Latest Updates
-
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
காய்ச்சல் மற்றும் சளி மருந்து பாட்டிலை திறந்தால் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? விளக்கும் டாக்டர்!
Medicine Safety Tips In Tamil: நாம் அனைவருமே வீடுகளில் ஒருசில மருந்துகளை வைத்திருப்போம். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், சளி, இருமல், காய்ச்சல் மருந்துகளை எப்போதும் வைத்திருப்போம். ஆனால் அப்படி வாங்கி பயன்படுத்தியப் பின், அந்த மருந்து பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் என்ற ஒரு கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.
சிலர் மருந்து பாட்டிலை திறந்தவுடன் 1 வாரம் தான் பயன்படுத்த வேண்டும் என்றும், இன்னும் சிலர் 15 நாட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் காய்ச்சல் மற்றும் சளி மருந்து பாட்டிலை திறந்தால் எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இதுக்குறித்து உணவு ஆலோசகரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "பொதுவாக மருந்துகளுக்கு என்று காலாவதி தேதி உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதியை தாண்டி அந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது. மேலும் அந்த மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று பார்க்கும் போது, இணையத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இதனால் குறுகிய நாட்களிலேயே மருந்துகளை தூக்கி எறிந்துவிட நேரிடுகிறது. ஆனால் அப்படி தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.
எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்?
மாத்திரைகளில் இப்படியான பிரச்சனை ஏதும் இல்லை. மாத்திரைகள் அதன் காலாவதி தேதி வரை நிலையானதாகவே இருக்கும். சில சமயங்களில் மாத்திரைகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கும் போது, அதன் நிலைத்தன்மையில் மாற்ற ஏற்படலாம். ஆனால் சிரப் வகையான மருந்துகளில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான சிரப்புகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன.
பாராசிட்டமல் சிரப்
ஆய்வுகளின் படி, இந்த பாராசிட்டமல் சிரப் பாட்டிலை திறந்த பின் 5-6 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி, ஒரு 3-4 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்று டாக்டர் கூறினார்.
இருமல், சளி சிரப்
இந்த வகையான சிரப்புகளில் இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த சிரப்புகளில் இதுக்குறித்து எந்த ஒரு ஆய்வுகளும் மேற்கொண்டதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சில நிபுணர்கள் 1-3 மாதம் வரை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். எனவே இப்படியான மருந்தை 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்று டாக்டர் கூறினார்.
பவுடர் வடிவ ஆன்டிபயாடிக் மருந்துகள்
இந்த வகை மருந்தில் பவுடரில் நீரை கலந்துவிட்டால், 7-10 நாட்களுக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த மருந்து பாட்டிலிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே நீரை கலக்காவிட்டால், அதன் காலாவதி தேதி வரை வைத்து பயன்படுத்தலாம் என்று டாக்டர் கூறினார்.
சொட்டு மருந்துகள் (Eye, Ear Drops)
கண், காது, மூக்கு போன்றவற்றிற்கு சொட்டு மருந்துகள் விற்கப்படுகின்றன. கண்களுக்கான சொட்டு மருந்தை திறந்துவிட்டால், அதை 1 மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவே காது மற்றும் மூக்கு சொட்டு மருந்திற்கும் பொருந்தும்.
பிற மருந்துகள்
ஊசிகள் - இன்சுலின் போன்ற ஊசிகளை திறந்துவிட்டால், அதை 1 மாதம் வரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
க்ரீம், ஜெல் - வலி மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தும் க்ரீம், ஜெல் போன்றவற்றை திறந்த பின், 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இன்ஹேலர் - மூச்சுத்திணறலுக்கு பயன்படுத்தும் இன்ஹேலரை அதன் காலாவதி தேதி வரை பயன்படுத்தலாம்.
சத்து மருந்துகள் - வைட்டமின் சத்து , இரும்புச்சத்து போன்ற மருந்துகளை 1-3 மாதங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம்.
ஒருவேளை இருமல், காய்ச்சல் மருந்து பாட்டிலில் ஏதாவது வித்தியாசமான வாசனை வந்தாலோ, நிறம் மாறினாலோ, தெரியாமல் அதில் விரல் பட்டுவிட்டாலோ, கிருமிகள் புகுந்துவிட்டாலோ, எறும்புகள் மொய்க்கத் தொடங்கினாலோ, திரிதிரியாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு அந்த மருந்தை பயன்படுத்த மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் யோசிக்காமல் தூக்கிப் போடலாம் என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை உங்களுக்கு மருந்து பாட்டிலை எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பது தெரியாமல் இருந்தால், இனி டாக்டர் அருண்குமார் கூறியதை தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications