Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
உங்க குடும்பத்துல சர்க்கரை நோயாளி இருக்காங்களா? உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது-ன்னா இத செய்யுங்க..
Family History of Diabetes In Tamil: உலகெங்கிலும் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தினந்தோறும் அதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் இந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
சர்க்கரை நோய் ஒருவருக்கு வருவதற்கு முக்கிய காரணமே வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இவ்விரண்டுமே தற்போது மாறியுள்ளன. இதன் விளைவாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

எனவே இத்தகையவர்கள் இந்த சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஒருசில விஷயங்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், இதன் அபாயத்தைக் குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுவும் டைப்-2 சர்க்கரை நோயானது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனையாகும். இது இதய நோய், பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த டைப்-2 சர்க்கரை நோயை ஒருவரால் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியுமென்றால், மற்ற நிலைமைகளின் அபாயத்தையும் குறைக்கலாம். சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள், தங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதெனில் பின்வரும் 5 விஷயங்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். கீழே அவை பட்டியலிடப்பட்டுள்ளன.
புரோட்டீனை எடுக்கவும்
சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், தினமும் போதுமான அளவு புரோட்டீனை எடுக்க வேண்டும். அதுவும் தினமும் ஒருவர் குறைந்தது 1 கிலோவுக்கு 1 கிராம் புரோட்டீனை எடுக்க வேண்டும். இந்த புரோட்டீன் தசைகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, பராமரிக்கவும் உதவுகிறது. ஆகவே சர்க்கரை நோய் வரக்கூடாதெனில், புரோட்டீன் உணவுகளை தினமும் தவறாமல் எடுத்து வாருங்கள்.
கார்போஹைட்ரேட்டுகளை அளவாக எடுக்கவும்
கார்போஹைட்ரேட்டுகள் நமக்கு எதிரி அல்ல. ஆனால் அந்த கார்போஹைட்ரேட்டுக்களை அளவுக்கு அதிகமாக எடுத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அளவாக கார்போஹைட்ரேட்டுக்களை எடுங்கள். அதுவும் அந்த கார்போஹைட்ரேட்டுகளை புரோட்டீன் உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களுடன் சேர்த்து எடுங்கள். இதனால் கார்போஹைட்ரேட்டுக்களை அதிகம் எடுக்க நேரிடாது. மேலும் இப்படி உட்கொள்ளும் போது, அது இரத்தத்தில் க்ளுக்கோஸை மெதுவாக வெளியிடச் செய்து, இரத்த சர்க்கரை சீராக பராமரிக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்
அவசரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருவதால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. நாள்பட்ட மன அழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுத்து, சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளான தியானம் செய்வது, யோகாவின் ஈடுபடுவது, மூச்சு பயிற்சியை மேற்கொள்வது போன்ற, உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
சுறுசுறுப்பாக இருக்கவும்
தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, சர்க்கரை நோயைத் தடுப்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளான விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாக்கிங் அல்லது வலிமை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உணவுகளுக்கு இடையே சீரான இடைவெளியை பராமரிக்கவும்
முக்கியமாக சர்க்கரை நோய் வரக்கூடாதெனில் ஒவ்வொரு உணவுக்கும் இடையே 4-5 மணிநேர இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். மேலும் இரவு உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த க்ளுக்கோஸ் ஒழுங்காக பராமரிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இப்படி இடைவெளியை பராமரிக்கும் போது நமது உடல்கள் குளுக்கோஸை திறம்பட செயலாக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் சர்க்கரை நோய் விரைவில் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். முக்கியமாக சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள் இந்த விஷயங்களை தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
