Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
உலக மக்கள் கண்டு வியக்கும் இந்தியர்களின் 5 உணவுப் பழக்கங்கள்!
இந்தியர்கள் அனைத்தையும் ரசித்து, ரசித்து செய்பவர்கள். கட்டிடக்கலை,மருத்துவம், கல்வி, கலைகள் என்று மட்டுமில்லாமல், சமையலிலும் கூட பெரும் ரசனைக் கொண்டவர்கள் இந்தியர்கள். அந்தந்த காலத்திற்கு ஏற்ற அனைத்து உணவு மற்றும் பானங்கள் நமது இந்திய உணவு முறையில் இருக்கின்றன.
தினமும் தோசை சாப்பிட விரும்பும் நபரா நீங்க? அப்ப இதப்படிங்க!!!
இவை அனைத்தும் இயற்கையாக தயார் செய்து சமைக்கக் கூடியவை. மற்றும் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே நமது பழக்கவழக்கங்களை பின்பற்றி நன்மை அடைய முனையும் போது தான், நாம் அதை மெல்ல, மெல்ல ஒதுக்கி வருகிறோம் என்பது வருந்தத்தக்கது....

மசாலா பொருட்கள்
கொத்தமல்லி, மஞ்சள், வெந்தயம், கடுகு, சீரகம், ஏலக்காய், சிவப்பு மிளகு, இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் என உடல்நலத்திற்கு மற்றும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருந்துகளை தான் உணவில் சர்வ சாதாரணமாக சேர்ப்பதால். உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவது குறைகிறது. மற்றும் பெரும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

கறிவேப்பிலை, மஞ்சள்
பெரும்பாலும் அனைத்து உணவிலும் நாம் கறிவேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்க்கும் உணவுப் பழக்கம் வைத்திருக்கிறோம். இவை. நோய் எதிர்ப்பு அதிகரிக்க, இரத்த அழுத்தம் குறைய, கொலஸ்ட்ரால் குறைய, இதய நலன் பாதுகாக்க பல வகைகளில் உதவுகின்றன.

மஞ்சள்
மஞ்சளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குணம் இருக்கிறது. மேலும், இது கொழுப்பாக மாறியிருக்கும் கலோரிகளை கரைக்கவும் உதவுகிறது.

புதிய உணவு
இந்தியர்கள் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்து உண்ணும் பழக்கத்தை பின்பற்றுவதில்லை. தினமும் சமைக்கும் பழக்கம் இந்தியர்களுக்கு இருக்கிறது. பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட மற்றும் ஃபிரிட்ஜில் வைத்து உண்ணும் உணவுகள் உடல்நலத்தை நாள்பட கெடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.

புதிய உணவு
இதனால் தான் பெரும்பாலும் புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு போன்ற கோளாறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

இந்திய பானங்கள்
நமது நாட்டு குடி பானங்கள் அனைத்தும் இயற்கையானவை, இளநீர், மோர், எலுமிச்சை நீர், மசாலா தூத், டீ என அனைத்தும் இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுபவை. மேலும், இவை அனைத்தும் வெவ்வேறு இயற்கை சுவை கொண்டவை. ஒவ்வொரு காலநிலைக்கு உடலுக்கு நன்மை அளிப்பவை.

சப்பாத்தி
சப்பாத்தி, ரொட்டி / ஃபுல்கா இவை டயட்டிற்கு சிறந்த உணவுகள். இதில் எண்ணெய் இல்லை, ஆதலால் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்பு உடலில் சேராது. மேலும், இதிலிருக்கும் புரதம் மற்றும் கார்ப்ஸ் எளிதாக செரிமானம் ஆகக் கூடியவை.

சட்னி
உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்திய உணவில் விரும்பும் விஷயங்களில் முதன்மையானது சட்னி வகைகள். ஒரு உணவிற்கு பலவகை சட்னி இந்தியாவின் சமையல் முறை மற்றும் இவை அனைத்தும் வெவ்வேறு சுவைகள் கொண்டவை. நமது இந்திய பாரம்பரிய சட்னி வகைகள் நாவிற்கு ருசியும், உடலுக்கு நன்மையையும் சேர்ப்பவை ஆகும்.



Click it and Unblock the Notifications