Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்...
உடல் எடையை உடனே குறைக்க எளிய வழி இந்த தேங்காய் வினிகர் தான்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!
தினமும் சாப்பிட கூடிய உணவுகள் தான் நமது உடல் எடையை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கண்ட உணவுகளை கண்ட நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நம் உடல் எடை அபரிமிதமாக கூடி விடும். உடல் எடை கூடிய பின்னர் உடனே குறைக்க வேண்டும் என பலர் துடிப்பார்கள். இதற்காக என்னென்னவோ செய்வார்கள்.

ஆனால், அவற்றில் சில வழிகள் மட்டுமே சிறப்பான தீர்வை தரும். அந்த வகையில் உடல் எடையை சட்டென குறைக்க தேங்காய் வினிகர் உதவுகிறது என தற்போதைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இந்த வினிகரை நம்மால் வீட்டிலே தயாரிக்க முடியும். இதை அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடை கூடும் பிரச்சினை முதல் செரிமான கோளாறு வரை சரி செய்து விடலாம். இனி இதனை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் வினிகர்
இது வரை இப்படி ஒரு வினிகரை கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இந்த வினிகர் தான் உங்களது பல பிரச்சினைகளுக்கு தீர்வை தர கூடும்.
இதில் உள்ள அற்புத திறன் தான் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வந்தாலே முழு உடலுக்கு நன்மை கிடைக்கும்.

செரிமான கோளாறுகள்
உடல் எடை கூடுவதற்கு செரிமான கோளாறுகளும் ஒரு முக்கிய காரணம். தேங்காய் வினிகரின் தன்மை உணவை மிக விரைவிலே செரிமானம் அடைய செய்து விடும். ஆதலால், உடல் எடை கூடும் பிரச்சினையில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.

உடல் எடை
தேங்காய் வினிகரை உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும். மேலும், அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இது தடுத்து விடும். கூடவே எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம்
பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதில் அதிக அளவில் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைத்து கொள்ளும். மேலும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க தேங்காய் வினிகர் உதவும். இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் இந்த வினிகர் பயன்படும்.

சர்க்கரை அளவு
தேங்காய் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். மேலும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த தேங்காய் வினிகர் உதவுகிறது. உணவில் இதை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தாலே போதும்.

தேவையான பொருட்கள்
தேங்காய் வினிகரை வீட்டிலே தயார் செய்ய சில பொருட்களை முதலில் எடுத்து கொள்வோம்.
வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
1/4 கப் சர்க்கரை
தேங்காய் நீர் 1 லிட்டர்

தயாரிப்பு முறை
முதலில் தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும். நன்றாக கலக்கி சர்க்கரை கரைந்த பின்னர் அதை இறக்கி ஆற விடவும்.
குளிர்ந்த பிறகு இதனை கண்ணாடி ஜாரில் மாற்றி கொள்ளவும்.அடுத்து இதனை 1 வாரத்திற்கு சூரிய ஒளி படாத இடத்தில் வைக்கவும்.

தயாரிப்பு முறை
அதன் பின் இதனுடன் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இதனை 4 முதல் 12 வாரங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பின்னர் பயன்படுத்தலாம். சமைக்கும் உணவில் இதை தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம்.
இது ஒவ்வொருவர் உணவிற்கும் மாறுபடும். மேலும், அதிக உடல் பருமன் கொண்டோர் தங்களது மருத்துவரை அணுகுவது நல்லது.



Click it and Unblock the Notifications
