Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
தினமும் வாழைத்தண்டை சாப்பிட்டால் எந்தெந்த நோய்களை குணப்படுத்தலாம் ??
வாழைத்தண்டு மருத்துவ குணங்களை கொண்டது. இதயத்தை பாதுகாக்க, கொழுப்பை குறைக்க, என பலவகையில் உபயோகம் தருகிறது. இதில் அதிக நீர்சத்தும் உள்ளதால் வேகமாக உடல் எடை குறையும் நச்சுக்களை வெளியேற்றும்.
வாழை மரத்தில் எந்த பாகம் பலன் தராது என்று கேட்டால் யோசித்தாலும் பதில் கிடைக்காது. காரணம் வாழை மரத்தின் சிறிய துரும்பும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
வேர், தண்டு, இலை, பூ, காய் பழம் என அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

கணக்கிலடங்கா மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. வாழைத்தண்டை சாப்பிடுவதால் ஆரோக்கியம்ட்டுமின்றி நோய்களுக்கும் மருந்தாகிறது எவை என பார்க்கலாம்.

உடல் எடை குறைய :
தினமும் 25 கிராம் வாழைதண்டை பொறியலாக சாப்பிட்டால் உடல் எடை கணிசமாக குறைவதை பார்ப்பீர்கள். 40 கிராம் வரை நீங்கள் வாழைத்தண்டை உண்ணலாம். இதில் உள்ள அதிக நார்ச்சத்து கொழுப்பை குறைக்கிறது. உடல் எடையையும் குறையச் செய்யும்.

இதயத்தை பாதுகாக்கும் :
வாழைத்தண்டிலுள்ள பொட்டாசியம் இதயத்திற்கு கேடு தரும் சோடியம் அளவை குறைக்கும். அதோடு இதயத்தையும் ரத்த அழுத்தத்திலிருந்து காக்கும். ஆகவே இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு வராமல் காக்கப்படுகிறது.

சர்க்கரை வியாதி :
கொழுப்பை அதிக அளவு குறைக்கிறது ரத்தத்தில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துவதால் சர்க்கரை வியாதிக்காரர்கள் வாழைத்தண்டை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நச்சுக்களை வெளியேற்றும் :
உடலில் தங்கும் வேண்டாத கழிவு மற்றும் நச்சுக்களை வெளியேற்ற வாழைத்தண்டு உதவி புரிகிறது.

வறட்டு இருமல் :
வறட்டு இருமல் இரவு தூக்கதை கெடுக்கும். தொண்டையும் புண்ணாகி வீக்கம் உண்டாகிவிடும். இதற்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்து. வாழைத்தண்டில் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் கட்டுப்படும்.

சிறு நீரக கற்கள் :
சிறு நீரகத்தில் கற்கள் இருந்தால் தினமும் வாழைத்தண்டை சாப்பிடும்போது கற்களை கரைத்துவிடும்.

நெஞ்செரிச்சல் :
நெஞ்செரிச்சல் உண்டானால் விரைவில் குணமாக வாழைத்தண்டு ஜூஸ் அருந்துங்கள். இதனால் அமிலத்தன்மையை சமன் செய்து விரைவில் நெஞ்செரிச்சல் குணமாகும்.

ரத்த சோகை :
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். தினமும் வாழைத்தண்டு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சிறு நீரக தொற்று :
சிறு நீரகக் குழாயில் தொற்று ஏற்பட்டால் வாழைத்தண்டு சாறு அருந்தலாம். இது அதிக நீர்சத்தை உண்டாக்கும். இதனால் சிறு நீர் உற்பத்தி அதிகமாகி சிறு நீரகக் குழாயில் தங்கியிருக்கும் கிருமிகளை வெளியேற்றிவிடும்.



Click it and Unblock the Notifications
