகளால் உப்பாக மூட்டுகளின் இணைப்பில் தங்கி வலியை உண்டாக்கும். குறிப்பாக கால் கட்டை விரலில் உண்டாகும் இந்த (Gout) பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இந்த உருளைக் கிழங்கு சாறு. இது யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. சிறு நீரகத்தையும் சுத்தப்படுத்தும். காலை, மாலை என இரு வேளை இந்த சாறை அருந்துங்கள்.

நச்சுக்கள் வெளியேற :

நச்சுக்கள் வெளியேற :

உடலில் தங்கப்படும் நச்சுக்கள் மோசமான எதிர்மறை விளைவே நமக்கு தரும். அவற்றை எளிய முறையில் அகற்ற வேண்டுமென்றால் நீங்கள் உருளைக் கிழங்கு சாறை தினமும் குடித்துப் பாருங்கள்.

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஒரு நடுத்தர உருளைக் கிழங்கை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.இதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் இதனை வடிகட்டி பருகவும். உங்களுக்கு உடலில் போட்டாசியம் அதிக அளவு அல்லது குறைவான அளவு இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of Raw potato juice if you drink regularly

Health benefits of Raw potato juice if you drink regularly
Subscribe Newsletter