Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
இரைப்பை பிரச்சனை இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!
இரைப்பையில் பிரச்சனை ஏற்படும் போது, செரிமானத்தில் கடினம், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு போன்றவை எல்லாம் ஏற்படும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகள் கூட உங்களது உடல்நலத்தை பாதிக்கலாம். மேலும், மது, வறுத்த உணவுகள், கொழுப்பு உணவுகள் போன்றவை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!
எனவே, இரைப்பை பிரச்சனை ஏற்படும் போது என்ன உணவுகள் சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது, சாப்பிட வேண்டிய உணவுகளையும் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்...
உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகள் தான் நீங்கள் முதலில் தவிர்க்க வேண்டிய உணவுகள். இவை இரைப்பை பிரச்சனையை சரியாக விடாமல் தடுக்கிறது.

ஊறுகாய், மசாலா உணவுகள்
மசாலா பொருட்கள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். முக்கியமாக ஊறுகாய், மிளகு, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் உணவுகள் மற்றும் காரமான உணவுகள்.

வினிகர்
இரைப்பை பிரச்சனை அல்லது கோளறு இருக்கும் போது வினிகர் அல்லது வினிகர் சேர்த்து சமைக்கப்படும் உணவுகளை தவிர்த்துவிடவும்.

காபி, டீ
காபி, டீ, மதுபானங்கள், சிட்ரிக் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இவர் இரைப்பை பிரச்சனை சரியாக விடாமல் தடுக்க கூடியவை ஆகும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆப்பிள், பூண்டு, வெங்காயம் மற்றும் வேர்க்கடலை போன்ற உணவுகள் இரைப்பை பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்க கூடியவை. முக்கியமாக இவை இரைப்பை பிரச்சனையை அதிகரிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க கூடியவை.

கொழுப்பு உணவுகள்
கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகள் உங்கள் செரிமான மண்டலத்தை கடினமாக்கிவிடும். எனவே, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.

தவிர்க்க வேண்டிய பால் உணவுகள்
மில்க் ஷேக், சீஸ், ஐஸ்கிரீம் போன்ற பால் உணவுகளை இரைப்பை பிரச்சனை இருக்கும் போது தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க வேண்டிய நொறுக்குத் தீனிகள்
கடினமான சாக்லேட், சிப்ஸ், வெண்ணெய் பிஸ்கட், டோனட்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை இரைப்பை பிரச்சனை இருக்கும் போது தவிர்த்துவிடுங்கள்.

அதிகமாக எதையும் சாப்பிட வேண்டாம்
இரைப்பை பிரச்சனை இருக்கும் போது எந்த உணவாக இருந்தாலும் அதிகமாக வயிறு நிரம்பும் அளவிற்கு சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது. எனவே, காய்கறிகளாக இருந்தாலும் கூட அளவாக உட்கொள்ளுங்கள். வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.



Click it and Unblock the Notifications
