Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
ஹேர் கலரிங் செய்வீங்களா? அப்ப இந்த கொடிய புற்றுநோய் வர நிறைய வாய்ப்பிருக்கு... உஷார்...
ஆசியாவிலேயே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் மற்றும் அதிகமானோர் இறக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுவும் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிமானார் புற்றுநோயால் இறப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் காரணங்களாக உள்ளன. அதில் உண்ணும் உணவுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் குறிப்பிட்ட பொருட்கள் போன்றவை முக்கியமானவை.
அதுவும் தற்போது இளைஞர்கள் மட்டுமின்றி, அனைத்து வயதினரும் தங்கள் அழகாக, இளமையாக வெளிக்காட்ட பல்வேறு அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். அதில் ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் கூந்தல் முக்கிய பங்கை வகிக்கிறது.

இப்படிப்பட்ட தலைமுடிக்கு நிறைய பேர் ஃபேஷன் என்ற பெயரில் கலரிங் செய்து கொண்டிருக்கிறார்கள். வயதானவர்கள் தங்களை இளமையாக வெளிக்காட்டிக் கொள்ள பார்லர் சென்று தவறாமல் ஹேர் கலரிங்கை செய்கிறார்கள். இது தவிர ஹேர் ஸ்முத்னிங், ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்கையும் பலர் செய்து வருகிறார்கள்.
ஆனால் FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) சமீபத்தில் ஃபார்மால்டிஹைட் மற்றும் ஃபார்மால்டிஹைட்-வெளியிடும் ரசாயனங்களை தடைசெய்துள்ளது. ஏனெனில் இந்த பொருட்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் மற்றும் ஸ்மூத்னிங் போன்றவை எப்படி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது?
தலைமுடியை நேராக்கவும், மென்மையாக்கவும் பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு மற்றும் ஃபார்மால்டிஹைட்-வெளியிடும் ரசாயனங்களை ஒருவர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், அதன் விளைவாக கடுமையான குறுகிய கால மற்றும் நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
அதுவும் ஃபார்மால்டிஹைடு உள்ள பொருட்களை சூடேற்றி பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை கண்கள், மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சலை உண்டாக்கும். சில சமயங்களில் இது ஒருவருக்கு கடுமையான சுவாச பிரச்சனைகளையும், இன்னும் சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
பெண்களுக்கு கருப்பை புற்றுநோய்
பெண்கள் தங்கள் தலைமுடியை ஸ்ட்ரெயிட்னிங், ஸ்மூத்னிங் போன்றவற்றை செய்யும் போது, அதில் உள்ள கெமிக்கல்களால் கருப்பை புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது.
இது பற்றி 2022 ஆம் ஆண்டு தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், ஹேர் ஸ்ட்ரெயிட்னிங், ஸ்மூத்னிங், கலரிங் போன்றவற்றை செய்த பெண்களுக்கு கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் காணப்பட்டது தெரிய வந்தது.
கருப்பை புற்றுநோயானது, கருப்பையின் புறணியான எண்டோமெட்ரியத்தின் திசுக்களில் புற்றுநோய் செல்கள் உருவாகும் போது ஏற்படுகிறது. ஃபார்மால்டிஹைட் என்னும் கெமிக்கல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டிவிடுவதோடு, உடலில் அவற்றை பரவவும் ஊக்குவிக்கிறது.
சிறுநீர்ப்பை புற்றுநோயை அதிகரிக்கும் ஹேர் கலரிங்
ஹேர் கலரிங்கை டீனேஜ் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த ஹேர் கலரிங்கை தொடர்ந்து செய்து வந்தால், அது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஏனெனில் ஹேர் கலரிங்கில் உள்ள 80 சதவீத சாய பொருட்கள் ஹைட்ரஜன் பெராக்சைடிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆகவே இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்
ஹேர் கலரிங், ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், ஹேர் ஸ்மூத்னிங் போன்றவற்றை பயன்படுத்துவதால் கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம், அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் தான். இந்த கெமிக்கல்களை நமது தலையில் பயன்படுத்தும் போது, நமது தலையானது அந்த கெமிக்கல்களை அப்படியே உறிஞ்சி, உடலினுள் நுழைந்துவிடுகின்றன.
அதுவும் இந்த கெமிக்கல்களை சூடுப்படுத்தும் போது, அது ஃபார்மால்டிஹைடை வெளியிடச் செய்து, புற்றுநோயின் அபாயத்தை இன்னும் அதிகரிக்கிறது. ஆகவே உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள, இப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வழிகளை முயற்சி செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications