For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை இன்ஸ்டன்ட் கூலாக மாற்ற இத ட்ரை பண்ணுங்க!

By Hemi Krish
|

சூரியன் தாண்டவத்துல எக்குதப்பா மாட்டிகிட்டு முழிக்கறோமேன்னு புலம்பிட்டு இருக்காதீங்க பாஸ்..என்ன பண்ணலாம்னு கொஞ்சம் மாத்தி யோசிங்க: வெயிலுக்கு குளிர்ச்சியா கலர் கலரா பழச்சாறுகளை வாங்கி கடையில குடிக்கிறோம். ஆனா எப்பவும் ஒரே மாதிரி குடிக்கிறதுக்கு பதிலா இப்படி ட்ரை பண்ணிப்பாருங்க. தர்பூசணி, தேங்காய் நீர்,வெள்ளரிக்காய் ,புதினா எலுமிச்சை சாறு இவை எல்லாம் கலந்த பானம்தான் இப்போ நாம பாக்கப் போறது.

அதுக்கு முன்னடி இந்த பழங்கள்ல என்ன விசேஷ குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?

Watermelon Smoothie

தர்பூசணி :

தர்பூசணியில் 92% நீர் கொண்டுள்ளது. விட்டமின் ஏ, சி, நார்சத்து, பீடா கரோட்டின் ஆகியவைகள் இருக்கு. அதோட நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட், ஃப்ளேவினாய்ட், கரோடின் இவை எல்லாம் இருக்கு. இது உடலில் ஏற்படும் தேவையற்ற மூலக்கூறுகளை, ( free radicals )அழிக்கிறது. புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. மேலும் இது சிட்ருலின் என்ற அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. அது உடலில் படியும் கொழுப்பினைக் குறைக்கிறது. இதயத்திற்கு பாதுகாப்பு தரும். ரத்த அழுத்ததை குறைக்கும்.

வெள்ளரிக்காயும் அதிக நீர்சத்துக் கொண்டது. இதில் 95% நீருள்ளது. விட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் , கே ஆகியவை வெள்ளரியில் உள்ளன. தர்பூசணி மற்றும் வெள்ளரிக்கயுடன் புதினா,எலுமிச்சை சேர்ந்து தயாரிக்கும் இந்த அருமையான பானம் மிகவும் நல்லது,வயிற்றிற்கு குளுமை தருகிறது. இனி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை :

தேவையானவை :

தர்பூசணி துண்டுகள் -2 கப்
வெள்ளரிக்காய் துண்டுகள் -அரைக் கப்
ஃப்ரஷான புதினா இலைகள்- 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் நீர் -அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

தர்பூசணி துண்டுகளை ஜாரில் சேர்க்கவும்
அதனுடன் தேங்காய் நீர் ஊற்றவும்
அதில் வெள்ளரித்துண்டுகள், புதினா இலை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக மிக்ஸியில் அடிக்கவும்.
இப்போது தர்பூசணி-வெள்ளரிக்காய் ஷேக் ரெடி. அதனை ஒரு கிளாஸில் ஊற்றி பருகுங்கள்.

டிப்ஸ்:

வெள்ளரிக்காயை மிக்ஸியில் போடும்போது விதைகளை அகற்ற வேண்டும் என்பதில்லை. அதில் புரோட்டின் அதிகம் உள்ளதால் அப்படியே சேர்க்கலாம். இந்த கலவையில், ஸ்ட்ரா பெர்ரி சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். அதனை உடனடியாக குடித்தால் அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும். தேவைப்பட்டால் ஒரு நாள் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

English summary

Refreshing and Hydrating Watermelon Smoothie to Beat the Summer Heat

How to prepare watermelon-cucumber shake to get their nutrients immediately ..Read and get tips..
Desktop Bottom Promotion