Latest Updates
-
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
திடீர்-ன்னு உங்க கண் இப்படி மாறி இருக்கா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் அபாய கட்டத்தில் இருக்குன்னு அர்த்தம்..
Diabetes Symptoms In Eyes In Tamil: உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவில் இது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
சர்க்கரை நோய் வருவதற்கு மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த சர்க்கரை நோயானது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது உடலின் முக்கிய உறுப்புக்களை மோசமாக பாதித்து, சில சமயங்களில் செயலிழக்கச் செய்துவிடும். சர்க்கரை நோயை இரத்த பரிசோதனையின் மூலம் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும் என்பதில்லை.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை உடலில் வெளிக்காட்டும். அதில் சில முக்கிய அறிகுறிகளாவன அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமான தாகம், மிகுந்த உடல் சோர்வு, எடை இழப்பு அல்லது அதிகரிப்பு போன்றவை.
இந்த அறிகுறிகளைத் தவிர நமது கண்களிலும் ஒருசில அறிகுறிகள் தெரியும் என்பது தெரியும்? குறிப்பாக இரத்தத்தில் அதிகளவில் சர்க்கரை இருந்து மோசமான நிலைமையில் இருந்தால், இந்த அறிகுறிகள் கண்களில் தெரியும். இப்போது கண்களில் தெரியக்கூடிய சர்க்கரை நோயின் அறிகுறிகளைக் காண்போம்.
மங்கலான பார்வை
இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், பார்வை மங்கலாக தெரியத் தொடங்கும். ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, கண்களுக்கு செல்லும் சிறிய இரத்த நாளங்கள் விரைவில் சேதமடைகின்றன. அதுவும் இரத்த சர்க்கரை அதிகமாவதால், கண்களில் உள்ள லென்ஸ் வீக்கமடைகிறது. இதன் விளைவாக, பார்வை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்களுக்கு திடீரென்று பார்வை மங்கலாக தெரியத் தொடங்கினால், உடனே இரத்த சர்க்கரை அளவை சோதித்துப் பாருங்கள்.
கண் புரை
பொதுவாக 50 வயதிற்கு மேல் கண் புரை வரும். ஆனால் 25-30 களிலேயே கண் புரை வந்தால, அது நீண்ட காலமாக உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக இரத்த சர்க்கரை அதிகமானால், அது பார்வை நரம்புகளை சேதப்படுத்த தொடங்கும். இதன் விளைவாக கண் புரை வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.
கண்களின் பவர் அடிக்கடி அதிகரிப்பது
தற்போது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்வதாலும், மொபைலை அதிகமாக பயன்படுத்துவதாலும், சிறு வயதிலேயே கண்ணாடியை அணிய நேரிடுகிறது. ஆனால் குறுகிய நாட்களிலேயே கண்களின் பவர் அதிகரித்து வருகிறது என்றால், அதை சற்றும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது. எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரையை சோதனை செய்யுங்கள்.
டயபெட்டிக் ரெட்டினோபதி
இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், அது விழித்திரைக்கு இரத்தத்தை அளிக்கும் நரம்புகளை சேதப்படுத்த தொடங்குகின்றன. இதன் விளைவாகவே சர்க்கரை நோயாளிகள் டயபெட்டிக் ரெட்டினோபதியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், கண் பார்வையை இழக்க நேரிடும்.
கண்களில் வீக்கம் அல்லது எரிச்சல்
நீங்கள் உங்கள் கண்களில் வீக்கம், எரிச்சல் அல்லது நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அதை சற்றும் புறக்கணிக்காதர்கள். ஏனெனில் உடலில் நீண்ட காலம் இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், அது கண்களில் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே இந்த அறிகுறிகளை நீங்கள் திடீரென்று அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
