Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
உடல் எடை குறைப்புக்கான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது எப்படி...?
உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு தோதாக ஒரு உணவு பழக்கத்தையும் வடிவமைத்துள்ளீர்களா? உடல் எடை குறைப்புக்கான இலக்கு என்று குறைந்தது ஒரு முயற்சியையாவது தொடங்கியுள்ளீர்களே; கேட்க நன்றாக உள்ளது! ஆனால் ஆரம்பிப்பது மட்டும் பத்தாது. உடல் எடை குறைப்புக்கான திட்டம் என்பது அதை விட ஆழமானது.
வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்!
மெதுவாக ஆரம்பித்து, பின் உங்கள் இலக்கை அடைய மன உறுதியுடன் இருங்கள். ஆம், அதை கடைப்பிடிப்பது என்பது கடினமான ஒன்று தான். ஆனால் ஒரு முறை அதனை ஒழுங்காக கடைப்பிடிக்க தொடங்கி விட்டீர்கள் என்றால், பின் எந்த பிரச்சனையும் இருக்காது. சின்னதொரு அமைப்பை செயல்படுத்தினால் போதும், இதனை சுலபமாக கடைப்பிடிக்கலாம்.
சரி, உங்கள் டயட் திட்டத்தை கடைப்பிடிப்பதற்கான சில வழிகளை இப்போது பார்க்கலாமா?

ஊக்கமளிக்கும் பேச்சு
உங்களுக்கு ஊக்கமளிக்க வெளியில் இருந்து யாரும் குருநாதர் தேவையில்லை. உங்களுக்கு நீங்களே ஏன் ஊக்கமளிக்க கூடாது? உங்களை பற்றி உங்களுக்கு பிடித்த அனைத்தையும், மாற வேண்டிய அனைத்தையும், உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள் அல்லது ஒரு பேப்பரில் எழுதுங்கள். உங்கள் குறிக்கோள்கள் எழுதுங்கள். இல்லையென்றால் அதனை உரக்க கூறுங்கள். நேர்மறையான வார்த்தைகளால் உங்களை நீங்களே ஊக்கமளியுங்கள். கேட்பதற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் கூட, நாளடைவில் இது நல்ல பயனை அளிக்கும்.

வலைதளங்களின் உதவி
பல சமுதாய வலைத்தளங்களில், உடல் எடை குறைப்புக்கான சமுதாயங்கள் உள்ளது. இந்த அனைத்து தளங்களிலும் ஒரே பிரச்சனையைப் பற்றி தான் அலசுகிறார்கள். அது ஊக்கமளிக்கும் வகையில் கூட சில நேரம் இருப்பதில்லை. அவர்களின் உதவியையும் நீங்கள் நாடிடலாம். உங்கள் பிரச்சனைகளை பேசுங்கள், அவர்களின் பிரச்சனைகளையும் கேளுங்கள். அவர்களும் நீங்களும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால், இணையதளம் மூலம் அறிமுகமாகும் இவ்வகை நண்பர்களால் ஒருவருக்கு ஒருவர் ஊக்கமளித்து நன்மையை பெறலாம். சின்ன சின்ன சாதனைகளை கூட அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ஊக்கம் உங்களை இன்னும் சாதிக்க வைக்கும்.

உங்கள் சாதனைகளை நீங்களே பாராட்டுங்கள்
உங்கள் சாதனைகளை நீங்களே பாராட்டுவது எப்போதும் நல்லது. அது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தியே வைக்கும். நீங்கள் விதித்த அந்த இலக்கை அடைந்து விட்டீர்கள் என்றால், அந்த சாதனை தேதியை பொன்னால் பொறிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? உங்கள் இலக்கை அடையும் போதெல்லாம், உங்கள் முதுகில் நீங்களே தட்டி கொடுத்து, உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள்.

சின்ன சின்ன சவால்கள்
சவால்கள் நிறைந்த இந்த உலகை நாம் வெல்ல வேண்டாமா? நீங்கள் உடல் எடை குறைப்புக்கான இலக்கை நோக்கி பயணிக்கும் அதே பாதையில் வேறு யாராவதும் பயணிப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து ஏன் ஒரு சவாலை ஏற்றுக் கொள்ளக் கூடாது? ஒரு வாரத்திற்கான டயட் திட்டத்தில் ஒருவருக்கொருவர் சவாலிட்டு கொள்ளலாம். இதனால் எப்போதும் பிரகாசத்துடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள்.

உங்கள் செல்லப்பிராணிகளே உங்கள் துணை
உங்கள் செல்லப்பிராணிகளை நடை கொடுக்க அழைத்து சென்றால் அது உங்களை கண்டிப்பாக ஊக்கமளிக்கும். செல்லப்பிராணிகள் சவாலானவர்கள். அவர்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியை தொடங்கி விட்டால், நீங்கள் உடற்பயிற்சி செய்ய தானாகவே ஊக்கமளிக்கப்படுவீர்கள். அதனால் உங்களுக்கு ஊக்கமளிப்பதில் சிறந்த துணையாக உங்கள் செல்லப்பிராணிகள் விளங்கும்.

சொந்த பந்தங்களின் வருகையும் நன்மையை தரும்
நீங்கள் உடல் எடை குறைப்புக்கான டயட் திட்டத்தை கடைப்பிடிப்பதை போலவே உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் யாரேனும் அதை கடைப்பிடிக்கலாம் அல்லவா? அவர்களை வாரம் ஒரு முறை உங்கள் வீட்டிற்கு அழைத்து தற்போதைய முன்னேற்றத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நிலையையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். இப்படி வாரம் ஒரு முறை அவர்களை வர வைப்பதால், நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

உங்கள் இலக்கை பதிவு செய்யுங்கள்
உங்கள் இலக்குகள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள். அதனை ஏன் அடைய முடியவில்லை, உங்கள் பலவீனம் என்ன, எப்படி அதனை சாதித்தீர்கள், நல்லது கெட்டது என அனைத்தையும் எழுதுங்கள். அப்படி அதனை ஒரு பதிவாக எழுதும் போது, அது உங்களுக்கு ஊக்கமளித்து கடினமான உங்கள் இலக்கை அடைய உதவும்.



Click it and Unblock the Notifications
