Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
குண்டா இருப்பவங்க எல்லாருமே ஆரோக்கியமில்லை என நினைப்பது தவறு! ஏன் தெரியுமா?
உடல் பருமனாக இருப்பதால் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் என்பது தவறு என வெளிவந்த ஆய்வைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஆரோக்கிய வாழ்வுக்காகவும் நன்னடத்தைக்காகவும் ஆரோக்கிய பழக்கத்தை கையில் எடுத்து கொண்டவர்களை ஆதரிக்கும் விதமாக மனநல மருத்துவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் ஹெல்த் அட் எவ்ரி சைஸ் (Health at Every Size- HAES )
எடையை பற்றி கவலைப்படாமல், தகுந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் தான் இந்த இயக்கத்தின் குறிக்கோளாகும் . எடை குறைப்பு அல்லது அதிகரிப்பு, உடல் ஆரோக்கியத்தில் எந்த நேரடி விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.

HAES ஆய்வில், 30-45 வயது உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவை சேர்ந்தவர்கள் முறையான டயட் உணவு அட்டவணை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள பழக்கினர்.
மற்ற குழுவில் உள்ளவர்களை, உள்ளுணர்வுடன் ஆரோக்கியமான உணவுகளை உண்ண செய்து, அவர்களுக்கு பிடித்த உடல் செயல்பாடுகளை செய்ய சொல்லி வந்தனர். எடை குறைப்பில் அவர்கள் கவனம் இல்லை.
இரண்டு வருடத்திற்கு பிறகு 2வது குழுவில் இருந்தவரால் இரண்டு வருடமும் சீரான எடையை பராமரிக்க முடிந்தது. முதல் குழுவில் இருந்தவர்கள் முதல் 6 மாதத்தில் எடை குறைக்கப்பட்டு பின்பு இரண்டு வருடத்திற்குள் அவர்கள் சரியான எடையை மீட்டெடுத்தார்கள். இரண்டாவது குழுவில் உள்ளவர்கள் அவர்களின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்தனர்.
இதனால் இரத்த அழுத்தத்தின் அளவும் குறைந்தது. ஆனால் அவர்களால் அந்த குறைவை நிர்வகிக்க முடிந்தது. முதல் குழுவை சேர்ந்தவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இரத்த அழுத்தம் குறைந்தது. ஆனால் அவர்களால் அந்த குறைவை நிர்வகிக்க முடியவில்லை.
2 வது குழுவில் இருந்தவர்கள் எந்த ஒரு கடினமான உடல் செயல்பாட்டையும் எதிர்கொள்ள முடிந்தது . முதல் குழுவில் இருந்தவர்கள் உடற்பயிற்சி செய்தாலும், அவர்கள் சக்தியை நீட்டிக்க முடியவில்லை.
இந்த ஆய்வின் முடிவுகள் கூறுவது என்னெவென்றால், எடை குறைப்பில் கவனம் செலுத்துவதை விட, ஆரோக்கியம் மற்றும் நடத்தையில் கவனம் செலுத்துவதால் ஒட்டு மொத்த உடலும் ஆரோக்கியமாகும்.
உடல் அளவிற்கும் ஆரோக்கியத்திற்கும் சம்மந்தம் இல்லை . ஒல்லியான உடலை சமூகம் தான் வரவேற்கிறது, அறிவியல் அதனை ஆதரிப்பதில்லை. அதிக எடையுள்ள சிலர் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 60 வயதில் சரியான எடையோடு இருப்பவர்களின் வாழ் நாளை விட, அதிகமான எடை உள்ளவர்களின் வாழ் நாள் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடுகிறது தெற்கு கரோலினாவில் நடந்த ஒரு ஆய்வு.
பிஎம்ஐ (BMI ) என்பது அரசாங்க கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு கணக்கு. தசை வலிமை, எலும்பு அளவு , நீர்சத்தின் அளவு, இடுப்பின் அளவு போன்றவை இந்த கணக்கில் வராது.
உயரமும் எடையும் தான் உடல் எடையை தீர்மானிக்கும் என்பது ஒரு அர்த்தமற்ற முறை.
BMIல் ஏற்படும் மாற்றமும், எடையில் ஏற்படும் மாற்றமும் வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கனடாவின் பத்திரிகை ஒன்றில் கூறப்படுகிறது.
எடையையும் உணவு அட்டவணையையும் பற்றி கவலை படாமல் நல்ல பழக்கங்களை கொண்டு வாழ்ந்து வருவது ஆரோக்கியத்தை கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


