Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
டெங்கு உடலின் ஒவ்வொரு உறுப்புக்களையும் எவ்வாறு சேதப்படுத்துகிறது? விளக்குகிறார் டாக்டர். எம். சுவாமிகண்ணு...!
Dengue: தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் டெங்கு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் தரவுகளை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் டெங்கு வழக்குகள் அதிகரித்து வருவது நன்கு தெரிகிறது. அதுவும் இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால், இதுவரை சுமார் 32,000-க்கும் அதிகமான டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன மற்றும் இதுவரை 32 பேர் டெங்குவால் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஒரு வகையான வைரஸ் தொற்று. இந்த டெங்கு வைரஸ் உடலினுள் நுழைந்தால், ஆரம்பத்தில் காய்ச்சல், உடல் வலி, தலைவலி என்று அறிகுறிகளை வெளிக்காட்டும். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அந்த வைரஸ் உடலில் உள்ள பல்வேறு உறுப்புக்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.

டெங்கு வைரஸ் தொற்றின் பல நிகழ்வுகள் லேசானவை என்றாலும், கடுமையான டெங்கு உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும். இங்கு டெங்கு வைரஸ் எந்தெந்த உடலுறுப்புக்களை எப்படியெல்லாம் சேதப்படுத்தும் என்பது குறித்து உள் மருத்துவ பிரிவின் மூத்த ஆலோசகரான டாக்டர். எம். சுவாமிகண்ணு அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
கல்லீரல்
டெங்குவால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த வைரஸ் கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரித்து வீக்கத்திற்கு வழிவகுக்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், ஏற்கனவே கல்லீரல் பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு டெங்கு கடுமையான கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும். டெங்குவால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அது மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
சிறுநீரகங்கள்
டெங்குவால் நீரிழப்பு மற்றும் சிறுநீரகங்களுக்கு வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால், அது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். அதுவும் ஏற்கனவே கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்து, சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்துவதோடு, அரிதான சந்தர்ப்பங்களில் நாள்பட்ட சிறுநீரக சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இதயம்
டெங்கு இதயத்தையும் பாதிக்கலாம். அதுவும் மயோர்கார்டிடிஸ் என்னும் இதய தசையில் வீக்கத்தை ஏற்படுத்தி, அரித்மியாஸ் (ஒழுங்கற்ற இதயத் துடிப்பு) மற்றும் பிற இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இந்த இதய சிக்கல்களை சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.
நுரையீரல்
கடுமையான சந்தர்ப்பங்களில், டெங்கு ப்ளூரல் எஃப்யூஷனுக்கு வழிவகுக்கும். அதாவது நுரையீரலில் திரவத்தை குவித்து, சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலின் விளைவாக உள் இரத்தப்போக்கு ஏற்படலாம். இது நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் தீவிர நிகழ்வுகளில் சுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
மூளை மற்றும் நரம்பு மண்டலம்
டெங்கு மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளையழற்சி மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கலாம். அதுவும் நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டால், அது வலிப்பு, மனக்குழப்பம் அல்லது கோமா போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.
எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்தம்
டெங்கு எலும்பு மஜ்ஜையை பாதிக்கிறது, பிளேட்லெட் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக கடுமையான இரத்தப்போக்கு மற்றும் ரத்தக்கசிவு சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். ஆகவே டெங்குவால் உயிருக்கு ஆபத்தான உள் இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தவிர்க்க டெங்கு நோயாளிகளின் பிளேட்லெட் அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
"டெங்குவால் ஒருவர் பாதிக்கப்பட்டால், முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தான் ஆரம்பமாகும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், தீவிரமாவதைத் தடுக்கலாம். அதே வேளையில் டெங்கு பல உறுப்புகளுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. எனவே உறுப்பு செயலிழப்பைத் தடுக்கவும், இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்" என்று டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











