Latest Updates
-
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்!
நுரையீரல் தொற்றை தடுக்கும் சூப்பர் உணவுகள் எது எனத் தெரியுமா?
சூப்பர் உணவுகள் என்றால் என்ன? இளமையை தருவதா? குறிப்பிட்ட உறுப்பிற்கு பலம் தருவதா?
விட்டமின், மினரல், புரோட்டின் என உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் தருவதுதான் சூப்பர் உணவாகும்.
எல்லா வித சத்துக்களும் அடங்கியவைகளாக இருக்க வேண்டும். விட்டமின், மினரல், அமினோ அமிலங்கள், ஃபைடோ சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என எல்லாம் இருக்க வேண்டும்.

உடலின் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். அப்படியான உணவுகள் சூப்பர் உணவுகள் ஆகும். அவ்வாறான உணவுகள் எவையெனத் தெரியுமா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பருவகால உணவுகள் :
அந்தந்த பருவத்தில் விளையும் உணவுப் பொருட்கள் மிக அற்புதத்தை உங்கள் உடலுக்கு தருகிறது.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து, குளிர்சாதனப் பெட்டி மற்றும் ரசாயன பதப்படுத்தும் பொருட்கள்(chemical preservatives) ஆகியவற்றால் எல்லா உணவுப் பொருட்களும் எல்லா பருவத்திலும் கிடைக்கின்றன.
அவைகளிலுள்ள ராசயனம் உடலுக்கு தீமையை விளைவிக்கும். குறைவான நேரத்தில் அதிக லாபம் செய்ய சில சுய நல வணிக அமைப்புகள் செய்யும் தந்திரம்.
இதனால் ஒட்டுமொத்த மனித உயிருக்கே தீராத தலைவலி உண்டாக்கும் என்பதை காலம் கடந்து உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.
குளிர் மற்றும் மழைகாலத்தில் நுரையீரலில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே இதற்கேற்ற உணவு எது என தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி :
இவை இந்த பருவத்தில் அதிக விளையும். இவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் பலப்படும். குளிர்கால நுரையீரல் தொற்று உண்டாகாது.

கேரட், கொத்துமல்லி மற்றும் இஞ்சி ஜூஸ் :
இந்த பொருள்களை சாறு எடுத்து குடியுங்கள். கேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்து சிறிய இஞ்சித் துண்டை போட்டு ஜூஸ் தயாரிக்க வேண்டும். இது சக்தியையும் உடல் அசதியையும் போகுகிறது.

மாதுளை :
இந்த பருவத்தில் அதிகம் கிடைக்கக் கூடிய பழம். இதனை சாப்பிடுவதால் பல மருத்துவ ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

பட்டாணி :
பட்டாணியில் வெறும் புரதம் மட்டும் இருக்கிறது என நினைத்துவிடாதீர்கள்.
விட்டமின் கே, சி, ஏ, இரும்பு, கால்சியம், காப்பர், பொட்டாசியம் என பலவிதமான சத்துக்கள் உள்ளது. இது குளிர்காலத்தில் நுரையீரலில் உண்டாகும் அலர்ஜியை தடுக்கிறது.

பசலைக் கீரை :
இதில் பலவித அற்புதமான சத்துக்கள் இருக்கிறது. 30 வகையான ஃப்ளேவினாய்டு கொண்டுள்ளது. புற்று நோயை தடுக்கிறது. தினமும் சேர்த்துக் கொண்டால் ஜலதொஷம் காய்ச்சல் உங்களை நெருங்காது.

கொய்யா :
கிவி ஒரு சூப்பர் உணவு என்று அமெரிக்காவில் எல்லாரும் கொண்டாடி அதனை சாப்பிடுவார்கள். ஆனால் கிவி எல்லா நாட்டிலும் கிடைப்பதில்லை.
அதற்கு ஈடான ஒரு பழம்தான் கொய்யா. கிவியில் எத்தனை சத்துக்களோ அததனையும் கொய்யாவிலும் இருக்கிறது. இதனையும் உங்கள் சூப்பர் உணவில் சேர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
