எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது முன்னோர்கள் மருந்து என எதையும் செயற்கையாக தயாரித்தது இல்லை. உண்ணும் உணவிலும், பருகும் பானத்தையும் தான் ஏறக்குறைய கொடுத்து நோய்களையும், உடல்நல குறைபாடுகளையும் குணப்படுத்தினர்.

ஐந்தே நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க.. தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...

மேலும், சரியான கால இடைவேளைகளில் அவர்கள் முக்கியமான மூலிகைகளை உட்கொள்ள மறந்ததே இல்லை. உடலில் உள்ள நச்சுக்களை போக்கி வருமுன் காப்போம் என்ற திட்டத்தை அன்றே பின்பற்றியவர்கள் நமது முன்னோர்கள்.

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!

இயற்கை மருத்துவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது. தினமும் இதை காலை வேளையில் தவறாமல் பின்பற்றி வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

தேவையான பொருட்கள்: நீர், எலுமிச்சை சாறு, இரண்டு டீ ஸ்பூன் உப்பு. இவற்றை நன்கு கலந்து குடித்த சில நிமிடங்களிலேயே ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

இந்த கலவை மூலம் உடலில் செரோடோனின் அளவு அதிகமாகும். இது உடலில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

காரணிகள்

காரணிகள்

ஒற்றை தலைவலி வர காரணிகள்: நீர் வறட்சி, மன அழுத்தம், ஆல்கஹால் உட்கொள்ளுதல், அழற்சி, மினரல்ஸ் மற்றும் வைட்டமின் குறைபாடு.

நீர் அளவு

நீர் அளவு

தினமும் சரியான அளவு நீரை குடித்து வந்தாலே உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடியும். நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சோர்வு, மயக்கம் போன்றவை கூட ஏற்படுகிறது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

எலுமிச்சையில் ஏராளமான வைட்டமின் சி சத்து இருக்கிறது, இது வைட்டமின் குறைபாட்டை குறைக்கவல்லது. மேலும், இது ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வளிக்க கூடியதும் கூட.

செரிமானம்

செரிமானம்

தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படுகின்றன. இது செரிமானத்திற்கு உதவும் முதல் படி ஆகும். இதனால் அஜீரண கோளாறுகளுக்கு தீர்வுக் காண முடியும்.

உறக்கம்

உறக்கம்

உடலில் அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை உப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால் இரவு நல்ல உறக்கம் கிடைக்கப் பெறலாம்.

நச்சுக்களை போக்க உதவுகிறது

நச்சுக்களை போக்க உதவுகிறது

உடலில் உள்ள நச்சுக்களை போக்க இந்த பானம் உதவுகிறது. எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

உப்பில் இருந்து கிடைக்கப்படும் முறையான மினரல் சத்துக்கள் இன்சுலின் அளவை சீராக்குகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்க கூடியது ஆகும்.

இதய நலன்

இதய நலன்

உப்பில் இருக்கும் எதிர்மறை அயனிகள், சீரற்று இருக்கும் இதய துடிப்பை சீராக்க செய்கிறது, மற்றும் உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.

தாம்பத்திய உறவு

தாம்பத்திய உறவு

இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. இது இயற்கை முறையில் கருவளத்தை ஆண், பெண் இருவர் மத்தியிலும் ஊக்குவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why You Should Drink Warm Lemon Salt Water In The Morning

Why You Should Drink Warm Lemon Salt Water In The Morning? read here in tamil.