Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
அரிசி டயட் பத்தி தெரியுமா?... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...
அரிசி டயட்டின் மூலம் உண்டாகிற உங்களுக்குத் தெரியாத பல ஆரோக்கிய விஷயங்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பேசப்படுகிறது. அந்த டயட்டை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது பற்றித் தான் இந்த தொகுப்பு உங்களுக்க
அரிசி டயட் என்பது டயட்டின் ஒரு வகை ஆகும். இந்த டயட்டை பின்பற்ற ஒரு வித சலிப்பு உணர்வு ஏற்படும். ஆனால் இதனைப் பின்பற்றுவதால் நிலைத்த நீடித்த முடிவுகள் கிடைக்கும் . ஆகவே எடை இழப்பை கருத்தில் கொண்டு டயட் பின்பற்றுபவர்கள் இந்த டயட்டைப் பற்றி கருத்தில் கொள்வது அவசியம்.

உடலின் புரதம், சர்க்கரை, சோடியம், கொழுப்பு, மற்றும் கலோரிகளைக் குறைப்பதால் சிறுநீரகதிற்கான வளர்சிதை மாற்ற சுமை குறைக்கப்படுகிறது

அரிசி டயட் என்றால் என்ன?
முதன்முதலாக அரிசி டயட் என்பது அதிதீவிர உயர் இரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சைக்காக கண்டறியப்பட்டது. ஆனால் காலப்போக்கில், உயர் இரத்த அழுத்தத்திற்கான மருத்துகள் கண்டுபிடிக்கபட்டவுடன் அதன் மதிப்பை இழந்தது. தற்போதும் சில வகையான கடுமை குறைவான அரிசி டயட் முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அவற்றை பின்பற்றுவதில் சில அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன.
உங்கள் உடலின் புரதம், சர்க்கரை, சோடியம், கொழுப்பு, மற்றும் கலோரிகளைக் குறைப்பதால் சிறுநீரகதிற்கான வளர்சிதை மாற்ற சுமை குறைக்கப்படுகிறது. இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றம் எளிதாகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடல் எடை குறைகிறது. அரிசி டயட்டிற்கு பல்வேறு அணுகுமுறைகள் இருந்தாலும், சில குறிப்பிட்ட உணவுக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் அரிசி மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

எவ்வாறு வேலை புரிகிறது?
உங்கள் உணவில் நீங்கள் சோடியம், கலோரி, கொழுப்பு, புரதம் போன்றவற்றைக் குறைத்துக் கொள்வதால் இந்த அரிசி டயட் நல்ல முறையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைத் தருகிறது. பெரும்பாலான அரிசி டயட், பல்வேறு கட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டம் என்பது அதீத கலோரி குறைப்பு, அதாவது ஒரு நாளில் 1000 முதல் 1200 கலோரிகள் வரை குறைக்கப்படுகிறது. ஸ்டார்ச் மற்றும் பால் பொருட்கள் அல்லாத உணவுகள் மட்டுமே முதல் கட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
இதனை ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இரண்டாம் கட்டத்தில், முதல் கட்ட உணவுகளுடன் சேர்த்து வாரத்தில் ஒரு நாள் குறைவான அளவில் இறைச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த ஆரோக்கிய உயர்வு அல்லது எடை இழப்பு ஏற்படும்வரை இரண்டாம் கட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மூன்றாவது கட்டத்தை உங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். அரிசி டயட்டில் கூறப்படும் உணவுத் தேர்வுகளில், ஒரு வாரத்தின் புரத உட்கொள்ளல் அளவில் மட்டும் ஒரு சிறு மாற்றம் அனுமதிக்கப்படுகிறது.

உதாரண உணவு அட்டவணை
அரிசி டயட் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு ஏற்ற முதல் கட்ட உணவு வகை இப்படியாக இருக்கும்..
காலை உணவு
மசித்த வாழைப்பழம் சேர்க்கப்பட்ட ஒரு கப் ஓட்ஸ் மற்றும் ஒரு ஆப்பிள்
மதிய உணவு
அரை கப் வேக வைத்த அரிசி சாதம், அரை கப் வேகவைத்த பீன்ஸ், கால் கப் உலர்ந்த திராட்சை
இரவு உணவு
அரை கப் கொழுப்பு அற்ற பால் மற்றும் அரை கப் கம்பு
இரண்டாம் கட்டத்தில், ஒரு பொரித்த முட்டையை இணைத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு வாரத்தில் ஒரு முறை சால்மன் மீன் அரை துண்டு எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் ஸ்டார்ச், பழங்கள், காய்கறிகள் அதிகம் உள்ள உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

நன்மைகள்
அரிசி டயட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, செரிமானத்தை சீராக்குகிறது, நச்சுத்தன்மையைக் குறைக்கிறது, எடை இழப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது,

இரத்த அழுத்தம்
சிறுநீரக செயல்பாடுகளில் உள்ள அழுத்தம் குறைவது, அதிக அளவு சோடியம் மற்றும் கொழுப்பு குறைக்கப்படுவது போன்ற காரணிகளால் இரத்த அழுத்தத்தில் வியக்க வைக்கும் அளவிற்கு மாற்றம் நிகழ்கிறது. உயர் இரத்த அழுத்தம் தடுக்கப்படுவதால் அரிசி டயட் மூலம், மாரடைப்பு, வாதம், கரோனரி இதய நோய் , தமனித் தடிப்பு போன்ற அபாயங்கள் குறைக்கப்படுகின்றன.

கொலஸ்ட்ரால்
இந்த உணவில் பெரும்பாலானவை உயர் நார்ச்சத்து கொண்டிருப்பதால், கொலஸ்ட்ரால் அளவு குறைக்கப்படுகிறது. மேலும் தமனிகளில் படியும் கொழுப்பு அளவை நார்ச்சத்து குறைப்பதால், இதய ஆரோக்கியம் மேலும் பாதுகாக்கப்படுகிறது.

செரிமானம்
செரிமான ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து என்பது ஒரு மிக முக்கிய கூறாக உள்ளது. மேலும் நார்ச்சத்து, ஊட்டச்சத்து உட்கொள்ளல் அளவை மேம்படுத்துகிறது, குடல் தசை இயக்கத்தை ஊக்குவிக்கிறது, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளைத் தடுக்கிறது.

எடை இழப்பு
இந்த டயட்டின் முதன்மை நன்மை எடை இழப்பு ஆகும். உங்கள் கலோரி உட்கொள்ளல் அளவு பாதியாகக் குறைவதால், விரைவில் கலோரி தட்டுபாடு ஏற்பட்டு, உங்கள் உடல் எடை குறையைத் தொடங்கும். இந்த டயட்டுடன் சேர்த்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கொழுப்பு எரிக்கப்படும் செயல்பாடு சிறந்த முறையில் நடைபெறும்.



Click it and Unblock the Notifications