Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சணல்ல கயிறு திரிச்சு பாத்திருப்பீங்க!! சாப்பிட்டு பாத்திருக்கீங்களா? இதப் படிச்சா சாப்பிட செய்வீங்க!
சணல் உலகம் முழுவதும் பயிரிடப்படும் தாவரம். சணலிலிருந்து நார், எண்ணெய், மெழுகு துணி, என பல உபயோகமாக பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சணல் விதைகள் நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது என தெரியுமா உங்களுக்கு.

இதிலுள்ள சத்துக்கள் !!
போலேட், வைட்டமின் B6, நியாஸின், ரிபோப்லாவின், வைட்டமின் ஈ, இரும்பு சுவையான ஆதாரமாக இருக்கிறது , கால்சியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற பலவித சத்துக்கள் அமையப்பெற்றிருக்கின்றன. இப்படி சத்துக்கள் நிறைந்த சணல் விதையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?

இதய நோய்களை துரத்தும் :
நீங்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 என இரு நல்ல கொழுப்புகளும் சமமாம அமையப் பெற்ற ஒரே தாவரம் சணல் விதைதான். ஆத்ரோஸ்கெலரோஸிஸ், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்கின்றன.

ஜீரண மண்டலம் :
உடலுக்கு மிகவும் தேவையான மிகச் சிறந்த நார்சத்தைப் பெற்றுள்ளது. இதிலுள்ள நார்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தும். அதுபோல் பைல் அமிலத்தை சுரக்கச் செய்வதால் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் LDL கொழுப்பை குறைக்கிறது.

தூக்கமின்மை :
இன்றைய காலத்தில் தூக்கமின்மை என்ற பெரிய வியாதியால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சணல் விதைகளிலுள்ள மெக்னீசியம் தூக்க ஹார்மோனான மெலடோனினை சுரக்க உதவி செய்கிறது. இதனால் தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு அருமையான மருந்தாகவும் சணல் விதைகள் பயன்படுகிறது.

ரத்த சோகை :
சணல் விதைகளில் அதிக இரும்புச் சத்து உள்லது,. ரத்த சோகைக்கு மிக முக்கிய காரணமான இரும்புச் சத்து குறைப்பாட்டை சணல் விதைகளை சாப்பிடுவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

உடல் எடை :
சணல் விதைகள் முழுவதும் புரதத்தால் ஆனது. அதுபோல் குறைந்த சோடியம் கொண்டது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதான் கொழுப்பு உறிஞ்சபடாமல் தடுக்கப்படுகிறது, கொழுப்பு கரைக்கப்பட்டு உடல் பருமன் ஏற்படாதவாறு காக்கிறது.

தசை வலிமை :
6 பேக், ஜிம் பாடி மெயின்டெயின் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் சணல் விதைகள் வரப்பிரசாதம். இது உடலில் தசைகளுக்கு வேகமாக வலிமை சேர்க்கிறது. தசைகளுக்கு தேவையான புதிய திசு வளர்ச்சியை உண்டாக்குவதால் வேகமாக தசைக் கட்டுகள் உருவாகின்றன.

புற்று நோய் :
சணல் விதை மற்றும் எண்ணெயில் நிறைய ஃபீனாலிக் அமிலம் இருப்பதால் அவை ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து பலவித புற்று நோய்களிலிருந்து நம்மை காக்கின்றன.



Click it and Unblock the Notifications