Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
உங்கள் எனர்ஜி லெவலை அதிகரிக்க நீங்கள் இதையெல்லாம்தான் செய்ய வேண்டும்!!
ஓடியாடி வேலை செய்ய நமக்கு பணம் பொருளை விட உடலில் தெம்புதான் வேண்டும். நிறைய கலோரி கொண்ட உணவுகள் உங்களை நாள்முழுவதும் தெம்புடன் நடமாட வைக்கும் . எந்த மாதிரியான உணவுகள் என பார்ப்போம்.
நாள் முழுவதும் உழைக்க உங்களுக்கு என்ன தேவை? முயற்சி, ஈடுபட்டை தாண்டி உங்களுக்கு தேவைப்படுவது எனர்ஜி. தெம்புடன் இருக்க நீங்கள் கண்டிப்பாக நல்ல உணவை சாப்பிட வேண்டும்.

ஏதோ வயிறு நிறைஞ்சா சரி என்று நினைத்து ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு செய்யும் துரோகம். இதனால் களைப்புடன் வேலை செய்வீர்கள். அதன் விளைவு 0 சதவீத உற்பத்தி திறன்.
நீங்கள் என்ன எப்படி சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

வெறும் வயிற்றுடன் ஓடாதீர்கள் :
இது மிகப்பெரிய தவறு. உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்கள் காலை உணவை தவிர்ப்பார்கள்.
இப்படி செய்வதால் உடல் பருமனாகுமே தவிர இளைக்க முடியாது. அதோடு அன்று நாள் முழுக்க உழைக்க வேண்டிய சக்தியை பெற முடியாமல் உங்கள் உடல் பலவீனப்படும். இதனால் சக்தி குறைந்து களைப்பை உண்டாக்கும்.

விட்டமினா? கார்மோஹைட்ரேட்டா?
விட்டமின் உடலுக்கும் செல்களுக்கும் போஷாக்கை தரும். ஆனால் சக்தியை தராது. சக்தி தர கலோரி தேவை.
கலோரி வேண்டுமென்றால் கார்போஹைட்ரேட் உடலுக்கு அவசியம். ஆகவே காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு சாப்பிடுவது உத்தமம்.

விட்டமின் பி காம்ப்ளக்ஸின் பங்கென்ன?
விட்டமின்களில் பி விட்டமின் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து கலோரியை பிரித்தெடுக்க கோ என்சைம்களை உருவாக்குகிறது.
அதனால் பி காம்ப்லக்ஸ் நிறைந்த உணவுகளை சப்ளிமென்ட்ரியாக சாப்பிட்டால் உணவுகள் ஜீரணமடைய உதவி செய்யும்.

எனர்ஜி தர நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் :
மீன் , வாழைப்பழம், கொண்டைக்கடலை ஆகிய்வற்றை சாப்பிட்டால் அன்று நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் இருக்கலாம்.

எனர்ஜி தர நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் :
கால்சியம் குறைபாடு இருந்தால் உங்களுக்கு தூக்கம் வருவது அதிகரிக்கும். ஆகவே யோகார்ட் மற்றும் காலே போன்ற கீரை உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் இவை தூக்கத்தை தள்ளிப்போடுபவை.

எனர்ஜி தர நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் :
முழுதானியம், நட்ஸ், பீன்ஸ், முட்டை ஆகிய்வற்றை கண்டிப்பாக காலை நேரத்தில் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் யார் செய்வது என்று நினைத்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு யாரும் உறுதி கூற முடியாது. ஆகவே முன்கூட்டியே திட்டமிட்டுசமைத்திடுங்கள். நேரம் மிச்சமாகும். ஆனால் ஆரோக்கியம் நீடிக்கும்.



Click it and Unblock the Notifications
