Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
வெறும் 2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த பொடிய இப்படி தண்ணியில கலந்து குடிங்க...!
தினமும் 3 கிலோ மீட்டர் ஓடுற, என்னென்னவோ உடற்பயிற்சி செய்யுற, காய்கறி- பழத்தை மட்டும் தான் சப்புடறன், கொழுப்பு உணவ தொடுறதே இல்ல.." இவ்வளவு செஞ்சும் உடல் எடை கொஞ்சம் கூட குறைய மாட்டுதுங்க..." இப்படி கவலைப்படுற பலருக்கு விடையை தர இந்த ஒரு பொடி போதும்க. உடலில் உள்ள கொழுப்பை இரண்டு வாரத்தில் குறைத்து உடல் எடையை எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் குறைத்து விடும்.

இந்த முறையை இன்று நேற்று நாம் பயன்படுத்தி வருவதில்லை. பல நூற்றாண்டாக நம் முன்னோர்கள் இந்த முறையை கடைபிடித்து வந்தனர். சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேதத்தில் உடல் எடையை குறைக்க இந்த பொடியை பெரிதும் பயன்படுத்துவதும் உண்டு. தினமும் காலையில் இந்த பொடியை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை பிரச்சினைக்கு ஒரு தீர்வை கட்டிவிடலாம். அது என்ன பொடி என்பதையும், எப்படி இதை பயன்படுத்த வேண்டும் என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

விடை தெரியணுமா..?
உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய அந்த பொடி வேறு எதுவும் இல்லை. சுக்கு பொடி தான். சுக்கு பொடியில் உள்ள சில முக்கிய மூல பொருட்கள் தான் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதை சரியான அளவில் இந்த பதிவில் கூறும் தயாரிப்பு முறையின் படி சாப்பிட்டு வந்தால் 2 வாரத்தில் உங்கள் தொப்பை, உடல் எடை, கொழுப்பு ஆகிய அனைத்திற்கும் தீர்வை கொடுத்து விடலாம்.

செரிமான கோளாறு
உடல் எடை கூடும் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியை தருவதே இந்த செரிமான கோளாறுகள் தான். இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.
அதற்கு இந்த சுக்கு பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே செரிமான கோளாறுகள் நீங்கி விடும்.

வாய்வு தொல்லைக்கு
எதை சாப்பிட்டாலும் கை கால்களில் வாய்வு போன்று பிடித்து கொள்கிறதா..? அப்போ உங்களுக்கு தான் இந்தகுறிப்பு..
தேவையான பொருட்கள்...
ஓமம் பொடி அரை டீஸ்பூன்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
எலுமிச்சை அரை ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு ஒரு சிட்டிகை

தயாரிப்பு முறை...
முதலில் 1 கிளாஸ் நீரை வெது வெதுப்பான சூடு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். அடுத்து இதனுடன் ஓமம் பொடி, சுக்கு பொடி சேர்த்து கொண்டு கலக்கவும்.
இறுதியாக எலுமிச்சை சாறு, பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் வாய்வு தொல்லை பறந்து விடும்.

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு
சிறுநீர் போகும் இடத்தின் வெளியிலோ அல்லது உள்ளேயோ ஏதாவது தொற்றுகளினால் பாதிப்பு இருந்தால் சுக்கு பொடியை நீரில் கலந்து குடிப்பதால் சரியாகும். மேலும், சிறுநீர் வராமல் இருக்கும் பிரச்சினைக்கும் இது தீர்வை தரும்.

உடல் எடையை குறைக்க
வாய்வு தொல்லைக்கு தீர்வை எப்படி இந்த சுக்கு தந்ததோ அதே போன்று உடல் எடை குறைப்பிற்கும் தருகின்றது. இதற்கு தேவையான பொருட்கள்...
சுக்கு பொடி அரை ஸ்பூன்
தேன் அரை ஸ்பூன்

செய்முறை :-
சுக்கை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இதனை வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். பின் சற்று சுவையிற்காகவும், கொழுப்பை குறைக்கவும் தேனை சேர்த்து கொண்டு குடிக்கலாம். இதனை காலை வேளையில் சாப்பாட்டிற்கு முன் குடித்து வந்தால் பலன் அதிகம்.

முகப்பருக்களை ஒழிக்க
முகத்தின் அழகை கெடுக்கும் முகப்பருக்களை ஒழிக்க சுக்கு பொடி ஒன்றே போதும். 1 ஸ்பூன் சுக்கு பொடியை 1 ஸ்பூன் பால் பவ்டருடன் கலந்து முகத்தில் பூசி கொள்ளவும்.
20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து போகும்.

அழுக்குகளை வெளியேற்ற
உடலின் உள்ளே உள்ள அழுக்குகளை வெளியேற்ற எப்படி சுக்கு பொடி பயன்படுகிறதோ, அதே போன்று உடலின் வெளியில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய சுக்கு பொடி பயன்படுகிறது. இதற்கு தேவையானவை...
பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
சுக்கு பொடி 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
குளிப்பதற்கு முன்னர் குளிக்கும் நீரில் சுக்கு பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து கொள்ளவும். இந்த நீரில் குளித்தால் உடலின் மேற்பகுதியில் உள்ள கழிவுகள் எளிதாக நீங்கி விடும்.

நெஞ்சு வலிக்கு
உங்களுக்கு ஏற்படுகின்ற நெஞ்சு வலியை கூட இந்த சுக்கு பொடியை வைத்து குணப்படுத்தி விடலாம். இதற்கு தேவையானவை...
இளநீர் நீர் அரை கிளாஸ்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
சர்க்கரை அரை ஸ்பூன்

தயாரிப்பு முறை :-
முதலில் சுக்கு பொடியை இளநீரில் நீரில் நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சர்க்கரையை இறுதியாக சேர்த்து குடிக்கவும். இந்த வைத்தியம் உங்களின் நெஞ்சு வலியை விரட்டி அடித்து விடும்.

காரணம் என்ன..?
இவ்வளவு மகத்துவங்கள் இந்த சுக்கு பொடியில் உள்ளதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பீட்டா கெரோட்டின், ஜின்ஜெரோல், குர்குமின் போன்ற மூல பொருட்கள் தான் காரணம். அதனால் தான் பல ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.



Click it and Unblock the Notifications