Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எப்போதுமே இரவு உணவிற்கு பின் இதை செய்யாதீர்கள்..!
பொதுவாக சிலர் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்குவார்கள். மேலும் சிலர் குளிக்கிறார்கள். சிலர் புகைபிடிப்பார்கள். ஆனால் நடைமுறையில் சொல்வதென்றால் இரவு உணவுக்குப் பிறகு இவற்றைச் செய்யக் கூடாது.
இவை மட்டுமின்றி, இது போன்ற சில விஷயங்களை இரவு உணவாக கூட செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

நடைபயிற்சி
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்வதால் கை, கால்களுக்கு ரத்தம் செல்லும். இது செரிமானத்தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம்..
தண்ணீர்
நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது. குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் காத்திருக்கவும். இல்லையெனில், அந்த நீர் செரிமான அமைப்பின் வேலையைத் தடுக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.
பழங்கள் சாப்பிடுவது
இரவு உணவு உண்ட உடனேயே பழங்கள் சாப்பிடுவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை செய்யாதே. ஏனெனில் இரவு உணவிற்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் வயிறு வீங்கிவிடும். வாயு பிரச்சனைகள் ஏற்படும். மேலும், சாப்பிட்டதும் சரியாக ஜீரணமாகாது.
பல் துலக்குதல்
இரவு உணவு உண்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அதை செய்யக்கூடாது.. ஏனெனில் பற்களில் உள்ள எனாமல் அடுக்கு அகற்றப்படுகிறது. அப்போது பற்கள் இயற்கையான பொலிவை இழக்கும். எனவே இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் அந்த வேலையைச் செய்ய வேண்டும்.
புகைபிடித்தல்
இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக புகைபிடிக்கக்கூடாது, எந்த நேரத்திலும் புகைபிடிக்கக்கூடாது. அது உங்களின் உடல் ஆரொக்கியத்திர்கு கேடு விளைவிக்கும்.. மேலும் இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாதவர்கள் இரவு உணவையாவது நிறுத்துவது நல்லது. ஏனெனில் இரவு உணவிற்குப் பிறகு புகைபிடிப்பது சாதாரண நேரத்தில் புகைபிடிப்பதை விட புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
டீ மற்றும் காபி குடித்தல் கூடாது
பலர் இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பார்கள். நைட் ஷிப்ட் குடிப்பவர்கள் இன்னும் அதிகம். உண்மையில் இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால், செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும். உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது. முக்கியமாக இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படாது.. எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.
குளித்தல்
சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.
தூங்கும் நேரம்
இரவு உணவு உண்ட உடனே தூங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே அப்போது அதிக எடை கூடும். அதனால் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிடுங்கள்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












