For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்பை கரைத்து, பசியை குறைக்க உதவும் உணவுகள்!!

|

நமது உடலில் பசியை குறைக்கும் தன்மை உடைய ஹார்மோன் தான் லெப்டின். உடல் பருமன் அதிகமாகும் போது இந்த லெப்டின் எனும் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது. லெப்டின் மூலமாக தான் மூளைக்கு பசியை பற்றிய சிக்னல் சென்றடைகிறது.

லெப்டின் உற்பத்தி குறையும் போது இந்த சிக்னல் தடைபட்டு போவதால், மூளைக்கு எப்போது சாப்பிட வேண்டும், உடலுக்கு தேவையான கலோரிகள் எவ்வளவு என்ற அளவு தெரியாமல் போய்விடுகிறது.

உங்கள் நண்பர் வட்டாரத்தில் சிலரை கண்டிருக்கலாம், பசியே எடுக்காமல் வெறுமென சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு லெப்டின் சுரப்பி குறைபாடு இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

உடலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள் உடல் பருமன், நீரிழிவு பிரச்சனை மட்டுமின்றி இந்த லெப்டின் சுரப்பி குறைப்பாட்டையும் ஏற்படுத்துகின்றன. இதனால் உடல் எடை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டை காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொள்வது, பகல் வேளையில் உங்கள் பசியை குறைக்க உதவுகிறது. மேலும் இது குறைவான கலோரிகளை உட்கொள்ளவும் தூண்டுகிறது. இதனால் நீங்கள் வேறு நொறுக்கு தீனிகள் பக்கம் தலை சாய்க்காமல் இருக்கலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு. நீரிழிவு மற்றும் உடல் பருமன் இருப்பவர்கள் ஓட்ஸ் உட்கொள்வது சிறந்தது. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் சரி செய்யவும், அதிகமான பசியை குறைக்கவும் உதவுகிறது.

மீன்

மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உள்ள மீன்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை உடலில் லெப்டின் சுரபிகள் சுரக்க உதவுகிறது. லெப்டின் சுரப்பி பசியை கட்டுபடுத்தும் தன்மை கொண்டது. இதனால், உடலில் அதிகப்படியான கலோரிகள் சேராமல் தவிர்க்க முடியும்.

ஆய்ஸ்டர்ஸ் (சிப்பி உணவு வகை)

ஆய்ஸ்டர்ஸ் (சிப்பி உணவு வகை)

இதில் ஜின்க் சத்து அதிகம் உள்ளது. மேலும் இது உடலில் லெப்டின் சுரப்பி அதிகமாக உண்டாக தூண்டுகிறது. இதனால், பசியைக் கட்டுப்படுத்தவும், உடலில் அதிகப்படியான் கொழுப்பு சேராமல் இருக்கவும் முடியும்.

இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது. உடல்பருமன் மற்றும் நீரிழிவு இருக்கும் நபர்களுக்கு இது பெருமளவில் உதவுகிறது. உங்கள் கார்பஸ் உணவில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சாறு வினிகர் பயன்படுத்தினாலே போதுமானது. இது இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் தன்மை கொண்டதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Melt Body Fats And Kill Hunger

Here are foods that will help to burn fats in the body. To melt fats in the body hormones play an important role in the regulation of hunger.
Story first published: Tuesday, February 2, 2016, 17:24 [IST]
Desktop Bottom Promotion