Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அஜீரணத்தை குணப்படுத்தும் வீராசனா- தினம் ஒரு யோகா
அஜீரணம் என்பது உண்ணப்படும் உணவு முழுவதும் செரிக்காமல் வயிற்றிலேயே இருக்கும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், பசியின்மை, வயிற்று வலி உண்டாகும். அஜீரணத்தால், வாந்தி, வயிற்றுப் போக்கும் கூட ஏற்படும்.
காரணம் :
பொதுவாக குளிர்காலங்களில் ஜீரண சக்தி குறைந்து காணப்படும். காரணம் உடல் வெப்பம் குறைந்து காணப்படும். இதனால் என்சைம்களின் சுரப்பும் குறைந்திருக்கும். எனவேதான் ஜீரணத் தன்மையும் குறைவாக இருக்கும்.
அந்த சமயங்களில் அதிக கொழுப்பு, எண்ணெய் வகைகளை சாப்பிட்டால் அஜீரணம் எற்படும். அது தவிர்த்து, அல்சர், இரைப்பை கற்கள், இரைப்பையில் பிரச்சனைகள் ஆகியவற்றாலும் அஜீரணம் உண்டாகும்.
அஜீரணம் ஏற்படாமல் இருக்கவும், பசியை தூண்டவும் யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் வீராசனா. கதா நாயகன் தோற்றம் என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. எப்படி இந்த ஆசனத்தை செய்வது என்று பார்க்கலாம்.

வீராசானம் :
முதலில் ஒரு விரிப்பில் முட்டிபோட்டு அமருங்கள். இரண்டு கால்களும் ஒட்டியபடி முட்டி போட்டு இருக்க வேண்டும். பாதத்தின் மீது அமருங்கள்.
மேல் பாதம் முழுவதும் தரையோடு ஒட்டியிருக்க வேண்டும். உள்பாதத்தின் மீது நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும். உடலை நேராக வைத்திருங்கள்.
முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு உள்ளிழுத்தபடி மூச்சை ஆழ்ந்து இழுத்து விட வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருங்கள்.
இந்த ஆசனத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் செய்யலாம். இதனை செய்யும்போது, வயிறு காலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
பலன்கள் :
ஜீரணத்தை அதிகப்படுத்தும், ஆஸ்த்மா, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மூட்டு பாதிப்பு இருப்பவர்கள், இதய பாதிப்பு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


