For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

By Maha
|

Beer
இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே மூட்டு வலி, இடுப்பு வலி என்று வந்துவிடுகிறது. இதற்கு பெரும்பாலும் எத்தனால், சிலிகான் போன்ற சத்துக்கள் உடலில் குறைவாக இருப்பதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது உள்ள இளைஞர்கள் ஆல்கஹைலை அதிகம் அருந்துகின்றனர். அதிலும் பீர் தான் அனைவராலும் அதிகம் அருந்தப்படுகிறது.

மேலும் மதுபானத்தை மருந்து போல் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஜொனாத்தன் போவெல் தலைமையில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பிரிவினர் எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், எலும்புகளுக்கு தேவையான எத்தனால், சிலிகான் போன்றவை பீரில் அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அருந்துவதால் பெண்களுக்கு வயதான காலத்தில் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் இருந்து விடுபடலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள், பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்டால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவதை கேட்டு இருப்போம். ஏனெனில் அவைகளில் எத்தனால் மற்றும் சிலிகான் இருப்பதே ஆகும் என்றும் கூறுகின்றனர். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு பாதிக்கப்படும். அதனால் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருப்பதே ஆகும்.

இந்த சமயங்களில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். அதிலும் பெண்கள் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் அளவு சிலிகான் உடலுக்கு மிகவும் அவசியமாகிறது. இது பீரில் அதிகமாக கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.

மேலும் உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகானை விட பலமடங்கு அதிகமாக பீரில் கிடைக்கிறது என்றும் சொல்கின்றனர். சொல்லப் போனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

beer good for the bones | பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

beer contains high amounts of silicon, a nutrient that helps strengthen bones, research finds. Beer contains a nutrient that can strengthen bone. In moderation, beer can contribute to a healthy diet. Wine isn't the only alcoholic beverage that does our bodies some good.
Desktop Bottom Promotion