Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தினமும் உணவில் பருப்பு உணவுகளை சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!
நீங்கள் எவ்வளவு பெரிய பிஸ்தாவாக இருந்தாலும் பருப்பாக இருந்தாலும், துவரம்பருப்பு, உழுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, ந்தாமணிக் கடலை, கொண்டைக் கடலை, பட்டாணி, பாசிப்பயறு, வெள்ளைப் பயறு, மொச்சைக் கடலை,கொள்ளு, காராமணிப்பயறு போன்றவரை அன்றாட உணவில் சேர்த்து தான் ஆகவேண்டும்.
ஏனெனில், உங்கள் உடலில் செரிமானம் சீராக நடக்க, பெருங்குடல் இயக்கம் சிறக்க, புரதம், மினரல்ஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க இந்த பருப்பு உணவுகளால் மட்டும் தான் முடியும்...

புரதம்
ஒரு கப் பருப்பில் ஏறத்தாழ 18 கிராம் புரதச்சத்து இருக்கிறது. பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம் கிடைக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.

செரிமானம்
எளிதாக செரிமானம் ஆக உதவும் உணவுகளில் பருப்பு உணவுகள் சிறந்தவை. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

இதய பாதுகாப்பு
பருப்பு உணவுகளில் இருக்கும் போதுமான அளவு ஃபோலேட், மெக்னீசியம் இதய நலனை ஊக்குவிக்கின்றன. ஃபோலிக் அமிலம் இதய சுவர்களை வலுப்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படமால் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயனளிக்கிறது.

இரும்புச்சத்து
இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை வேகவைத்து உண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

மினரல்ஸ், ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ்
மெக்னீசியம், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக பருப்பு உணவுகளில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் எ மற்றும் சி உடலில் சேதமடைந்துள்ள செல்களை புத்துயிர் அளிக்கிறது.

புற்றுநோய்
பருப்பு உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications