Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
தீபிகா படுகோன் இப்படி சிக்குனு இருக்கறதுக்கு இந்த மேட்டரு தான் காரணமாம்...
தீபிகா படுகோனாவின் கட்டுக்கோப்பான உடல் வாகிற்கு இது தான் காரணமாம். அதுபற்றி அவரே விளக்குகிறார் பாருங்கள். அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.
தீபிகா படுகோனாவின் கட்டுக்கோப்பான உடல் வாகிற்கு இது தான் காரணமாம், நம்மிடம் மனம் திறக்கிறார்

தன்னுடைய நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல் தன்னுடைய அழகாலும் கச்சிதமான உடல் வாகாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நம்ம தீபிகா படுகோனா அவர்கள். அவரது இடுப்பு நெளிவு வளைவு சுளைவை பார்த்து அதிசயக்காதவர்கள் எவரும் இலர் எனலாம். அந்தளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

உடற்பயிற்சியாளர்கள் பாராட்டு
சமீபத்தில், பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளரான யாஸ்மின் கராச்சிவாலா, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார், அதில் தீபிகா படுகோனாவைச் பற்றி" உங்கள் முதுகெலும்பை அழகாக வளைக்கிறீர்கள், இதுவே உங்களை என்றென்றும் இளமையாக வைத்திருக்கும்" என்று அவர் கூறியுள்ளார். ஜோசப் பைலேட்ஸ் அவர்களும் # நீங்கள் ஒரு உற்சாகமான நபர், இந்த லகுவான முதுகெலும்பு வளைவே நீங்கள் என்றும் இளமையாக இருக்க உதவும் "என்று வாழ்த்தியுள்ளார்.

இன்ஸ்ட்டாகிராம் வீடியோ
இந்த வீடியோவில் இளம் குயின் தீபிகா படுகோனா காடிலாக் மீது நின்று பைலேட் பிரிட்ஜ் உடற்பயிற்சியை எளிதாக செய்வதை காணலாம். இந்த பைலேட் பிரிட்ஜ் உடற்பயிற்சி செய்யும் போது முதுகெலும்பு இயக்கம் மேம்படுத்தப்படுகிறது, கோர் மற்றும் பிட்ட தசைகள் வலுவடைகின்றன. அதுமட்டுமல்லாமல் இடுப்பு நெகிழ்வுகளையும், முன் உடல் பாகத்தையும் பலப்படுத்துகின்றன. பின்பக்க பாகங்களுக்கு வலிமையை கொடுக்கிறது. அதாவது முதுகெலும்பு, தொடை எலும்புகள் மற்றும் குளூட்ஸ் போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை தூண்டி தளர்வுறச் செய்கிறது. இதன் மூலம் உடம்பு எளிதாக ரிலாக்ஸ் அடையும்.

முதுகெலும்பு
நமது உடல் வலுவாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் முதுகெலும்பு முக்கியம். நிலையான நெகிழ்வான முதுகெலும்பே சிறந்தது. நகரும் இந்த செயல்பாடுகள் முதுகெலும்புகளில் ஏற்படும் காயங்கள், முதுகெலும்பில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பிரிட்ஜ் உடற்பயிற்சி ஒரே நேரத்தில் உடலை தளர்த்துகிறது, பலப்படுத்துகிறது, உறுதிப்படுத்துகிறது மற்றும் ஒருங்கிணைக்கிறது . இந்த உடற்பயிற்சியை உங்கள் உடம்பு வாகிற்கு ஏற்றவாறு கூட நீங்கள் மாற்றி அமைக்க முடியும். .

பைலேட் பிரிட்ஜ் உடற்பயிற்சி
உங்களது பின் பகுதி தரையை நோக்கி இருக்க வேண்டும், இரண்டு கைகளையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். முழங்கால்களை மடக்கி கொள்ளுங்கள், பாதங்கள் தரையில் பட வேண்டும். அடிவயிற்று மற்றும் பிட்ட தசைகளை இறுகச் செய்ய வேண்டும். மெதுவாக உங்கள் இடுப்பை உயர்த்தி, முழங்காலையும், தோள்பட்டையும் நேராக ஒரே கோட்டில் வைக்க வேண்டும். கோர் மற்றும் தொப்புளை முதுகெலும்பை நோக்கி இழுக்க வேண்டும். இதே நிலையில் 20-30 விநாடிகள் இருந்து விட்டு பிறகு பழைய நிலைக்கு வாருங்கள். இதை 10 தடவை செய்து வாருங்கள்.
நீங்களும் தீபிகா படுகோனா மாதிரி கட்டுடல் மேனியுடன் வலம் வரலாம்.
குறிப்பு
எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications