Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
முக்கியமான பழங்களும் அவற்றின் பலன்களும் - அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, கடைகளுக்கு சென்றால், நாம் கண்ணில் படும் பழங்களை எல்லாம் வாங்குகிறோம். மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை கொண்டுள்ளது என தெரியுமா? அறிந்து கொள்ள ஆர்வம் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

சோர்வை நீக்கும் மாதுளம்பழம் :
அலுவலக மற்றும் வீட்டு வேலைகளினால் உடலும் மனம் சோர்வடைந்து இருக்கிறதா? அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் அசதியாக இருக்கிறதா? கவலை வேண்டாம்.
இரு வாரங்களுக்கு தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி பாருங்கள். பிறகு சொல்வீர்கள். இருவாரங்களுக்கு முன்னும் பின்னும் இருந்த மாற்றங்களை நன்றாக உணரக் கூடும்.
இவை உடலை சுறுசுறுப்பாக்கிவிடும். மூளையை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை காணாமல் போகச் செய்யும்.
தொப்பையை குறைக்கும் அன்னாசி :
வயிற்றில் தொப்பை மட்டும் குறைய அடம்பிடிக்கிறதா? இதனை முயற்சி செய்து பாருங்கள்.
ஒரு பாத்திரத்தி தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள். கூடவே ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து , கொதிக்க விடுங்கள்.
நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகிவிடும்.
எலும்பு பலமாக பப்பாளி :
பப்பாளிக் காயில் வரும் பால் வாய்ப்புண்ணிற்கு மருந்தாக போடலாம். பப்பாளி காயினை கூட்டாக செய்து சமைத்தால், குண்டான உடல் மெலியும்.
பப்பாளி பழத்தினை குழந்தைகளுக்கு கொடுத்தால், எலும்பு, மற்றும் பல் வளர்ச்சி பலம்பெறும். அதேபோல் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும். குடலிலுள்ள பூச்சிகளை அழிக்கும்.
இதயம் சீராக இயங்க சீதாப் பழம் :
சீதாப் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் சீராக இருக்கும். இதய சம்பந்தமான நோய்கள் தாக்காது என அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.
ஆரம்ப நிலையில் உள்ள காச நோய்க்கு சீதாபழம் அருமையான பலனைத் தருகிறது. காச நோயை குணப்படுத்தும் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின் அடிக்கடி சீதாபழங்கள் உண்டு வந்தால் , உள்ளுறுப்புகளில் இருக்கும் காயங்கள் விரைவில் குணமாகிவிடும்.
இளமையை தரும் சப்போட்டா :
சப்போட்டா சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேலும் சுருக்கங்கள் வர விடாமல் தடுக்கிறது. மேலும் தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தியாகி, அனிமீயாவை போக்குகிறது.
அது போல் என்னதான் நிறைய சாப்பிட்டாலும், ஒட்டிய கன்னங்களுடன் ஒல்லியாக இருப்பவர்கள் தொடர்ந்து சப்போட்டாவை சாப்பிட்டால் பூசிய மெனியுடனும், ஆப்பிள் போன்ற கன்னமும் பெறுவது உறுதி.
உலர் திராட்சை :
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

















