Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா?
சர்க்கரை நோய் ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் குறுக்கிடும், அப்படி இது பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான விஷயம் தாம்பாத்யம் ஆகும்.
மனிதர்களுக்கு வரும் மிகவும் முக்கியமான மற்றும் ஆபத்தான நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி ஆகும். இதில் துரதிர்ஷ்டவசமான செய்தி என்னவென்றால் உலகில் அதிகளவு மக்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை வியாதி வந்துவிட்டால் ஒருவர் சாதாரண வாழ்க்கையை வாழவே முடியாது.

சர்க்கரை நோய் ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் குறுக்கிடும், அப்படி இது பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான விஷயம் தாம்பாத்யம் ஆகும். சர்க்கரை நோய் ஒருவரின் தாம்பத்யத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எப்படி தங்களின் தாம்பத்ய வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

உடலுறவுக்கு முன் உங்கள் சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளுங்கள்
உடலுறவு இன்சுலின் போல செயல்படலாம், இது உங்கள் இரத்த சர்க்கரையை குறைக்கிறது, எனவே உடலுறவுக்கு முன் உங்கள் இரத்த சர்க்கரையை சோதனை செய்து கொள்வது நல்லது. உங்கள் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் உங்கள் இன்சுலின் அளவை சரிசெய்ய வேண்டும், உடலுறவுக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஏதாவது சாப்பிட வேண்டும். இது உங்களை ஹைப்போகிளைசெமிக் நிலைக்கு செல்வதைத் தவிர்க்கும்.

மது அருந்துதல்
மது அருந்திய பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மது மற்றும் உடலுறவு இரண்டும் இரத்தத்தின் சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும். எனவே இரண்டையும் இணைப்பது இரத்த சர்க்கரையின் அளவில் ஆபத்தான வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே மது அருந்திவிட்டு தாம்பத்யத்தில் ஈடுபடும் போது உங்கள் குளுக்கோஸ் அளவை கவனியுங்கள்.

நரம்புக் கோளாறுகள்
இது மிகவும் அரிதானது சர்க்கரை நோய் சில சமயம் நரம்புக் கோளாறுகள் மற்றும் பிறப்புறுப்பில் உணர்திறன் இழப்பு போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும். சரியான இடங்களில் கூடுதல் மென்மையான தொடுதலுடன் இதை ஈடுசெய்யலாம்.

உடற்பயிற்சிகள்
உங்களை உடற்பயிற்சி செய்ய தூண்டுவதற்கு இந்த ஒரு காரணம் போதும். ஏனெனில் இது உங்கள் பாலியல் செயல்திறனை தூண்டும். உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது பிறப்புறுப்பின் செயல்பாடு மற்றும் உணர்திறனை மேம்படுத்தும். குறைவான உடலுறவு கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வழக்கமான உடற்பயிற்சியால் பயனடைவார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிறப்புறுப்பு பிரச்சினைகள்
உங்கள் பிறப்புறுப்பை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். உயர் இரத்த சர்க்கரை பாக்டீரியாவை தடுக்கும் உங்கள் உடலின் திறனை குறைக்கிறது. இதனால் உங்கள் பிறப்புறுப்பை சுற்றி தொற்றுநோய்கள் ஏற்படலாம். நீங்கள் உடலுறவின் போது வலியை உணர்ந்தால் (குறிப்பாக பெண்களுக்கு), இரத்த சிறுநீர் இருந்தால், நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரியும் உணர்வை அனுபவித்தால், அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். உடலுறவுக்கு முன்னும் பின்னும் (30 நிமிடங்களுக்குள்) சிறுநீர் கழிப்பது நல்லது. இது சிறுநீர்ப்பை தொற்றுநோய்களைத் தடுக்க உதவும்.

இயற்கை முறையில் இயலாமையை குணப்படுத்துங்கள்
பொதுவாக சர்க்கரை நோய் இருக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சினையில் இருக்கலாம். இதனை சரி செய்ய இயற்கையான சிகிச்சை முறையை கையாளவும். சில இயற்கை மூலிகைகள் இந்த பிரச்சினையை சரி செய்யும். ஆனால் அதனை செய்யும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது, ஏனெனில் இவை உங்களின் மற்ற மருந்துகளின் விளைவுகளில் தலையிடும்.

ஈஸ்ட் தொற்று
சர்க்கரை நோய் இருக்கும் பெண்களுக்கு அதிகளவு பிறப்புறுப்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறப்புறுப்பை சுற்றி அதிக குளுக்கோஸ் அளவு, ஈரப்பதம் மற்றும் வெப்பம், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாதவிடாய் நின்ற வயதான பெண்கள் ஈஸ்ட்ரோஜன் வீழ்ச்சியால் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள், தவறாமல் குளிக்கவும், யோனி பகுதியை வறட்சியாக வைத்துக்கொள்ளவும்.



Click it and Unblock the Notifications