Latest Updates
-
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
இந்த 6 உணவுகளும் உங்கள் தலையில் சொட்டை விழுவதை தடுக்கும்!!
சொட்டை மரபியல் ரீதியாகவும் இல்லாமல் நமது பழக்க வழக்கங்களாலும் உண்டாகும். மோசமான ஊட்டச்சத்து கூந்தலை பலமிழக்க வைக்கும். இந்த சமயங்களில் இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.
தலையில் சொட்டை விழுவதற்கு மரபு மட்டும் காரணமாகாது. நம்முடைய வாழ்க்கைமுறையும் சேர்ந்து விளைவை உண்டாக்கும்.
இறுக்கி படிய தலைவாருவதால் கூந்தல் கற்றைகள் பாதிக்கப்பட்டு வேரோடு முடி உதிரும். கூந்தல் பலமோடு இருக்க நல்ல புரத உணவுகள் தேடி சாப்பிடுதல் முக்கியம்.

நல்ல உணவுகள் எவ்வாறு உடல் ஆரோக்கியத்தை தருகிறதோ அதுபோல் கூந்தல் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும். முடி உதிர்தல், சொட்டை ஆகிய்வற்றை தடுக்கும் ஆற்றல் உணவுகளுக்கு உள்ளன. அவ்வாறானெ என்ன உணவுகள் நீங்கள் சாப்பிட வேண்டுமென பார்க்கலாம்.

சால்மன் மீன் :
சால்மன் மீன் திடமான முடிக்கற்றைகள் உருவாக முக்கிய காரணமாகும். அதிலுள்ள அதிக புரதச் சத்து கூந்தலுக்கு பலம் தரும். முடிஉதிர்தல் சொட்டை ஆகிய்வை உருவாகாது.

தேன் :
தேன் கூந்தலின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. பலவீனமான முடியை பலப்டுத்தி திடமான முடிக் கற்றையை தருகிறது. இதனை ஒரு ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டது.

நட்ஸ் :
தொடர்ந்து நட்ஸ் சாப்பிட்டு வந்தால் மரபியல் ரீதியாக வரும் சொட்டை தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே தினமும் கை நிறைய நட்ஸ் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பசலைக் கீரை :
ஒரு ஆய்வு முடி உதிர்தல் மற்றும் சொட்டைக்கு மிகக் குறைந்த இரும்புசத்து மற்றும் விட்டமின் டி2 ஆகியவைகள் காரணம் என்று சொல்கிறது. இவ்விரண்டும் பசலைக் கீரையில் அதிகம் உள்ளன.

ஒயிஸ்டர் :
ஜிங்க் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையாகும். ஜிங்க் பற்றாக்குறையாலும் சொட்டை உருவாக காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஜிங்க் மிக அதிக அளவில் ஒயிஸ்டர் என்ற கடல் வகை உணவுகளில் இருக்கிறது.

எண்ணெய் :
பூசணி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய்வைகள் கூந்தலுக்கு தேவையான ஊட்டசத்தை தருவதால் அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.



Click it and Unblock the Notifications
