Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
சர்க்கரை நோய் இருக்கா? அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க...
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளைத் தள்ளி வைப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கவும், எதிர்கால சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கவும் உதவும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. எல்லோரும் நல்ல ஆரோக்கியத்திற்கான உரிமையை உணர்ந்து கொள்வதை உறுதி செய்வதே இந்நாளின் நோக்கமாகும். தற்போது நாம் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோயைப் பற்றி பேசலாம். இது இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் மிகவும் பொதுவானது.

நீரிழிவு என்னும் சர்க்கரை நோயானது, இரத்த குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலை. கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் கூட இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆனால் சர்க்கரை நோய் இருப்பதால், ஒருவர் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பதன் மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்கலாம் மற்றும் இது இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். சரிபார்க்கப்படாத சர்க்கரை நோய் பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலான உணவுகளை உண்ணலாம். ஆனால் அவர்கள் மிகச்சிறிய அளவிலேயே சாப்பிட வேண்டியிருக்கும்.
மேலும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளைத் தள்ளி வைப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கவும், எதிர்கால சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கவும் உதவும். இப்போது சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளின் பட்டியலைக் காண்போம்.

பழச்சாறுகள்
பழங்கள் எந்த அளவிற்கு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதோ, அதே அளவில் பழச்சாறுகள் மோசமான விளைவை ஏற்படுத்தும். பழச்சாறுகளில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் ஃபுருக்டோஸ் அதிகமாக நிறைந்திருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைக் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு உணவுகள்
வெள்ளை பிரட், வெள்ளை அரிசி, பாஸ்தா, பேக்கரி உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்கள் போன்ற உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இம்மாதிரியான உணவுகளை சர்க்கரை நோயாளிகள் அறவே தொடக்கூடாது. இவற்றில் உயர் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் மூளை செயல்பாட்டைக் குறைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மிகச்சரியாக கூற வேண்டுமானால், நார்ச்சத்து தான் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதைக் குறைக்க தேவைப்படும். சுத்திகரிக்கப்பட்ட மாவில் மிகக்குறைவான அளவிலேயே நார்ச்சத்து உள்ளது.

சுவையான யோகர்ட்
சுவைமிக்க யோகர்ட்டுகள் புரோபயோடிக்குகளின் சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் நினைக்கும் அளவில் அவை ஆரோக்கியமானவை அல்ல. தற்போது கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான யோகர்ட்டுகள் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அதிக சர்க்கரையையும் கொண்டுள்ளன. எனவே சர்க்கரை நிறைந்த இம்மாதிரியான யோகர்ட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சுவைத்துப் பார்க்கக்கூட ஆசைப்படக்கூடாது.

வறுத்த உணவுகள்
நன்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட ஃபிரெஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும். இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவை தூண்டிவிட்டு, உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். எனவே எக்காரணம் கொண்டும் எண்ணெயில் பொரித்தெரிக்கும் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

முழு கொழுப்பு நிறைந்த பால்
பால் ஒரு முழுமையான உணவாகும். ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நிறைந்த பால் குடிப்பதில் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முழு கொழுப்பு நிறைந்த பாலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருப்பதால், அவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் நிறைவுற்ற கொழுப்புக்கள் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும். அதற்கு பதிலாக, கொழுப்பு குறைவான பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிக்கலாம்.

குறிப்பு
சர்க்கரை நோய் இருக்கும் போது, உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது என்பது சில சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அதற்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்டால், எளிதில் தவிர்க்கலாம். ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள், பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ள பிற உணவுகள் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்தால், நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.



Click it and Unblock the Notifications