For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோட்டல் சாப்பாடு Vs வீட்டு சாப்பாடு

|

இன்றைய காலங்களில் பெரும்பாலோனோர், வெளியூரிலிருந்து, வந்து நகரங்களில் தங்கி வேலை பார்ப்பவர்களே. தங்குமிடத்தில் எங்கே சமைப்பது? நேரம் எங்கே இருக்கிறது? என சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

ஆனால் அவ்வாறு அசட்டையாக விடுவது பின்னாளில் உங்களுக்கு நோயினைத் தரும் என்பதை அறிவீர்களா? அதுவும் நாள்பட்ட வியாதியான சர்க்கரை வியாதி வரும் என மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுக்கின்றது.

Eat home made food to keep Diabetes away

சர்க்கரை வியாதி என்பது மெது மெதுவாய் ஆளைக் கொல்லும் வியாதி என்றால் மிகையகாது. உடல் பருமனால், சர்க்கரை வியாதி வரும். சர்க்கரை வியாதி வந்தால், அடுத்தடுத்த பல்வேறு வியாதிகளுக்கு அடிபோடும். இது உயிருக்கு உலை வைக்கும்.

ஹோட்டல் , விடுதி போன்ற இடங்களில் உண்ணுவது உங்களுக்கு சக்தியை தருமே தவிர சத்துக்கள் மிகவும் குறைவு. இதனால் உடல் பருமனாகி, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகிறது.

ஆனால் வீட்டுச் சாப்பாடு சுத்தமாகவும் போதிய சத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். வயிற்றுக்கு பாதகம் தராது எனவும் கூறுகின்றனர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த ஆய்வாளர்கள்.

ஹோட்டலில் சாப்பிடுபவர்களை விட, வீட்டுச் சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு 15 சதவீதம் சர்க்கரை வியாதி வருவது குறைவு என கூறுகின்றனர்.

முதல் சில வாரங்களில் இரவு உணவு மட்டும் வீட்டில் சாப்பிடுபவர்களையும், இரவு உணவு வெளியில் எடுத்துக் கொள்பவர்களையும் ஆய்வு செய்ததில் , ஹோட்டலில் சாப்பிடுபவர்களை விட வீட்டில் சாப்பிடுபவர்களுக்கு 15 % சர்க்கரை வியாதி வரும் ஆபத்து குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே போல மதிய உணவுகளையும் வீட்டு உணவை உண்பவர்களுக்கு இன்னும் 10 சதவீதம் குறைவாகவே நோயின் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் செய்யப்படும் உணவை சாப்பிட்டு, முறையான வாழ்க்கை முறை இருந்தால், சர்க்கரை வியாதி வருவது தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் PLOS Medicine என இதழில் வெளிவந்துள்ளது. உண்ணும் முறையைக் பொறுத்தே ஒருவருக்கு சர்க்கரை வியாதி வருவதும், வராமல் தடுப்பதும் சொல்ல முடியும். ஆக உணவுப்பழக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டு , உடலுக்கு உழைப்பைக் கொடுத்து வாழ்ந்தால், நோயை எட்ட வைக்கலாம்.

English summary

Eat home made food to keep Diabetes away

Eat home made food to keep Diabetes away
Story first published: Friday, July 8, 2016, 15:30 [IST]
Desktop Bottom Promotion