Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் இந்த 6 உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு எதிரியாம்!
மிதமான அளவில் பழங்கள் உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு நல்லது என்றாலும், பழச்சாறுகளை உட்கொள்ளும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உலர்ந்த பழங்களைப் போலவே, பழச்சாறுகளிலும் அதிக அளவு பழ சர்க்கரை உள்ளது
இன்றைய நாளில் சர்க்கரை நோய் இல்லாத குடும்பங்களே இல்லை என்ற அளவிற்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமோ? என்ற அச்சம் எல்லோருக்குள்ளும் உள்ளது. சர்க்கரை நோய் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் ஆபத்து போன்ற பல்வேறு உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். உடல் பருமன், பரம்பரை வரலாறு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உங்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், நீங்கள் தினமும் சர்க்கரை உட்கொள்ளும் அளவைச் சரிபார்க்க வேண்டும்.

பலர் சர்க்கரை நோய்க்கு சர்க்கரையை காரணம் காட்டி, அவர்கள் வழக்கமாக உட்கொள்ளும் மற்ற நீரிழிவுக்கு சாதகமான உணவுகளைக் கூட புறக்கணிக்கிறார்கள். சர்க்கரை மட்டுமல்ல, உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பல உணவுப் பொருட்கள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் சர்க்கரை நிறைந்த உணவுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தொகுக்கப்பட்ட தின்பண்டங்கள்
உப்புச் சுவை இல்லாத பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் உண்மையில் நீரிழிவு நோயின் முக்கிய காரணமாகும். அவை சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன மற்றும் உடலில் இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துகின்றன. அந்த பாக்கெட்டுகளில் உள்ள கார்போஹைட்ரேட் உள்ளடக்கத்தை எப்போதும் நீங்கள் படிக்க வேண்டும். ஆனால் சில சிற்றுண்டிகளில் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக கார்போஹைட்ரேட்டுகள் இருக்கக்கூடும் என்பதில் கவனமாக இருங்கள். உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், அதற்கு பதிலாக ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுங்கள்.

உலர்ந்த பழங்கள்
பழங்களில் ஏற்கனவே அதிக சர்க்கரை உள்ளது. உலர்ந்த பழங்களில் அதிக செறிவூட்டப்பட்ட சர்க்கரை உள்ளது. மேலும், பழங்களின் உலர்ந்த வடிவங்களில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதைக் காட்டலாம். உலர்ந்த திராட்சையில் 115 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது அதே அளவு திராட்சையை விட அதிகமாக இருக்கும். நீங்கள் உலர்ந்த பழங்களை விரும்பி இருந்தால் அல்லது உலர்ந்த பழங்கள் மட்டுமே உங்களின் பழ நுகர்வு ஆதாரமாக இருந்தால், குறைந்த சர்க்கரை கொண்ட பழங்களைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள்.

மது பானங்கள்
மதுபானங்களில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதனால்தான் நீரிழிவு நோயாளிகள் பீர் மற்றும் ஒயின் அருந்துவதைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், இது பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். மது அருந்துவதில் மற்றொரு குறைபாடு உள்ளது. அதிகப்படியான குடிப்பழக்கம் பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவதை தவிர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

பழச்சாறு
மிதமான அளவில் பழங்கள் உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு நல்லது என்றாலும், பழச்சாறுகளை உட்கொள்ளும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உலர்ந்த பழங்களைப் போலவே, பழச்சாறுகளிலும் அதிக அளவு பழ சர்க்கரை உள்ளது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. பழச்சாறுகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருந்தாலும், அதிக அளவு சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு சரியாக இருக்காது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளை அளிக்கும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் பழங்களை கொடுங்கள்.

வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகளில் அதிக கலோரிகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குழப்பமடையச் செய்யலாம். இந்த உணவுகள் ஆரம்பத்தில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன மற்றும் கொழுப்புகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. கொழுப்பு மட்டுமல்ல, அவை டிரான்ஸ் கொழுப்புகளால் நிறைந்துள்ளன, அவை மற்ற நோய்களுக்கும் தூண்டுகின்றன. ஆதலால், வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
மைதா, வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் எல்லா வகையிலும் மற்றும் விலையிலும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த உணவுகளில் நார்ச்சத்து குறைவாக உள்ளது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இவற்றில் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான மாற்றுகளைத் தேர்வு செய்யவும். முழு தானிய உணவுகள் மற்றும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications