இறைச்சி பிடிக்காதா? ரொம்பவே நல்லது நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இது தான்!!!

Posted By:
Subscribe to Boldsky

புரதம் அனைவரது உடலுக்கும் தேவையான அத்தியாவசிய ஊட்டசத்து ஆகும். பெரும்பாலும் இது மீன், சிக்கன் போன்ற இறைச்சி உணவுகளின் மூலமாக தான் நம்மில் பலர் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அதைவிட சைவ உணவுகள் சிலவற்றில் புரதம் நிறைந்துள்ளது.

தப்பி, தவறியும் கூட இந்த ஐந்து உணவை சாப்பிட்டுவிடக் கூடாது? ஏன் என்று தெரியுமா??

இது, உடல் வலிமை அளிக்கவல்லது, கண் பார்வைக்கு சிறந்தது புரதச்சத்து. ஒருவேளை நீங்கள் நான்-வெஜ் பிரியராக இருந்தால் புரட்டாசி மாதத்தில் இந்த உணவுகளின் மூலம் புரதச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ பிரியர்கள் வருடம் முழுக்க கூட இவற்றை டயட்டில் சீரான முறையில் சேர்த்துக் கொள்ளலாம்...

இந்த உணவுகளை எல்லாம் வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்றால் அது பச்சை காய்கறிகள் தான். இவற்றில், புரதம் மட்டுமின்றி, வைட்டமின், நார்சத்து போன்றவையும் இருக்கின்றன. இதனால், உடல் சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, செரிமானம், குடலியக்கம் போன்றவையும் சீராக நடக்கிறது.

பட்டாணி

பட்டாணி

பட்டாணியில் நல்ல புரதச்சத்து இருக்கிறது. பட்டாணியை நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். உணவில் சுவையை சேர்ப்பது மட்டுமின்றி, உடலுக்கு வலுவையும் சேர்க்கிறது பட்டாணி.

சோளம்

சோளம்

சோளம் வருடம் முழுதும் கிடைக்கும் ஓர் உணவாகும். ஆனால், நாம் தான் அதன் அருமையை தெரிந்துக் கொள்வது இல்லை. வெறும் நீரில் வேக வைத்து எளிதாக சமைத்து சாப்பிடக் கூடிய உணவு தான் சோளம். இதை நீங்கள் உணவாகவும் சாப்பிடலாம், மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் போன்றும் சமைத்து சாப்பிடலாம்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் நிறைய புரதச்சத்து இருக்கிறது. இதை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் உடல் சக்தியை அதிகரிக்க முடியும். ப்ரோக்கோலி வாங்கும் போது அதன் இலைகள் நல்ல பச்சை நிறமாக உள்ளதா என சோதித்து வாங்குங்கள். இதன் இலைகள் மஞ்சளாக மாறும் முன்னரே சமைத்துவிடுங்கள்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ், மற்றுமொரு புரதச்சத்து நிறைந்துள்ள சைவ உணவாகும். இதை சூப், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பிட்சா போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப் படுகிறது.

சோயா பீன்

சோயா பீன்

சோயா பீனில் உயர்ரக புரதம் இருக்கிறது. இதை நீர் அல்லது நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம். இதை, குழம்பு, பொரியல், பிரியாணி என எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். அசைவம் பிடிக்காத சைவ உணவுப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு.

மஷ்ரூம்

மஷ்ரூம்

வண்ணங்கள் இல்லாமல் இருந்தாலும், ஊட்டச்சத்து நிறைந்தது மஷ்ரூம். ஒரு காப் மஷ்ரூமில் 3.9 கிராம் புரதம் இருக்கிறது. சைவ பிரியர்களுக்கான மற்றுமொரு சிறந்த புரதம் நிறைந்த உணவாக இது திகழ்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Protein Rich Veggies For Those Who Hate Meat

Check our list of protein rich veggies for those who hate meat. Read on to know more about the foods that are rich in protein.
Subscribe Newsletter