Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
செம்பருத்தி டீ குறித்து பதிவை போட்டு சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா.. அப்ப இந்த டீ நல்லது இல்லையா?
Doctor Criticizes Actress Nayanthara's Post: சமீபத்தில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு தொடர்பான ஒரு பதிவை போட்டது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த பதிவில் "பொதுவான வைரல் தொற்றுக்கு மருந்துகளை எடுக்கும் முன், ஒரு மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒன்று தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சிய நீரை ஒன்றாக கலந்து நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிவை எக்ஸ் தளத்தில் தி லிவர் டாக் என்ற பெயரைக் கொண்ட மருத்துவர் ஒருவர் சமந்தாவை கடுமையாக விமர்சித்தார். அந்த பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், நடிகை நயன்தாரா நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் செம்பருத்தி டீயின் நன்மைகளைக் குறித்து பதிவிட்டிருந்தார். இதனால் தற்போது அந்த டாக்டர் நயன்தாரா பக்கம் திரும்பி அவரையும் விமர்த்துள்ளார். அப்படி என்ன அந்த பதிவில் நயன்தாரா குறிப்பிட்டிருந்தார் என்று கேட்கலாம்.

தற்போது நயன்தாரா ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவாலின் பரிந்துரைகளின் படி தனது உணவு பழக்கவழக்கத்தை மாற்றியுள்ளார். இதனால் முன்முன் கனேரிவாலைப் பாராட்டி, தனது இன்ஸ்டா பக்கத்தில், செம்பருத்தி டீ தனக்கு பிடித்த டீயாக மாறியதோடு, தனது உணவுத் திட்டத்தில் மிகவும் உற்சாகமான ஒரு பானமாக இருப்பதாக கூறினார்.
இது தவிர "செம்பருத்தி டீ ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களுக்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதனால் முகப்பரு பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு சிறந்தது. அதோடு மழைக்காலத்தில் செம்பருத்தி டீ குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் உள்ளன மற்றும் இந்த டீ நோயெதிர்ப்பு சக்தியை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், பருவகால தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவை தி லிவர் டாக் என்று அறியப்படும் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நயன்தாராவின் இந்த பதிவிற்கு டாக்டர் சிரியாக் தனது எக்ஸ் தளத்தில், "நயன்தாரா அவர்கள் செம்பருத்தி டீயைக் குடித்துவிட்டு, அதன் சுவையைப் பற்றி கூறியிருக்கலாம். ஆனால் அந்த செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், முகப்பரு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக பாதுகாப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் செம்பருத்தி டீயுடன் தொடர்புடைய பல ஆரோக்கிய கூறுகளை ஆதரிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்று கூறியுள்ளார். அதாவது, சில ஆய்வுகள் செம்பருத்தி லேசான இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருக்கலாம் என்று கூறினாலும், இந்த முடிவு உறுதியானவை அல்ல. இதுக்குறித்து மேலும் ஆய்வு தேவை. அதேப் போல் செம்பருத்தி டீ இரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவைக் குறைக்கும் விளைவைக் கொண்டுள்ளது என்பது நம்பகமான ஆதாரமும் இல்லை. எனவே இது சர்க்கரை நோய்க்கு உதவ முடியாது."
அதேப் போல் செம்பருத்தி முகப்பரு மற்றும் அதன் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் குறித்த கூற்றையும் நிராகத்துள்ளார். செம்பருத்தி டீ மனிதர்களில் முகப்பரு அல்லது நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் என்பதை எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை என்று கூறினார்.
டாக்டர் பிலிப்ஸின் இந்த விமர்சன பதிவானது பிரபலங்கள் ஒரு விஷயத்தை பகிரும் போது உண்மையான மற்றும் அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட தகவல்களை பகிர வேண்டும். குறிப்பாக ஆரோக்கியம் குறித்த விஷயங்களை பகிரும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பல பிரபலங்கள் பொதுமக்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருக்கிறார்கள். அவர்களின் கூற்றை நம்பி பின்பற்றவும் செய்வார்கள். எனவே சமூகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் எப்போதும் நம்பகமான தகவல்களையே பகிர வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications