Latest Updates
-
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
உடல் எடையை குறைக்க உதவும் 6 அற்புத வைத்தியங்கள்
உடல் பருமனால் பல வியாதிகள் வருகின்றன. அவ்வாறு பாதிப்பை தரும் உடல் எடையை குறைக்க பல வைத்திய முறகள் ஆயுர்வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்பபோம்.
உடலை கட்டுக்க்கோபாக வைப்பது மறைந்து காலப்போக்கில் சிறு வயதிலிருந்தே உடல்
பருமனோடு வாழ தொடங்கி விட்டது இன்றைய சமூகம். காரணம் வாழ்க்கை முறையையும், உணவு முறையும் மாற்றப்பட்டதே காரணம்.

உடல் பருமன் பலவித நோய்களை தருகிறது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால் அக்கறையேயில்லாமல் இருந்து பிறகு வாழ் நாள் முழுவதும் நோய்களோடு கிடப்பதை விட்டு , உடல் எடை குறைக்க முயற்சிப்பது மிகம் முக்கியம்.
நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் ஆயுர்வேத மூலிகைகள் உடல் எடை குறைக்கச் செய்யும் வகையில் குணங்களை பெற்றுள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

நெல்லிக்காய் :
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

ஆமணக்கு ;
ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் :
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட் :
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

சோம்பு :
சோம்பு தண்ணீரில் போட்டு காய்ச்சி அடிக்கடி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

திரிபலா
திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.



Click it and Unblock the Notifications
