Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
மது அருந்தியபின் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது... ஏன் தெரியுமா?
மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனாலும் அதை மீறி மது அருந்துபவர்கள், மதுவுடன் சேர்ந்து துணைக்கு சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
மது அருந்திவிட்டு சில உணவுகளை சாப்பிடவே கூடாது, அப்படி மீறினால் அது நமது உயிரையே பறித்துவிடுமாம். பொதுவாகவே மது அருந்துதல் தவறு என்றாலும், மது அருந்திய பின்னர் சாப்பிடும் உணவுகள் மிகவும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். மதுவும் அருந்திவிட்டு, ஜீரணமும் ஆகாவிட்டால் பாடாய் படுத்திவிடும். அதேபோல் மது அருந்திவிட்டு எண்ணெயில் பொறித்த உணவுகளையோ, பேக்கிங் ஐயிட்டங்களையோ சாப்பிடக்கூடாது.

மது அருந்திவிட்டு கீரை வகைகளை சாப்பிட கூடாது அதிலும் ஆல்கஹால் அருந்திவிட்டு அகத்தி கீரை சாப்பிடவே கூடாது. ஏனெனில் இதை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். மது அருந்தி விட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமாம்.
மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
1.இயல்பாகவே பர்கர் என்பது அதிக கலோரிகள் கொண்ட ஓர் உணவு. இது பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் மருந்து அருந்துவதற்கு முன்பு பர்கர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல மது அருந்திய பிறகும் பர்கர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
2. மது அருந்தும்போது நிறைய பேர் அசைவ உணவுகளையும் முட்டையையுமே அதிகமாக சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த வகையான உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக உடலில் வாயுத்தொல்லை, ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சனை இருக்கிறவர்கள் இவற்றைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது.
3. மது குடித்த பிறகு பால் சார்ந்த பொருள்களைக் கட்டாயம் தொடாதீர்கள். அந்த சமயங்களில் பால் பொருள்களை எடுத்துக் கொள்வது செரிமான அமைப்பில் பிரச்சினை ஏற்படுத்தும்.
4. சாக்லேட்டில் இருக்கக்கூடிய கொக்கோ மற்றும் காபின் ஆகியவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிக்கக் காரணமாக அமைகிறது. முக்கியமாக, மது குடித்த பிறகு உடலில் ஏற்கனவே ஆசிட் உற்பத்தி அதிகரித்திருக்க கூடிய சூழலில் இவற்றினை எடுத்துக் கொள்வது கூடுதலாக வயிற்றினை பாதிப்புக்கு உட்படுத்தும்.
5. எண்ணெயில் வறுக்கப்பட்ட கூடிய உணவுகள் மது குடித்த பிறகு எடுத்துக்கொள்வது ஆபத்தானதாக முடியும். மேலும், அவை உடலில் நீர்ச்சத்து இல்லாமல் ஆக்கிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
6. ஆரஞ்சு பழத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிட்ரஸ் ஆசிட் என்பது உங்கள் வயிற்றின் செரிமான பிரச்சனை பாதிப்புக்கு உட்படுத்தும். ஏற்கனவே மது குடித்து இருப்பதன் விளைவாக உருவாகக்கூடிய ஆசிட் பிரச்சினையினை இது அதிகரிக்கும். மேலும் இவை மிக விரைவாக உங்களை நீர்ச்சத்து இழப்பதற்கு பங்களித்து விடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
7. உப்பு நிறைந்த உணவில் அதிக சோடியம் உள்ளடக்கம் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். உண்மையில், அதிக உப்பு அளவுகள் நீரிழப்புக்கு வழிவகுக்கும், இது மது அருந்துவதை அதிகரிக்கிறது.
8. உப்பு நிறைந்த உணவுகளைப் போலவே, காரமான உணவுகளும் உங்களுக்கு தொந்தரவை கொடுகும்.. மதுவுடன் கூடிய காரமான உணவுகளை உண்பது உங்கள் வயிற்றை சீர்குலைத்து செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
