கணையத்தின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது உடலிற்கு இந்த பாகம் தான் முக்கியம், இந்த பாகம் முக்கியமனாது அல்ல என்று எதுவும் இல்லை. நமது ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அணைத்து பாகங்கள் மீதும் சரியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகள் மட்டும் உட்கொண்டால் போதுமா என்றால், இல்லை. ஆம், ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

கணையம் என்பது செரிமான மண்டலத்தின் ஒரு அங்கம். இது முக்கியமான என்ஸைம்கள் மற்றும் ஹார்மோன்களை தயாரிக்கிறது. மேலும், இது தான் இரத்த ஓட்டத்தில் முக்கியமான திரவங்களை நேரடியாக சேர்க்கிறது. எனவே, இதன் ஆரோக்கியம் நமக்கு மிகவும் முக்கியமானது..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலியில் அற்புதமான அளவில் சல்பர் காம்பவுண்டுகள் இருக்கின்றன. இவ கணையத்தில் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்க உதவுகின்றன. மேலும், ப்ரோக்கோலி கணையத்தின் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.

பூண்டு!

பூண்டு!

பூண்டில் இருக்கும் பயோ ஆக்டிவ் காம்பவுண்டான அல்லிசின் (allicin) ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது கணையத்தின் ஆரோக்கியம் மேம்பட, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவுகின்றன. மேலும், இதிலிருக்கும் சல்பர், அர்ஜினைன், ஒலிகோசகரைடுகள், ஃபிளாவனாய்டுகளின், மற்றும் செலினியம் போன்றவை கணையத்தின் திசுக்களில் நேர்மறை தாக்கங்கள் உண்டாக செய்கின்றன.

சிவப்பு திராட்சை!

சிவப்பு திராட்சை!

சிவப்பு திராட்சைகளில் ரெஸ்வெரடால் எனும் சக்திமிக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இவை இரத்த நாளங்கள் சேதம் அடையாமல் பார்த்துக் கொள்கின்றன.

சர்க்கரைவள்ளி கிழங்கு!

சர்க்கரைவள்ளி கிழங்கு!

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டின் கணைய புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கிறது. இது ககணையத்தை பாதுகாத்து, உடலுக்குள் சர்க்கரை அளவு சீராக செலுத்துகிறது. மேலும், செரிமான மண்டலத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இது பயனளிக்கிறது.

டோஃபூ!

டோஃபூ!

டோஃபூவில் குறைந்த கொழுப்புள்ள புரதம் இருக்கிறது. இது கணையத்தின் புத்துயிர் பெற, வலுவிழப்பில் இருந்து மீண்டு வர உடஹ்வுகிறது. ஆனால், அதிகமாக குறைந்த கொழுப்பு புரத உணவுகள் சாப்பிடுவதும் கணையதிற்கு நல்லதல்ல என்பதை நீங்கள் மறந்துவிட கூடாது.

மற்ற உணவுகள்...

மற்ற உணவுகள்...

காளான், கீரை, தயிர், ப்ளூபெர்ரி, செர்ரி, தக்காளி போன்ற உணவுகளும் கணையதிற்கு நன்மை உண்டாக்கும் உணவுகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Foods Can Help Heal Your Pancreas?

காளான், கீரை, தயிர், ப்ளூபெர்ரி, செர்ரி, தக்காளி போன்ற உணவுகளும் கணையதிற்கு நன்மை உண்டாக்கும் உணவுகள் ஆகும்.
Story first published: Friday, October 7, 2016, 13:00 [IST]
Subscribe Newsletter