கண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

இன்று கண்பார்வையில் ஏதேனும் சிறிய குறைபாடு ஏற்பட்டால் கூட உடனே, ஏதேனும் பிரபல தனியார் கண் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து, கண்ணாடி அல்லது காண்டக்ட் லென்ஸ் அணிந்துக் கொள்வது என்பதை பலரும் பெருமையாக கருதி வருகிறார்கள்.

நமது தாத்தா, பாட்டி அறுபதை தாண்டியும் கூட கண்ணாடி அணியாமல் இருந்து வந்தனர். அதற்கு காரணம் அவர்கள் உணவில் சேர்த்து உண்டு வந்த வைட்டமின் சத்துகள் தான். கண் பார்வைக்கு மிகவும் நல்லது வைட்டமின் உணவுகள். அதிலும் முக்கியமாக வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் பால்

பாதாம் பால்

வாரத்தில் இரண்டு முறை பாதாம் பால் குடித்து வந்தால் கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம். பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ சருமத்திற்கும் மட்டுமின்றி கண்களுக்கும் நல்ல பயனளிக்கிறது. இதோடு கொஞ்சம் மிளகும் சேர்த்து பருகலாம்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கண்களுக்கு நன்மை விளைவிக்கும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்தது. கேரட் ஜூஸ் உடன் கொஞ்சம் தேங்காய் தூள் மற்றும் தேன் கலந்து பருகி வந்தால் கண்களில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை விரைவாக சரி செய்ய முடியும்.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம்

இரவே நீரில் பெருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்துவிடவும். பிறகு காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்த நீரை பருகுவதால் கண்பார்வையை மேன்மையடையும்.

நெல்லிக்காய் பால்

நெல்லிக்காய் பால்

நெல்லிக்காய் பால் கண்களுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் பாலை பருகுவதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, கண் பார்வையும் மேன்மையடையும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

கண் பார்வை மேலோங்க, ஓரிரு துளி ஆமணக்கு எண்ணெய்யை கண்ணில் ஊற்றலாம். கண்ணெரிச்சல் உள்ளவர்கள் இதை பின்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ உணவுகள்

மீன், பாதாம்,கேரட், முட்டை, பப்பாயா போன்ற உணவுகள் வைட்டமின் ஈ சத்து மிகுதியாக உள்ள உணவுகள் ஆகம். இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை மேலோங்கும், கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்.

வைட்டமின் ஏ உணவுகள்

வைட்டமின் ஏ உணவுகள்

கொய்யா, ஆரஞ்சு, அன்னாசிப்பழம், சிவப்பு மிளகாய், மிளகு போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ சத்து அதிகம். இது வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாட்டினை சரி செய்ய உதவுகிறது.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி உணவுகள்

தர்பூசணி, பால், தக்காளி, பப்பலி மாஸ் (Grape Fruit), கீரை போன்றவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம். இவை கண்களுக்கு நல்ல பலன் தரவல்லவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vitamins Health Tips That Good For Your Eyes

Do you have eye problems? Then you should know about the vitamin health tips that good for your eyes.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter