For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெனோபாஸ் சமயத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் !

|

மெனோபாஸ் , உடல் பருமன் இரண்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏன் பெண்களுக்கு மெனோபாஸின் போது திடீரென உடல் பருமன் ஏற்படுகிறது தெரியுமா?

அந்த சமயத்தில் குறைவாக வளர்சிதை மாற்றம் உண்டாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பது மிகவும் குறைவாக இருப்பதால் உண்டாகும் பலவகையில் உடல் இயக்கங்கள் குறைய ஆரம்பிக்கும். அந்த மாதிரியான சமயங்களில் எப்போதும் போல கலோரி நிறைந்த உணவுகள், உடல்ப்யிற்சி இல்லாமல் இருப்பது என இருந்தால் உடல் பருமன் அதிகரித்துவிடும்.

நீங்கள் பெனோபாஸின் போது சாப்பிடக் கூடாத மற்றும் செய்யக் கூடவைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் நீங்கள் அவசியம் சாப்பிடக் கூடிய ஒரு உணவுபொருள் பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனிப்புக்கு நோ:

இனிப்புக்கு நோ:

ஹார்மோன் முன்னும்பின்னும் சுரக்கும் அந்த நேரத்தில் சர்க்கரை அதிக கலோரியை உண்டு பண்ணும்.

வளர்சிதை மாற்றமும் குறைவாக இருப்பதால் அது எரிக்கப்படாமல் இருக்கும்போது உடல் பருமன், சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் உண்டாக காரணமாகிவிடும்.

ஆகவே தினமும் கேக், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளை அறவே ஒதுக்கி விடுங்கள். வாரம் ஒன்று அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இனிப்பு சாப்பிடுங்கள்.

கொழுப்பில்லா உணவுகள் :

கொழுப்பில்லா உணவுகள் :

கொழுப்பு மிக்க உணவுகள்தான் பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் உடல்பருமனை உண்டாக்குகிறது. சரியான உடல் உழைப்பு அல்லது உடற்ப்யிற்சி இல்லாத போது உடல் குண்டாகிவிடுகிறது.

ஒமேகா- 3, ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பழம், காய்கறிகள் , நார்சத்து தானியங்கள் உங்கள் அன்றாட டயட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்லுங்கள்

30களில் நுணுக்கம் தெரிந்துகொள்ளுங்கள் :

30களில் நுணுக்கம் தெரிந்துகொள்ளுங்கள் :

மெனோபாஸ் காலத்திலும் நீங்கள் இளமையாக இருக்கவேண்டுமென நினைத்தால் 30 களிலிருந்தே நீங்கள் கவனமாக உங்களை பாதுகாக்க வேண்டும்.

சரியான் எடை, நல்ல காய்கறிகள், உடற்பயிற்சி என நீங்கள் 30 களில் பராமரித்தால், மெனோபாஸில் உடல் பருமனை கண்டு அச்சப்பட தேவையில்லை. எனவே ஆரோக்கியத்தை 30 களில் ஆரம்பித்தால், மெனோபாஸ் காலத்தில் உங்களை காப்பாற்றும்.

அதிக அளவு கால்சியம் வேண்டாம் :

அதிக அளவு கால்சியம் வேண்டாம் :

விளம்பரங்களில் பெண்கள் அதிகம் கால்சியம் சாப்பிட வேண்டும் என வலியுறுத்தி கால்சியம் மாத்திரைகளை சாப்பிடச் சொல்வார்கள். ஆனல் எந்த மருத்துவரும் தேவையின்றி பரிந்துரைப்பதில்லை.

மெனோபாஸின் போது கால்சியம் எலும்புகளில் உறியாது இதனால் எலும்புகள் பலமிழக்கக் கூடும். ஆகவே ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் சாப்பிடும், கீரை, பால், நட்ஸ், தேங்காய்பால் ஆகியவைகளிலேயே உள்ளது.

அதிக கால்சியம் சப்ளிமென்ட்ரி சிறு நீரக் கற்கள், மலச்சிக்கல், இதய நோய்கல் வரும் ஆபத்தை தரும்.

சோயா :

சோயா :

சோயா மெனோபாஸ் பெண்களுக்கான அதிசய உணவு. சோயா வில் இயற்கையாக ஈஸ்ட்ரோஜன் உள்ளது. உங்கள் உடலில் சுரக்காத ஈஸ்ட்ரோஜன் குறையை இது நிவர்த்தி செய்யும்.

அதில் தேவையான புரோட்டின், நார்சத்து இருப்பதால் மெனோபாஸிற்கு பிறகு பெண்களைத் தாக்கும் மார்பக புற்று நோய் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating Mistakes During Menopause

What must not to do during menopause and the miracle food to be consumed over 50s
Story first published: Tuesday, September 20, 2016, 11:28 [IST]
Desktop Bottom Promotion