Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த உடற்பயிற்சிகளை அதிகமா செய்யாதீங்க.. இல்லன்னா மாரடைப்பு வந்து உயிருக்கே ஆபத்தாயிடும்..
Exercise And Heart Attack: உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள் உதவுகின்றன. அதுவும் தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையில் உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து, புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
தற்போது அதிதீவிர உடற்பயிற்சிகளை பலரும் செய்து வருகிறார்கள். ஆனால் உடற்பயிற்சிகள் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் அதிதீவிர உடற்பயிற்சிகளை ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்து வந்தால், அது இன்னும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இது தவிர, இன்னும் குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகள் நன்மைக்கு பதிலாக தீங்கை விளைவிக்கும். ஏனெனில் சில சமயங்களில் அது உயிரையே பறிக்கும். சமீப காலமாக உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருக்கும் போதே நிறைய பேருக்கு மாரடைப்பு வந்துள்ள செய்திகளை கேட்டு வருகிறோம்.
எனவே இதய நோயாளிகள் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன், மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவதோடு, எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இப்போது இதய நோயாளிகள் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
மாரத்தான்
இதய நோயாளிகள் அதிதீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாரத்தான் போன்ற உடற்பயிற்சிகள் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக தடுத்து மாரடைப்பை ஏற்படுத்தும். எனவே இந்த வகையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நீச்சல்
நீச்சல் பயிற்சியானது ஒட்டுமொத்த உடலுக்குமான பயிற்சி. இந்த பயிற்சியை செய்ய நிறைய வலிமை தேவை. பலரும் இந்த நீச்சல் பயிற்சியை குறைவாக மதிப்பிடுகிறார்கள். ஆனால் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த வகையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பர்பீஸ்
பர்பீஸ் உடற்பயிற்சியை செய்வதற்கு நல்ல வலுவான தோள்பட்டைகள் வேண்டும். இந்த உடற்பயிற்சியின் போது இதயம் மற்றும் உடலின் மேல் பகுதியில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் நெஞ்சு வலி, அடைப்பு அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வகை உடற்பயிற்சியை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங்
ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங் இதய நோயாளிகளுக்கு மிகவும் தீவிரமான மற்றும் பேராபத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளாகும். அதுவும் பிறவி இதய கோளாறுகளை கொண்டவர்கள் இந்த வகை உடற்பயிற்சிகளை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இது ஆஞ்சினா, நெஞ்சு வலி அல்லது மாரடைப்பு போன்றவற்றை கூட வரவழைக்கும்.
புஷ்அப்ஸ்
புஷ்அப் பயிற்சியானது ஒரு வகையான ரெசிஸ்டன்ஸ் உடற்பயிற்சியாகும். இந்த பயிற்சி பார்க்க எளிமையானதாக இருக்கலாம். ஆனால் இந்த பயிற்சி செய்வதற்கு அதிக வலிமை தேவைப்படும் மற்றும் இது இதய நோயாளிகளுக்கு மிகவும் தீவிரமான உடற்பயிற்சி. எனவே புஷ் அப் பயிற்சிகளையும் இதய நோயாளிகள் செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications